06-20-2003, 07:34 PM
எந்த நடிகை என்றாலும் எவரைத்தானும் திருமணம் செய்தால்தான் என்ன? செய்யாவிட்டால்தான் என்ன? அது அவர்களுடைய தனிப்பட்ட விடயம். எங்களுக்குத் தேவை பொழுதுபோக்கும் சாதனங்களில் ஒன்றாக சினிமா! அவ்வளவுதான்
இன்னொரு விடயம் சினிமா முற்று முழுதாக தீமையே புரியவில்லை
இந்த சினிமாவால்தன் எங்களுக்கு இந்தியக் கலாசாரம் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறைகள் போன்ற பல விடயங்கள் தெரிய வந்தன
அத்துடன் அது தமிழை அழிவில் இருந்து ஓரளவாவது காக்கிறது எனலாம் உதாரணமாக என்னுடன் தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய மாநில மாணவர்களும் படிக்கின்றனர் ஆனால் தமிழ்நாட்டவரைத் தவிர மற்றயோர் ஹிந்தி சினிமாவிற்கு அடிமையானதை நான் நேரில் கண்டிருக்கிறேன் அந்தவகையில் தமிழ் சினிமா தமிழை ஏதோ ஒரு வகையில் வாழவைக்கிறது இந்தியாவிலே பொலிவூட்டுக்கு இணையாக இருப்பது இந்த கொலிவூட்தான் (கோடாம்பாக்கம்)
ஹிந்திப்பாடல்களை இனிய இசைக்காக எம்மவர் கேட்டது அந்தக்காலம் ஆனால் இப்பொழுது தமிழ்ப்பாடல்கள் இந்தியா முழுவதும் கேக்கிறது!
தமிழ் இசையமைப்பாளர்கள் ஹிந்தியிலும் கொடிகட்டிப் பறக்கின்றனர்
ஆனால் இந்த சினிமா தற்பொழுது வியாபார நோக்கத்தில் பெரிதும் கவனம் செலுத்துவதால் ஆங்கில மொழி மற்றும் கலாசாரக் கலப்புகள் அதிகம் நிகழ்கின்றன. சினிமாக்காரரும் பணத்திற்காக இவற்றை பெரிதும் கவனத்தில் எடுப்பதில்லை
இதைக்காட்டி முற்றுமுழுதாக சினிமாவை எதிர்ப்பது நியாயமானது அல்ல....அன்னம்போல் அவற்றிலிருக்கும் தீயதைத் தவிர்த்து நல்லதை எடுத்துக்கொள்ளலாம்
சரி மீனா யாரைத் திருமணம் செய்தால் என்ன? போனால் என்ன?.....சினிமாவில் மீனாவின் நடிப்பை மட்டும் பாருங்கள் மீனாவை அல்ல!