![]() |
|
தமிழ் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழும் நயமும் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=22) +--- Thread: தமிழ் (/showthread.php?tid=8389) |
தமிழ் - Chandravathanaa - 06-09-2003 உயிர் எழுத்துக்கள் - 12 ஆயுத எழுத்து - 1 மெய் எழுத்துக்கள் - 18 உயிர்மெய்எழுத்துக்கள் - 12 x 18 = 216 தமிழ் எழுத்துக்கள் வல்லினம்;; க ச ட த ப ற வல்லெழுத்துக்கள்;; க் ச் ட் த் ப் ற்; இவை வன்கணம் எனவும் சொல்லப் படுகின்றன. மெல்லினம் ங ஞ ண ந ம ன மெல்லெழுத்துக்கள் ங் ஞ் ண் ந் ம் ன் இவை மென்கணம் எனவும் சொல்லப் படுகின்றன. இடையினம்; ய ர ல வ ள ழ இடைக்கணம்; ய் ர் ல் வ் ள் ழ் இவை இடையெழுத்துக்கள் எனவும் சொல்லப் படுகின்றன.. - Chandravathanaa - 06-09-2003 வல்லினம் க் ச் ட் த் ப் ற்; இவை ஆறும் வலிய ஓசை உடையவை. அதனால் வல்லினம். மெல்லினம் ங் ஞ் ண் ந் ம் ன் இவை ஆறும் மெல்லிய ஓசை கொண்டவை. அதனால் மெல்லினம். இடையினம் ய் H ல் வ் ழ் ள் இவை ஆறும் இடைத்தர ஓசை கொண்டவை. அதனால் இடையினம். - Chandravathanaa - 06-10-2003 <span style='font-size:25pt;line-height:100%'>மணிதாசன் எழுதியது</span> <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->வல்லினம் க் சக அ சமன் ஜளணைநசிறீ18ஸகஜஃளணைநஸ ச் சக அ ட் சக அ த் சக அ ப் சக அ ற்; சக அ இவை ஆறும் வலிய ஓசை உடையவை. அதனால் வல்லினம். மெல்லினம் ங் ஞ் ண் ந் ம் ன் இவை ஆறும் மெல்லிய ஓசை கொண்டவை. அதனால் மெல்லினம். இடையினம் ய் H ல் வ் ழ் ள் இவை ஆறும் இடைத்தர ஓசை கொண்டவை. அதனால் இடையினம்.ஜகயஉநசிறீயுசயைடஸ<!--QuoteEnd--><!--QuoteEEnd--> - Chandravathanaa - 06-10-2003 மணிதாசன் எழுதியது <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->க் சக அ சமன் க வாக வந்ததுபோல வல்லின மெல்லின இடையின எழுத்துகள் அனைத்தும் உயிரும் மெய்யும் சேர்ந்து உயிர்மெய் எழுத்துகளாகின்றன..உயிர் மெய் எழுத்துகள் 216 வல்லின எழுத்துகளின் ஒலி வயிற்றிலிருந்தும் மெல்லின எழுத்;துகளின் ஒலி மூக்கிலிருந்தும் இடையின எழுத்துகளின் ஒலி மார்பிலிருந்தும் பிறக்கிறது. இவ்வெழுத்துகளை உச்சரிக்கும் போது இப்பேதங்களை உணர்ந்து கொள்ளலாம். அ...குறில் இதன் ஒலி கண்சிமிட்டும் நேரம் அல்லது விரல் சொடுக்கும் நேரம் ஆ...நெடில் இதன் ஒலி. குறிலை விட இரட்டிப்பு நேரமாகிறது. ஒலியின் அலகை மாத்திரை என சொல்வோம்...இன்னூம் வளரும் <!--QuoteEnd--><!--QuoteEEnd--> - Chandravathanaa - 06-10-2003 [size=18]இலக்கியா எழுதியது Quote:ஒலிப்பில் மயக்கும் விளைவிக்கும் எழுத்துக்களை மூன்று தொகுதிகளில் அடக்கலாம். தொகுதி 2 Quote:இத்தொகுதியிலுள்ள மூன்று எழுத்துகளும் இடையினத்தைச் சேர்ந்தவை. இவற்றுள் ல, ள இரண்டும் மூச்சை நாவாற் பிரித்து வெளிப்படுத்தப் பிறப்பவை. ழகரம் நாவின் பல சிறு அசைவுகளாற் பிறப்பது. தொகுதி 3 Quote:[quote]ட கரம் வாய்வழியே நேரே மூச்சு வெளிப்படப் பிறப்பது. ர கரமும், ற கரமும் நாவின் சிறு அசைவுகளுடன் மூச்சு வெளிப்படப் பிறப்பது. - Chandravathanaa - 07-05-2003 <span style='font-size:25pt;line-height:100%'>வேற்றுமை</span> வேற்றுமைகள் எட்டு வகைப்படும். அவையாவன 1ம் - உருபு இல்லை. 2ம் - ஐ 3ம் - ஆல், ஓடு, உடன் 4ம் - கு 5ம் - இல், நின்று, இருந்து 6ம் - அது, உடைய 7ம் - கண், இல், இடம் 8ம் - உருபு இல்லை. 1ம் வேற்றுமைக்கும் 8ம் வேற்றுமைக்கும் உருபுகள் இல்லை. 1ம் வேற்றுமை பெயராக வரும். - Chandravathanaa - 07-05-2003 [size=18]வேற்றுமை உருபுகள் ....... உதாரணம் 1ம் வேற்றுமை ................... யானை வந்தது.( பெயர் -யானை) 2ம் வேற்றுமை .................... யானை யை 3ம் வேற்றுமை ................... யானை யால் யானை யோடு யானை யுடன் 4ம் வேற்றுமை ................... யானைக் கு 5ம் வேற்றுமை .................... யானை யில் குளக்கரையி னின்று குளக்கரையி லிருந்து 6ம் வேற்றுமை .................... இது யானையி னது இது யானை யுடைய 7ம் வேற்றுமை .................... பாகனின் கை யில் பாக னிடம் காட்டின் கண் 8ம் வேற்றுமை .................... ஏய்..! யானை..! ) - sOliyAn - 07-05-2003 1ம் வேற்றுமையை எழுவாய் என்று கூறலாம்தானே?! - Manithaasan - 07-15-2003 ஆம். எழுவாய் என்பது சரியானதே - Chandravathanaa - 07-28-2003 நன்றி என்ற சொல்லுக்கு இலக்கணப்படி கள் சேராது. நன்றி என்பது சரி. நன்றி என்பது தவறு. - phozhil - 02-06-2004 ஈங்கு கானும் உரையும் தொல்காப்பியம் பகரும் முறைமையும் சிறிது வேறுபடுகின்றதே? எதை எடுத்தாள்வதோ? எழுத்துக்களின் பிறப்பியல் குறித்து தொல்காப்பியம் உரைப்பது, உந்தி முதலா முந்து வளி தோன்றி தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உளப்பட எண் முறை நிலையான் உறுப்பு உற்று அமைய நெறிப்பட நாடி எல்லா எழுத்தும் சொல்லும் காலை பிறப்பின் ஆக்கம் வேறு வேறு இயல திறப்படத் தெரியும் காட்சியான. 1 அவ் வழி, பன்னீர் உயிரும் தம் நிலை திரியா மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும். 2 அவற்றுள், அ ஆ ஆயிரண்டு அங்காந்து இயலும். 3 இ ஈ எ ஏ ஐ என இசைக்கும் அப் பால் ஐந்தும் அவற்று ஓரன்ன அவைதாம், அண்பல் முதல் நா விளிம்பு உறல் உடைய. 4 உ ஊ ஒ ஓ ஔ என இசைக்கும் அப் பால் ஐந்தும் இதழ் குவிந்து இயலும். 5 தம்தம் திரிபே சிறிய என்ப. 6 ககார ஙகாரம் முதல் நா அண்ணம். 7 சகார ஞகாரம் இடை நா அண்ணம். 8 டகார ணகாரம் நுனி நா அண்ணம். 9 அவ் ஆறு எழுத்தும் மூ வகைப் பிறப்பின. 10 அண்ணம் நண்ணிய பல் முதல் மருங்கில் நா நுனி பரந்து மெய் உற ஒற்ற தாம் இனிது பிறக்கும் தகார நகாரம். 11 அணரி நுனி நா அண்ணம் ஒற்ற ற·கான் ன·கான் ஆயிரண்டும் பிறக்கும். 12 நுனி நா அணரி அண்ணம் வருட ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும். 13 நா விளிம்பு வீங்கி அண்பல் முதல் உற ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும் லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும். 14 இதழ் இயைந்து பிறக்கும் பகார மகாரம். 15 பல் இதழ் இயைய வகாரம் பிறக்கும். 16 அண்ணம் சேர்ந்த மிடற்று எழு வளி இசை கண்ணுற்று அடைய யகாரம் பிறக்கும். 17 மெல்லெழுத்து ஆறும் பிறப்பின் ஆக்கம் சொல்லிய பள்ளி நிலையின ஆயினும் மூக்கின் வளி இசை யாப்புறத் தோன்றும். 18 சார்ந்து வரின் அல்லது தமக்கு இயல்பு இல எனத் தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும் தம்தம் சார்பின் பிறப்பொடு சிவணி ஒத்த காட்சியின் தம் இயல்பு இயலும். 19 எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து சொல்லிய பள்ளி எழுதரு வளியின் பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து அகத்து எழு வளி இசை அரில் தப நாடி அளபின் கோடல் அந்தணர் மறைத்தே. 20 அ·து இவண் நுவலாது எழுந்து புறத்து இசைக்கும் மெய் தெரி வளி இசை அளபு நுவன்றிசினே. 21 - Mathan - 02-06-2004 உண்மைய சொல்றன் பொழில் சத்தியமா ஒன்னும் புரியல :roll: :roll: :roll: - Mathan - 03-08-2004 தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ... ! உலகில் பல இடங்களில் வழங்கும் பல மொழிகளிடையே எத்தனையோ ஒற்றுமைகள் உள்ளன .. மொழிகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாய் இல்லாமல் இருக்கும்போது இந்த ஒற்றுமைகள் வியக்க வைக்கின்றன .. இதைப் பற்றி அலசுவதே இப்பகுதியின் நோக்கம் .. முதலில் தமிழையும் ஆங்கிலத்தையும் எடுத்துக்கொள்வோமா .. ? தமிழின் முதலெழுத்து " அ " - ஆங்கிலத்தின் முதலெழுத்து A .. தனியே எழுத்தை வாசிக்கும்போது " ஏ " என்று உச்சரிக்கப்பட்டாலும் அது ஒரு சொல்லில் வரும்போது அதன் உச்சரிப்பு " அ " தான் .. ( ஜெர்மன் போன்ற சில மொழிகளில் A வைத் தனியே உச்சரிக்கும்போதுகூட மிகச்சரியாய் " அ " என்று தமிழ் உச்சரிப்பிலேயே உச்சரிக்கிறார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.. ) தமிழின் ஒன்பதாவது எழுத்து ஐ .. - ஆங்கிலத்தின் ஒன்பதாவது எழுத்து I இன்னும் இதுபோல் நிறைய அதிசய ஒற்றுமைகள் உள்ளன .. உதாரணமாய் .. தமிழில் ஒரு , ஓர் என்ற வார்த்தைகளை எப்படிப் பயன்படுத்துகிறோமோ அதேபோல் ஆங்கிலத்தில் a , an என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள் .. தமிழில் உயிரெழுத்தில் ஆரம்பிக்கும் சொல்லைக் குறிப்பிடும்போது ஓர் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம் .. உதாரணம் . ஓர் ஊர் ... ஓர் இலை என்பன ( ஒரு ஊர் , ஒரு இலை என்று சொல்வது இலக்கணப்படி தவறானதல்லவா .. ?.) இதேபோல் ஆங்கிலத்தில் உயிரெழுத்தின் உச்சரிப்பில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் குறிக்கும்போது an என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள் .. எடுத்துக்காட்டாக: Apple - an apple இங்கே மிகவும் கவனிக்கத்தக்க , சுவையான கருத்து ஒன்று உண்டு .. நம்மில் பலருக்கு ஆங்கிலத்தில் எழுதும்போது a , an குழப்பம் வரலாம் .. ஏனென்றால் ஆங்கிலத்தில் ஆங்கில உயிரெழுத்தில் ஆரம்பிக்கும் சொற்களுக்கு மட்டும் என்று an பயன்படுத்துவதில்லை .. அச்சொல்லின் துவக்க உச்சரிப்பு உயிரெழுத்துப்போல் இருந்தாலே an பயன்படுத்துவார்கள் .. இந்தக் குழப்பங்களுக்கு ஒரு எளிய தீர்வு உண்டு .. இதைக் கேட்டல் நீங்கள் ஆச்சரியப்படலாம் ... அந்த வார்த்தையைத் தமிழில் அப்படியே எழுதுங்கள் .. எழுதும்போது முதலில் தமிழ் உயிரெழுத்துவந்தால் அங்கு an போடுங்கள் .. சரியாக இருக்கும் .. உதாரணமாக : honest man இதற்கு a போடுவதா அல்லது an போடுவதா என்ற குழப்பம் வந்தால் அந்த உச்சரிப்பைத் தமிழில் எழுதுங்கள் ஆனஸ்ட் மேன் .. முதலெழுத்து ஆ - தமிழ் உயிரெழுத்து எனவே நீங்கள் an பயன்படுத்தவேண்டும் .. University .. இதற்கு a போடுவதா அல்லது an போடுவதா சந்தேகமா ..? உடனே தமிழில் எழுதுங்கள் யுனிவர்சிட்டி . முதலெழுத்து யு தமிழ் உயிரெழுத்து இல்லை .. எனவே a போட வேண்டும்... இவை சிறிய உதாரணம் மட்டுமே .. இன்னும் நிறைய வார்த்தைகளை எடுத்துச் சோதித்துப் பாருங்கள் ... இது எப்படிச் சாத்தியம் .. ? ஆச்சரியமாக இல்லை .. ? எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது ... உங்களுக்கு ... ? இதுபோல் இன்னும் நிறைய இருக்கிறது .. தமிழில் ஒரு வினைச்சொல்லுடன் அன் அல்லது அர் என்று சேர்த்தால் அந்த வினையைச் செய்பவரைக் குறிக்கும். உதாரணமாக வண்டியை ஓட்டுபவரை ஓட்டுநர் என்கிறோமல்லவா.. ? அதுபோல . ஓட்டு + அர் = ஓட்டுநர் இதேபோல் ஆங்கிலத்திலும் நம்மால் காணமுடியும் .. drive + அர் = driver . cut + அர் = cutter இவ்வாறு வினைச்சொல்லுடன் ( verb) அர் அல்லது அன் சேர்த்தவுடன் அது அதனைச் செய்யும் நபரையோ அல்லது அந்தத் தொழிலைச் செய்யும் பொருளையோ குறிக்கும் .. இப்போது குறிப்பிட்டவை மிகச்சில உதாரணங்கள் மட்டுமே ... நாம் சற்றே சிந்தித்தால் இன்னும் எத்தனையோ சொற்களை இதுபோல் காணலாம் ... இன்னும் சில அதிசய ஒற்றுமைகள் .. ஞாயிற்றுக் கிழமை - Sun day ஞாயிறு என்றால் தமிழில் சூரியன் ... Sun என்றாலும் சூரியன் .. திங்கள் கிழமை - Mo(o)n day திங்கள் என்பது நிலவைத்தானே குறிக்கும் .. moon என்பதும் நிலவுதான் .. சனிக் கிழமை - satur(n) day சனிக்கிரகத்தைத் தான் நாம் ஆங்கிலத்தில் saturn என்கிறோம் .. இவை தவிர இன்னும் எத்தனையோ சொல்லும் பொருளும் ஒத்த சொற்கள் ஆங்கிலத்தில் உள்ளன ... catamaran - கட்டுமரம் curry - கறி (ச்சாறு) ( குழம்பு ) curryleave - கறியிலை ( கறிவேப்பிலை ) anaconda ( snake ) - ஆனைக்கொன்றான் பாம்பு ( யானையையே கொல்லும் பாம்பு ) தமிழில் இருந்து ஆங்கிலத்துக்குச் சென்ற , மிகவும் பிரபலமான , அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட , சில சொற்களே நாம் மேலே பார்ப்பவை .. நன்றி - முத்து இணையம் - thamizh.nila - 01-20-2005 தகவல்களுக்கு மிக்க நன்றி. - shiyam - 01-21-2005 Mathan Wrote:உண்மைய சொல்றன் பொழில் சத்தியமா ஒன்னும் புரியல :roll: :roll: :roll:அதுதான சொல்லுறன் இரும்படிக்கிற இடத்திலை ஈக்கு என் வேலை - kavithan - 01-21-2005 shiyam Wrote:Mathan Wrote:உண்மைய சொல்றன் பொழில் சத்தியமா ஒன்னும் புரியல :roll: :roll: :roll:அதுதான சொல்லுறன் இரும்படிக்கிற இடத்திலை ஈக்கு என் வேலை அது,.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - shiyam - 01-22-2005 புறப்பொருள் திணைகள் என்பன என்ன விளக்கம் தருவீர்களா??? - kavithan - 01-23-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->அன்பு நண்பர் கவிதன் அவர்களே பதினாறு பேறுகளைப் பற்றி கல்வி தனம் தானியம் அழகு புகழ் பெருமை இளமை அறிவு சந்தானம் வலிமை வாழ் நாள்-வெற்றி துணிவு நோயின்மை நுகர்ச்சி அன்பகலா மனைவி சலியாத - மனம் பசி வந்திடப் பத்தும் பறந்து போவதைப் பற்றி நமது ஒளவையார் என்ன கூறுகிறார் என்று பார்க்கலாமா? \"மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும் பசி வந்திடப் பறந்து போம்\"...........மானம், குலப் பண்பு, கல்வி, வலிமை, கொடைத்தன்மை, அறிவுடைமை, மேன்மை, முயற்சி,காமம் இந்தப் பத்துகளும் பசி வந்திடப் பறந்து போகும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> நன்றி வித்தகர் திரு. கோபால் அவர்களே. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - thamizh.nila - 01-23-2005 நன்றி கவிதன் அண்ணா..& கவிதன் அண்ணாவிற்கி பதில் சொன்ன கோபால் அவர்களுக்கும்.. |