03-26-2005, 02:08 AM
kuruvikal Wrote:குளக்காட்டான் உங்ககிட்ட ஒரு டவுட்டுக் கேக்கோணும் என்று ரெம்பநாளா ஒரு விருப்பம்...நீங்க எப்பவும் குடாநாட்டுத் தண்ணியில அக்கறையா இருக்கிறியள்.... ஆராய்ச்சி அளவிலான உவர் நீரை நன்னீராக்கும் ஒரு இலகு தொழில் நுட்பம் ஒன்றைப் பற்றி எமக்கு அறியத்தர முடியுமா...! :?:![]()
அதுபோக இயற்கைப் பசளையிடல்.... பாரம்பரிய, உயிரியல் பீடைக்கட்டுப்பாட்டை குடாநாட்டில் ஊக்கி வித்தல்... பற்றி என்ன நினைக்கிறீங்க... குறிப்பாக மண் அமிலமாதல் காரமாதலுக்கும் நீர் மாசுறுதலுக்கும் அசேதன உரப் பயன்பாட்டுக்கும் நெருங்கிய தொடர்புண்டு...அதேபோல் கிருமிநாசினிகள் கொண்ட பார உலோகங்களாலான ( arsenic, cadmium, chromium, copper, nickel, lead and mercury) புற்றுநோய்த் தாக்கம் குடாநாட்டில் ஒப்பீட்டளவில் அதிகம்.... இவை கூட உணவுப் பொருட்கள் மூலமும்.. குடிநீர் மூலமும் உள்ளெடுக்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.... இவை குறித்தும் கொஞ்சம் விளக்கினால் கள உறுவுகளூடு மக்களுக்கு சில தகவல்கள் சென்றடைய முடியும் அல்லவா...!
குருவிகளே அதில் அக்கறையாக இருப்பதன் காரணம் நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த இடம் வாழப்போகும் இடமும் அது என நம்புபவன் ......அந்த இடத்திற்கு அதன் வளத்திற்கு பாதகம் வருவதை விரும்பவில்ல என வைத்து கொள்ளுங்களேன்.
நமது வளத்தை சரியாக முகாமை செய்தால் உவர் நீih சுத்திகரித்து பாவனைக்குவிடவேண்டிய தேவை வராது......அப்படி ஒன்று நேர்ந்துவிடக்கூடாது என்பது இவ்வார்வத்தின் அடுத்தகாரணம்.
ஆர்வம் இருக்கிறது....ஆனால் நிபுணன் அல்ல.........
நீங்கள் கேட்ட இலகு முறை உவர் நீர் சுத்திகரிப்பு
சூரிய ஒளியை பயன் படுத்தும் அமைப்பு ..... தெடர்பில்
ஈழத்தில்
ஒரு அன்பர் கீழ் காட்டிய ஒரு மாதிரி கட்டமைப்பின் முலம் நன்னீர் உற்பத்தி பற்றி ஆராய்சியில் ஈடுபட முயன்றுகொண்டிருந்தார். அவர் அதை நிறைவு செய்தாரா இல்iயா என்பது தெரியவில்லை.......அதன் தொழில் நுட்பம் பற்றி படத்தை பார்க்க உங்களுக்கு புரியும். மேலும் அதை விளக்க விரும்பவில்லை.......
<img src='http://img192.exs.cx/img192/6513/sun8ik.jpg' border='0' alt='user posted image'>
மேற்குலக நாவீன முறைகள் பற்றி விபரிக்கவில்லை......
மற்றைய விடயமான சேதன பண்ணையாக்கம் பற்றி பின்னர் கருத்தெழுதுகிறேன்.......எனது சிறுவயது முதலான பட்டறிவையும் அப்பப்ப படித்து வாசித்து அறிந்தவற்றையும்.கொண்டு.......
உடனடியாக எழுத நேரப்பற்றாக்குறை......
இன்னுமொரு முக்கியவிடயம் ஈழத்தில் ஆராய்ச்சிகள் எதுவுமே நடைபெறவில்ல என்றோ.....அல்லது யாரும் கவனிக்கவில்ல என்ற எண்ணத்துடனனோ நான் இவ்வாக்கங்களை முன்வைக்கவில்லை.........இங்கிருப்பவர்களும் அங்கிருப்பவர்களுக்கு உறுதுணையாக........தாம் கற்றவற்றை கொண்டு அங்குள்ள பிரச்சனைகளுக்கு தீர்வுகாண உதவவேண்டும்.......
களத்திற்கு பல்துறை சார்ந்தவர்களும் வருவதால்........ஒரு கவன ஈர்ப்புக்காகவே எழுதினேன்.........
யாரும் தப்பர்த்தம் கொள்ள வேண்டாம்.................
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

