06-10-2003, 12:14 AM
[size=18]இலக்கியா எழுதியது
தொகுதி 2
தொகுதி 3
Quote:ஒலிப்பில் மயக்கும் விளைவிக்கும் எழுத்துக்களை மூன்று தொகுதிகளில் அடக்கலாம்.
1. ணகர, நகர, னகர
2. லகர, ழகர, ளகர
3. டகர, ரகர, றகர
இவை தோன்றும் இடம் கருதி வௌ;வேறு ஒலிகளை உடையன. இதைப் பற்றிய தெளிவு ஏற்பட்டால் இவற்றால் ஏற்படக் கூடிய மயக்கத்தை நாம் தவிர்க்கலாம்.
[quote]ண கரம் நாநூனி உள்வளைந்து அடிப்பகுதியால் அண்ணத்தைத் தொட்ட வழி பிறப்பது
நகரம் நாநூனி முன் அண்ணத்தை, அதாவது மேல்வாய்ப் பல்லின் அடியைத் தொடுவதால் பிறப்பது
னகரம் நாநூனி அண்ணத்தை ஒற்றுவதால், அதாவது மிகப் பொருந்துவதால் பிறப்பது.
தொகுதி 2
Quote:இத்தொகுதியிலுள்ள மூன்று எழுத்துகளும் இடையினத்தைச் சேர்ந்தவை. இவற்றுள் ல, ள இரண்டும் மூச்சை நாவாற் பிரித்து வெளிப்படுத்தப் பிறப்பவை. ழகரம் நாவின் பல சிறு அசைவுகளாற் பிறப்பது.
ல கரம் நாவிளிம்பு வீங்கி, முன் அண்ணத்தை, அதாவது மேல் வாய்ப்பல்லினது அடியை ஒற்றுவதாற் பிறப்பது.
ள கரம் நாவிளிம்பு வீங்கி, அண்ணத்தை வருடுவதாற் பிறப்பது.
ழ கரம் நாநூனி உள்வளைந்து, அண்ணத்தை வருடுவதாற் பிறப்பது.
ழகரம் தமிழுக்குள் சிறப்பான ஒலியாகும்.
மேலும் தொடரும்.......
தொகுதி 3
Quote:[quote]ட கரம் வாய்வழியே நேரே மூச்சு வெளிப்படப் பிறப்பது. ர கரமும், ற கரமும் நாவின் சிறு அசைவுகளுடன் மூச்சு வெளிப்படப் பிறப்பது.
ட கரம் நாநூனி வளைந்து அண்ணத்தைப் பொருந்துவதாற் பிறப்பது.
ர கரம் நாநூனி அண்ணத்தை வருடுவதாற் பிறப்பது.
ற கரம் நாநூனி அண்ணத்தை ஒற்றுவதாற் பிறப்பது.
ற கரம் தமிழ் மொழிக்குச் சிறப்பான ஒலி ஆகும்.
இந்தப் பகுதி இத்துடன் முடிகிறது.
பதவியல் பகுதிக்குப் போகலாம் என நினைக்கிறேன்.........
Nadpudan
Chandravathanaa
Chandravathanaa

