03-27-2005, 11:22 AM
கதிர்காமரின் கருத்துக்களால்
ஜே.வி.பி. கட்சிக்குள் குழப்பம்!
வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர் காமர் அண்மையில் வெளியிட்ட சில கருத்துக் கள் ஜே.வி.பி. கட்சிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக ஆராய்வதற்காக கட்சியின் அரசியல் குழு அவசரமாக நாளை திங்கட் கிழமை கூடுகின்றது.
ஆழிப்பேரலை அனர்த்தம் தொடர்பான நிவாரணம் மற்றும் மீள்கட்டுமானப் பணி களை முன்னெடுப்பதற்கான பொதுக்கட்டமைப் புக் குறித்து அரசும் விடுதலைப் புலிகளும் இணக்கம் கண்டாலும் அதற்காக அரசில் இருந்து ஜே.வி.பி. வெளியேறிவிடாதென்றும் அதற்கான உத்தரவாதம் தமக்கு வழங்கப்பட் டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ் மன் கதிர்காமர் கருத்துக் கூறியிருந்தார்.
இக்கருத்தே ஜே.வி.பிக்குள் பெரும் சர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியின் தலைவர் சோமவன்ஸ அமர சிங்கவே இந்த உறுதிமொழியை வழங்கிய தாக லக்ஷ்மன் கதிர்காமர் தெரிவித்துள்ளதால் சோமவன்ஸ அக்கருத்தை வாபஸ் பெறவேண் டும் என்று ஜே.வி.பி. கட்சிக்குள் ஒரு சாரர் அவரை வலியுறுத்திவருகின்றனர்.
-------------------------------------------- ---------------------------
திருட்டுப் பேர்வழியான மகனை
பொலீஸிடம் சிக்கவைத்த தாய்
நெல்லியடியில் நேற்றுச் சம்பவம்
வடமராட்சிப் பகுதியில் இடம்பெற்ற பல கொள்ளைகளுடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் நபர் ஒருவர் நேற்று பொலீஸாரிடம் சிக்கினார். அவருடைய தாயாரே அவரைக் காட்டிக்கொடுத்துப் பொலீஸாரிடம் சிக்கவைத் தார் என்று கூறப்படுகிறது.
திருட்டுகள் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த கண்ணன் என்று அழைக்கப்படும் பாஸ் கரன் என்பவரே பொலீஸாரிடம் மாட்டினார்.
இவரது சமூகவிரோதச் செயல்களால் ஏற் பட்ட பாதிப்புகளை அறிந்து வேதனையுற்ற தாயார் அவரை பொலீஸில் ஒப்படைக்க முயன் றார் என்று கூறப்படுகிறது.
மகனைப் பொலீஸாரிடம் கையளிக்கும் எண் ணத்துடன் ஏதோ சாக்குப் போக்குச் சொல்லி அவரை ஓட்டோ ஒன்றில் ஏற்றி நெல்லியடிப் பொலீஸ் நிலையம் நோக்கித் தன்னோடு அழைத் துச் சென்றிருக்கிறார் அந்தத் தாயார்.
விவரம் புரிந்த மகன் வழியில் ஓட்டோவில் இருந்து குதித்துத் தப்பி ஓட முயன்றார் என் றும் -அப்போது தாயார் திருடன் திருடன்| என்று குரல் எழுப்பவே வீதியில் காணப்பட்டவர்கள் அவரை மடக்கிப் பிடித்து பொலீஸாரிடம் கைய ளித்தனர் எனவும் கூறப்படுகிறது.
உதயனில்