03-28-2005, 11:37 AM
வவுனியா தாக்குதல் பாரதூரமான விடயமாகும்: நேரில் பார்வையிட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன்
வவுனியாவில் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல் துறை அலுவலகத்தை நீதிபதி எம்.இளஞ்செழியன் நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதிகளும் பொலிசாரும் சென்றனர்.
இந்தத் தாக்குதல் பாராதூரமான விடயமாகும் என்றும் அரசியல் பணிகளுக்காக பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் மாவட்ட அலுவலகத்தை நடத்தி வருகின்றவர்கள் மீது நடத்தப்பட்டுள்ள விடயம் குறித்து பொலிசார் துரிதமான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதி அப்போது கேட்டுக்கொண்டார்.
காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுடைய வாக்குமூலங்களையும் நீதிபதி தலைமையிலான குழுவினர் பெற்றனர்.

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]