Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விடுதலைப்புலிகளின் அரசியல் துறை அலுவலகம் மீது குண்டு வீச்;சு
#1
வவுனியா: விடுதலைப்புலிகளின் அரசியல் துறை அலுவலகம் மீது குண்டு வீச்;சு-மூவர் படுகாயம்!

வவுனியாவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவட்ட அரசியல் துறை அலுவலகம் மீது இன்று அதிகாலை 5.50 மணியளவில் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

தொடரூந்து நிலைய வீதி வைரவபுளியங்குளத்தில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது.

இன்று காலை நடத்தப்பட்ட இத்தாக்குதலில் அரசியல் துறை பணிமனையின் பணியாளர்களான தாமரை செல்வன் நவாஸ் என்ற இருவரும் காயமடைந்துள்ளனர்.

அத்துடன் அருகில் உள்ள வடக்கு கிழக்கு மாகாண புடவை திணைக்களம் ஒன்றின் காவலாளியான தனபாலன் என்பவரும் காயமடைந்துள்ளார். இவர் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்;சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீதியின் அருகில் உள்ள மரத்தின் கீழ் நின்று மிதிவண்டியில் வந்த கும்பல் ஒன்று கைக்குண்டுகளை எறிந்துவிட்டு தப்பியோடியதாக பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு நடுப்பகுதியிலும் இதே அரசியல் துறை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது முறையாக இன்றையத் தாக்குதல் நடந்துள்ளது.

இந்த கைக்குண்டுத் தாக்குதல் குறித்து பொலிசார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.





சுட்டபழம்
நன்றி புதினம்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply


Messages In This Thread
விடுதலைப்புலிகளின் அரசியல் துறை அலுவலகம் மீது குண்டு வீச்;சு - by வியாசன் - 03-28-2005, 11:36 AM
[No subject] - by வியாசன் - 03-28-2005, 11:37 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)