06-20-2003, 06:13 PM
ஆகா.. சில வாதங்களுக்கு தமிழ்பற்றை கொண்டு வரும்போது ஏன் தேசியத் தலைவரைக் கொண்டு வரக்கூடாது.. நீங்கள் எங்கிருந்தால் எனக்கென்ன? அன்று யாழில் முஸ்லீம்கள் ஏன் வெளியேறினார்கள். இன்று ஏன் வரவேந்கப்படுகிறார்கள்? தமிழீழம் ஏன் சமஸ்டியானது.. ஆகவே அன்று சினிமா தடை செய்யப்பட்டதுக்கும் இந்தக் கருத்தக்கும் முடிச்சுப் போடவேண்டாம்.. வÜரபாண்டிய கட்டப்பொம்மனையோ.. அல்லது சிதம்பரனாரையோ பாமர மக்களுக்கும் அறியத்தந்தது சினிமாதான்.. ஆரம்ப காலத்தில் தமிழுணர்வை உக்கிரப்படுத்தியதே சினிமாப் பாடல்கள்தான்.. ஆரம்ப காலத்தில் கங்கை அமரன் இளையராஜா போன்றோர் இந்தியாவிலே ஈழத் தமிழர்களுக்காக (மாணவர் அமைப்புக்காக) நிதியுதவிக் காட்சிகளும் நடாத்தியுள்ளார்கள்.. அரைகுறைத் தகவல்களுடன் நான் எழுத வெளிக்கிடவில்லை.. கண்ணால் கண்டதையும் அறிந்ததையும் வைத்துத்தான் எழுதுகிறேன்.. கருத்துக்கு பதில் வைப்பதைவிட்டு .. என்னில் அரைகுறை காணவும் உங்களின் இருப்புபற்றி கேட்டும் முலாம் பூசவேண்டாம்.. நீர் ஆராக இருந்தால் எனக்கென்ன.. கருத்தை உள்வாங்கி.. அதற்கு விளக்கம் வையுங்கள்.. எமது தழிழர்களா.. வெள்ளைக்காரியை மகன் கட்டினால் சந்தோசம்.. மகள் கட்டினால் எதிர்ப்பு.. இன்னும் ஒரு நீக்ரோகாரியை மகன் கட்டினாலும் எதிர்ப்பு.. இதுதான் இன்றைய நிலை.. இப்போது திருமணங்களை சாதகம் தீர்மானிக்காமல் விசாக்கள் தீர்மானிக்கிறது.. ஆக தமிழினம் வளைந்துகொண்டுதான் இருக்கிறது.. இதுதான் உண்மை. மன்னிக்கவும்.. மீண்டும் கருத்துக்கு.. எனது கருத்தின் சாரம்என்னவென்றால் கலைஞர்கள் கலைகள் வரவேற்கப்படவேண்டியவை.. ஆனால் அவற்றில் நல்லனவற்றை எடுத்து தீயதை ஒதுக்குவதுதான் போற்றுதற்குரியது.. ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டுவதல்ல.. மாணவர்களது அறிக்கையின் சாரம் தாயக அவலத்தையும்.. புலம்பெயர் தமிழர்களின் பயன்பாடான பங்களிப்புப் பாதையையுமே கூறுகிறது.. அதை மீண்டும் உய்த்தறிய வேண்டியது நீங்கள்..
.

