03-26-2005, 03:49 AM
Mathan Wrote:ஞானபீடப் பரிசு பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் பேட்டியில் இருந்து ........
<b>பெண்ணியம் பற்றி.. ?</b>
பெண் விடுதலை என்ற சொற்றொடர்தான் எனக்குப் பரிச்சயம். பெண்ணியம்- எனக்குப் புரியாத சொல். அதைப் புரிந்துகொள்ளவும் விரும்பவில்லை.
அக்கினிப் பிரவேசம் என்ற சிறுகதையில் வன்புணர்வுக்கு ஆளான சிறுமியினைத் தூய்மைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டவர். தண்ணீரைக் கங்கையின் நீராகக் கொண்டு மகளின் பாவத்தை தாய் மூலம் போக்கச் செய்தவர். தவறு செய்த ஆணை விட்டுவிட்டார்.
பின் அதே கருவை வைத்து 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்று நாவல் எழுதி கதாநாயகியை குப்பைக்குள் தள்ளினார். மீண்டும் இதையே திரைப்படமாக எடுத்து, முடிவில் கதாநாயகியை தூய்மைப்படுத்தினார்.
அவரது பெண்ணிய நிலைப்பாட்டின்படி ஆண்தான் பெண்ணுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லும் தகுதி உள்ளவன்.
<b> . .</b>

