Yarl Forum
தண்ணீர் தண்ணீர் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25)
+--- Thread: தண்ணீர் தண்ணீர் (/showthread.php?tid=4696)



தண்ணீர் தண்ணீர் - KULAKADDAN - 03-23-2005

தண்ணீர் தண்ணீர்... ... ...

<img src='http://i149.exs.cx/img149/8186/untitled6fs.jpg' border='0' alt='user posted image'>

இப்படி ஒரு தொடர் கவிதை எப்போதோ வசித்த ஞாபகம். நிச்சயமாக இது கவிதயல்ல.

உலக தண்ணீர் தினமான இன்று தண்ணீர் பற்றிய ஒரு பார்வை.

தண்ணீருக்கான தேவை அதாவது தரமான குடி நீருக்கான தேவை நாளாந்தம் அதிகரித்து வருகிறது. நன்னீராதாரங்கள் பரப்பளவில் வேகமாக குறைந்துவருகிறன. அத்துடன் இருப்பவையும் மாசாக்கத்துக்குள்ளாகிவருகிறன.

எம் தாயகத்தில் இருக்கும் நன்னீராதாரங்கள் மாசக்கமடைந்துவருவதும் பரப்பளவில் குறைவடைந்துவருவதும் மிகவும் கவலைக்குரியது. இதைபற்றி யாரும் கவலைப்படுவதில்லை. பத்திரிகைகளில் இடையிடையே கட்டுரை வரும் அத்துடன் அதன் கதை முடிந்துவிடும்.

கேள்விக்குள்ளாகும் நிலத்தடி நீர் வளம்.

1. அதிகரித்த நீர் பாவனையால் வருடாந்தம் பெய்யும் மழை நீர் நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நீரை மீள் நிரப்பமுடியாமை. இதற்கு முக்கிய காரணம் நிலத்தடி நீர் சமநிலையை பேணுவதற்காh முன்னோரால் ஆங்காங்கு அடைக்கப்பட்ட சிறிய குளங்கள் [யாழ்பாணத்து குளங்கள்] கைவிடப்படல் தூர்வாரப்படாமை. மழைநீர் தேங்கி நிலத்தின் கீழ் வடிந்து செல்லாமல் கடலை வீணே சென்றடைகிறது. மழை நீர் குளங்களில் தேக்கப்படும் போது அது சிறுக சிறுக வடிந்து சென்று நிலத்தடி நீர்ச்சமநிலையை பேணுகிறது.
வன்னி பெருநில வாழ்பனுபவம் கொண்டவர்களுக்கு இது புரியும் பெருங்குளங்களில் நீர்வற்றி வாய்க்கால் வரண்டால் சில இடங்களில் கிணறு வெறுமையாகிவிடும்.
வவுனியாவில் ஆங்காங்கு காணப்படும் குளங்களை நிரவி வீடமைத்து வருவதால் நீர்த்தட்டுபாடு ஏற்படுவாதாக பத்திரிகைகளில் செய்தி வந்திருந்தது.

2. உவர் நீர் ஊடுருவல். இதை யாழ்குடாநாட்டை வாழ்விடாக கொண்டவர்களில் யாரேனும் கண்டு அனுபவித்திருக்க முடியும். அதிகரித்த நீர் பாவனை காரணமாக அடித்தளத்திலுள்ள உவர் நீர் மேலெழல். ஆரம்பத்தில் நன்னீராக இருந்த கிணறுகள் பல இன்று உவர் நீராக மாறியுள்ளன.

3. மலசலகூட கழிவுகள் நிலத்தடி நீருடன் கலக்கும் சாத்தியம். மாரிகாலத்தில் நீர் மட்டம் பலஅடி மேலெழும் போது இரண்டும் கலக்க முடியும்.

4. நிலத்தில் கொட்டப்படும் இரசாயன உலோக பொருட்கள் மழை நீருடன் கலந்து நிரத்தடி நீரை மாசாக்கும் சாத்தியம்

5. விவசாயத்தில் பாவிக்கப்படும் உரத்தில் காணப்படும் அமோனியா யுரியா போன்றவை நைத்திரேற்றாக்கத்துக்குட்படும். இவை மண் துணிக்கைகளால் பற்றி வைத்திருக்கப்பட முடியாதவை. மண்ணும் நைத்தரேற்றுக்களும் எதிரேற்றமுடையவை. இதனால் இலகுவில் கழுவிச்செல்லப்பட்டு நிலத்தடி நீரை அடைகிறது. இவ்வாறு மாசாக்கமடைந்த நீரை அருந்துவதால் புற்று நோய் பிறக்கும், குழந்தைகள் நீலக்குழந்தை நோய்க்கு உட்படல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படலாம்.

இதை தீர்க்க.. ... .. ..

தற்போது மழைநீர் சேகரிப்பு முறைகள் பற்றி அறிமுகப்படுத்தப்படுகிறது.
அத்துடன் சிக்கனமாக நீர்பாசன முறைகளை விவசாயத்தில் பயன்படுத்தல்.
குளங்களின் புனருத்தாரணம்
மhசாக்கும் கழிவுகள் பற்றிய கவனம் என்பவை மிகமுக்கியமானது. இதை பற்றி நாமனைவரும் சிந்தித்தால் நம் தாயகத்தை வளப்படுத்தலாம்.


- kavithan - 03-23-2005

நல்ல ஒரு கட்டுரை குழைக்காட்டான்.... இன்று உலக தண்ணீர்தினமா.. அறியதந்தமைக்கு நன்றி....


- Mathan - 03-23-2005

படத்தையும் விளக்கத்தையும் அறிய தந்தமைக்கு நன்றிகள்


- hari - 03-23-2005

நல்ல ஒரு கட்டுரை குழைக்காட்டான். இப்படியான கட்டுரைகள் மூலம் எங்கள் மக்களை விழிப்புற செய்வது அவசியம்!


- Thusi - 03-23-2005

போகிற போக்கில் நேற்று வானொலியில் கேட்டுத்தான் தண்ணீர் தினம் பற்றி அறிந்திருந்தேன். அது பற்றி ஆக்கத்தை இணைத்த குளக்ஸ் அண்ணைக்கு நன்றி.

வானொலியில் சொன்ன ஆனால் நாம் சிந்திக்க வேண்டிய தகவல் - என்னதான் உலக அறிஞர்கள் எல்லாம் ஒன்றுகூடி தண்ணீர்ப் பிரச்சினை, தண்ணீரை தூய்மையாகப் பேணல், சிக்கனமாகப் பாவித்தல் என்பது பற்றி ஆராய்ந்து எப்படியான அறிக்கைகளையெல்லாம் விட்டாலும் அதற்கான அடித்தளம் ஒவ்வொரு தனிவீட்டிலிருந்தும் - ஒவ்வொரு தனிமனிதனிடமிருந்தும் தான் எழுப்பப்படவேண்டும் என்றார்கள். நாம் அனைவரும் சிந்தித்து இயலுமான அளவிற்குக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயமான விடயம் இது.


- kuruvikal - 03-23-2005

உலகில் பெற்றோலிய வளம் போல...நன்னீர் வளமும் அருகிவரும் வளம்...! காலப்போக்கில் நன்னீரையும் காசுக்கு வேண்டி அருந்தும் நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...அதுவும் மேற்கு நாடுகளில் இருந்து வந்தால் நம்மாக்கள் இம்போண்டட் என்று வாங்கி அருந்துவார்கள்...அல்லது தாயகத்துக்குச் சுற்றுலாச் செல்லும் போது எடுத்துச் செல்வார்கள்...! மேற்கு நாட்டினரோ துருவங்களில் தொழிற்சாலைகள் அமைத்து நன்னீர் உற்பத்தியில் இறங்கி உலக வியாபாரம் செய்து மேலும் மேலும் பணக்காரர் ஆவார்கள்...!

குளக்காட்டான் சொன்னது நல்ல விடயந்தான்....பிரச்சனையை சொன்னால் மட்டும் போதாது...மக்கள் என்ன செய்ய வேண்டும்... நன்னீர் மாசடையாமல் தவிர்க்க..குறிப்பாக அசேதன உரங்களை அளவுக்கு மிறீ விசிறுவது... பார உலோகக் கூறுகள் கொண்ட கிருமிநாசினிகளை விசிறுவது என்று எம்மவர்கள் எழுந்தமானப் போக்கில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்...இதை எந்த வகையில் மட்டுப்படுத்தி குறைந்த பாவனையில் அதிக பலனை அடைவது... அல்லது மாற்றீடுகள் குறித்து விளக்கினால் உதவியாக இருக்கும்...குறிப்பாக விவசாய விஞ்ஞானம் கற்றவர்கள்...அல்லது கற்பவர்கள்....இதைத் தெளிவாகச் சொல்லலாம்...!

மலசலக் கழிவு நீரில் கலக்கிறது என்பது பிரச்சனையாகச் சொல்லப்பட்டது...கலக்காமல் இருக்கத் தீர்வு என்ன...அது சொல்லப்படவில்லை... அப்போ எப்படி மக்கள் நடவடிக்கைகள் எடுப்பது...நீர் மாசுறாதிருக்க.... இலங்கையில் தலைநகரங்கள் சில தவிர மற்றைய இடங்களில் எல்லாம் குழி மலசல கூடமே இருக்கிறது...அங்கு மலக் கழிவுகள் தொற்று நீக்கபடாமலேயே குழிகளில் சேர்க்கப்படுகின்றன...இதை எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டின்...மலசலக் குழிகள் காலத்துக்கு காலம் தொற்று நீக்கப்பட வேண்டும்...அது வாரா வாரமாக இருக்கலாம்...அல்லது மாத ரீதியாக இருக்கலாம்...அத்துடன் மலசலக் குழிகளுக்கும் நன்னீர் நிலைகளுக்கும் இடையில் குறிப்பிடத்தக்க அளவு இடைத்தூரம் பேணப்படுவது அவசியம்...! குழிகள் ஆழம் குறைந்தனவாகவோ...மூடாதவையாகவோ இருக்கக் கூடாது...அதே போல் அதிக ஆழம் உள்ளனவையாகவும் இருக்கக் கூடாது...! இவற்றைப் பொதுமக்களுக்கு அறிவுறுத்துவதோடு விதிகள் பின்னபற்றப்படுகின்றனவா என்று நோகக்வும் வேண்டும்...! Idea

இப்போ மேற்குநாடுகளில் வாழும் நம்மவர்கள்...அங்குள்ள கடும் சட்ட திட்டங்களுக்குள் ஒழுகித்தான் வாழ்கின்றனர்...இதே மக்கள் தாயகத்தில் வாழை மரங்களை வெட்ட வேண்டாம் என்று புலிகள் சொல்ல...இவையின்ர ஆட்சியில வாழையும் கட்ட முடியாது என்று முணுமுணுத்தவர்கள்...இப்போ வாய் மூடி வாழையும் இல்லாமல் குலையும் இல்லாமல் லண்டன் மூலைக்குள் முடங்கிக் கிடப்பதைக் காணும் போது....!!!!! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- shobana - 03-23-2005

நன்றி குளக்கட்டன்


- AJeevan - 03-23-2005

நன்றி குளக்கட்டன்


- eelapirean - 03-23-2005

8) 8) 8)


- anpagam - 03-23-2005

ஒரு வெளிநாட்டு நிலத்தடிஆய்வு நிறுவனம் இலங்கையில் போர்காலத்தில் வடகிழக்கில் கந்தகநச்சுக்கள் நிலத்தடியில் உறைந்துள்ளன என அறிக்கைகள் விட்டிருந்நததையும் கவனத்தில் கொள்ளலாம்
மற்றும் இந்த தண்ணீர் பிரச்சனைகளுக்காக வன்னியில் இரணைமடு குளத்துக்கு பக்கத்திலும் வேறுபலகுளங்களும் புணர்நிர்வகிக்கப்பட்டுவருவதை அங்கு சென்றோர் அவதானித்திருக்கலாம்.
இவைவிட வேறுபலநீர்பாசன நீர்தேக்க நவீன பழைய ஆராட்சிகளும் இன்றையஇந்ததேவைகள் கருதி இதைஈடுசெய்வதற்கான வருங்காலதிட்டங்களும் புதியகுடியிருப்புக்கள் கிராமங்கள் மக்களுக்கும் தேவையானவர்களுடனும் பொருட்காட்சி கண்காட்சிகள்மூலம் அடிக்கடி நடந்து வருவதையும் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.


- Raguvaran - 03-23-2005

Sorry, I am using the school computer. I have to type in English. Kuruvijare, can you tell how does the banana trees preserve underground water.


- THAVAM - 03-23-2005

நன்றி தம்பி நன்றி இந்த தவத்தாரின் நன்றிகள் உம்முடைய பெயருக்கு ஏற்ற விடையத்தில் பெரிய கில்லாடி என்பதைக் எழுதாமல் எழுதியுள்ளீர் எப்படி என்றாலும் பொது அறிவு எமக்கு கற்றுத்தருவதற்கு மீண்டும ஒரு நன்றி


- KULAKADDAN - 03-24-2005

பிரச்சனைகளுக்கான சாத்தியமான தீர்வுகள்.

தீர்வு என்று வரும் போது ஏற்கனவே வேறு நாடுகளில் பயன் படுத்தப்பட்டவற்றை அப்படியே இது இதற்கு தீர்வு என கூறமுடியாது.

பல இடங்களிலும் பயன்படுத்தப்படும் முறைகளை ஆராய்ந்து எமது சூழலுக்கு வாழ்க்கை முறைக்கு பொருளாதார வசதிகளுக்கு ஏற்ப மாற்றங்களை செய்வது அவசியமாகும்.
எமது நோக்கம் பலரது கவனத்தையும் ஈர்க்காத ஆனால் முக்கியமான பிரச்சனைகளை கவனத்துக்கு கொண்டுவருவதே.
சில சாத்தியப்படக்கூடிய தீர்வுகள்

உரப்பாவனையை முற்றாக குறைக்கமுடியாது. ஆனால் சில செயன்முறைகளை பின் பற்றி நைத்திரேற்றாக்கத்தை குறைக்கமுடியும்.
1.ரார் பூச்சிட்ட யூரியா [Tar coated urea]இது நமது நாட்டில் கிடைப்பது அரிது. இதன் பயன் உரம் உடனடியாக கரைவதை குறைத்து சிறிது சிறிதாக[Slow releasing] மண்ணுக்கு இழக்கப்படுவதால் தாவரம் அதனை உடனடியாக பயன்படுத்திவிடும். இதற்கு பிரதியீடாக...இலங்கையில்
2.வேப்பம் பிண்ணாக்குடன் கலந்து உரமிடுதல் பயனளிக்கும் என கண்டறியப்பட்டது. ஆனால் மக்கள் பாவனைக்கு வரவில்லை. வேப்பம் பிண்ணாக்கில் காணப்படும் இரசாயனப் பொருட்கள் நைத்திரேற்றாக்கும் நுண்ணங்கி செயற்பாட்டை நிரோதிப்பதால் உரம் நீரில் கழுவிசெல்லப்படுவது குறையும்.
3.ஒரே தடவையில் முழு உரத்தையும் இடாமல் சிபாரிசு செய்யப்பட்ட அளவை சிறிது சிறிதாக பிரித்து [split application]சிறிய கால இடைவெளிகளில் இடல் .இதனை தாவரங்கள் வினைத்திறனாக அகத்துறுஞ்சுவதால் இழப்பு மாசாக்கம் என்பவை தடுக்கப்படும்.

மலசலகூட கழிவுகளுக்கு..
1.நிலக்கீழ் வடிகாலமைப்பு மூலம் சேகரித்து தொழில் ரீதியான சுத்திகரிப்பு தற்போது சாத்தியமற்றது.[Drainage and Sewage treatment plants]

2.மலசலகூட குழிகளின் அனைத்து புற சுவர்களையும் அடித்தளம் உட்பட நீர் ஊடுபுகமுடியாதவறு அமைத்தல் ஆனால் அடிக்கடி கழிவகற்றும் தங்கிகள் முலம் அகற்றவேண்டியிருக்கும்.

3.குழிகளில் பிரிவுகளை ஏற்படுத்தி முதலில் உள்ள சேகரிப்பு தாங்கியை மட்டும் நீர் ஊடுபுகமுடியாததாகவும் அது நீரல் நிரம்பி வடிந்து செல்வதற்கு அடுத்தநிலையில் உள்ள குழிகளை நீர் ஊடுபுககூடியதாகவும் அமைத்தல். இதன் மூலம் உடனடியாக கலப்பு ஏற்படும் சாத்தியம் இல்லது போவதுடன். முதல் குழியில் நொதித்லுக்கு உட்படும் போது பாதகமாக நுண்ணங்கிகள் இறந்துவிடும்.

4.குறிப்பிட்ட தூரக்கணக்கு நகரங்களுக்கு சரிவருமா? ஓருவீட்டின் கிணறும் மலசலகூடமும் 30 அடி தூரத்திலிருக்கும். ஆனால் அடுத்தவீட்டு குழி முதல் வீட்டின் கிணற்றுக்கருகில் இருக்கும். பின் எவ்வாறு தூர அளவை பேணுவது.
அத்தோடு நிலத்தடி நீர் நிலையாக நிற்பதில்லை ஒரு இடத்தில் நீரகற்றப்பட அதை நிரப்ப சூழ உள்ள அனைத்து இடங்களிலிருந்தும் ஓடத்தொடங்கும். ஆகவே கலக்கமுடியதென்று கூறமுடியாது. ஆனால் குறைக்கமுடியும்.


யாழ்குடாவின் தீவகம் உட்பட ஏனையபகுதிகளிலும் கூரையில் விழும் மழைநீரை சேகரித்து பயன் பெறுவதற்கு தொட்டிகள் அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அதன் வெற்றி மக்களின் அக்கறையிலேயே தங்கியுள்ளது.


- KULAKADDAN - 03-24-2005

கருத்துக்களை பகிர்ந்த அனைவருக்கும் நன்றி.....


- kuruvikal - 03-24-2005

குளக்காட்டான் உங்ககிட்ட ஒரு டவுட்டுக் கேக்கோணும் என்று ரெம்பநாளா ஒரு விருப்பம்...நீங்க எப்பவும் குடாநாட்டுத் தண்ணியில அக்கறையா இருக்கிறியள்.... ஆராய்ச்சி அளவிலான உவர் நீரை நன்னீராக்கும் ஒரு இலகு தொழில் நுட்பம் ஒன்றைப் பற்றி எமக்கு அறியத்தர முடியுமா...! :?: Idea

அதுபோக இயற்கைப் பசளையிடல்.... பாரம்பரிய, உயிரியல் பீடைக்கட்டுப்பாட்டை குடாநாட்டில் ஊக்கி வித்தல்... பற்றி என்ன நினைக்கிறீங்க... குறிப்பாக மண் அமிலமாதல் காரமாதலுக்கும் நீர் மாசுறுதலுக்கும் அசேதன உரப் பயன்பாட்டுக்கும் நெருங்கிய தொடர்புண்டு...அதேபோல் கிருமிநாசினிகள் கொண்ட பார உலோகங்களாலான ( arsenic, cadmium, chromium, copper, nickel, lead and mercury) புற்றுநோய்த் தாக்கம் குடாநாட்டில் ஒப்பீட்டளவில் அதிகம்.... இவை கூட உணவுப் பொருட்கள் மூலமும்.. குடிநீர் மூலமும் உள்ளெடுக்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.... இவை குறித்தும் கொஞ்சம் விளக்கினால் கள உறுவுகளூடு மக்களுக்கு சில தகவல்கள் சென்றடைய முடியும் அல்லவா...! Idea


- anpagam - 03-24-2005

தாயகத்தின் தேவைக்கேற்ப ஆய்வுகள் வளப்படுத்தப்பட வேண்டும்
நன்றி: தமிழ்நாதம்


- KULAKADDAN - 03-26-2005

kuruvikal Wrote:குளக்காட்டான் உங்ககிட்ட ஒரு டவுட்டுக் கேக்கோணும் என்று ரெம்பநாளா ஒரு விருப்பம்...நீங்க எப்பவும் குடாநாட்டுத் தண்ணியில அக்கறையா இருக்கிறியள்.... ஆராய்ச்சி அளவிலான உவர் நீரை நன்னீராக்கும் ஒரு இலகு தொழில் நுட்பம் ஒன்றைப் பற்றி எமக்கு அறியத்தர முடியுமா...! :?: Idea

அதுபோக இயற்கைப் பசளையிடல்.... பாரம்பரிய, உயிரியல் பீடைக்கட்டுப்பாட்டை குடாநாட்டில் ஊக்கி வித்தல்... பற்றி என்ன நினைக்கிறீங்க... குறிப்பாக மண் அமிலமாதல் காரமாதலுக்கும் நீர் மாசுறுதலுக்கும் அசேதன உரப் பயன்பாட்டுக்கும் நெருங்கிய தொடர்புண்டு...அதேபோல் கிருமிநாசினிகள் கொண்ட பார உலோகங்களாலான ( arsenic, cadmium, chromium, copper, nickel, lead and mercury) புற்றுநோய்த் தாக்கம் குடாநாட்டில் ஒப்பீட்டளவில் அதிகம்.... இவை கூட உணவுப் பொருட்கள் மூலமும்.. குடிநீர் மூலமும் உள்ளெடுக்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.... இவை குறித்தும் கொஞ்சம் விளக்கினால் கள உறுவுகளூடு மக்களுக்கு சில தகவல்கள் சென்றடைய முடியும் அல்லவா...! Idea

குருவிகளே அதில் அக்கறையாக இருப்பதன் காரணம் நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த இடம் வாழப்போகும் இடமும் அது என நம்புபவன் ......அந்த இடத்திற்கு அதன் வளத்திற்கு பாதகம் வருவதை விரும்பவில்ல என வைத்து கொள்ளுங்களேன்.

நமது வளத்தை சரியாக முகாமை செய்தால் உவர் நீih சுத்திகரித்து பாவனைக்குவிடவேண்டிய தேவை வராது......அப்படி ஒன்று நேர்ந்துவிடக்கூடாது என்பது இவ்வார்வத்தின் அடுத்தகாரணம்.

ஆர்வம் இருக்கிறது....ஆனால் நிபுணன் அல்ல.........

நீங்கள் கேட்ட இலகு முறை உவர் நீர் சுத்திகரிப்பு
சூரிய ஒளியை பயன் படுத்தும் அமைப்பு ..... தெடர்பில்
ஈழத்தில்
ஒரு அன்பர் கீழ் காட்டிய ஒரு மாதிரி கட்டமைப்பின் முலம் நன்னீர் உற்பத்தி பற்றி ஆராய்சியில் ஈடுபட முயன்றுகொண்டிருந்தார். அவர் அதை நிறைவு செய்தாரா இல்iயா என்பது தெரியவில்லை.......அதன் தொழில் நுட்பம் பற்றி படத்தை பார்க்க உங்களுக்கு புரியும். மேலும் அதை விளக்க விரும்பவில்லை.......
<img src='http://img192.exs.cx/img192/6513/sun8ik.jpg' border='0' alt='user posted image'>

மேற்குலக நாவீன முறைகள் பற்றி விபரிக்கவில்லை......

மற்றைய விடயமான சேதன பண்ணையாக்கம் பற்றி பின்னர் கருத்தெழுதுகிறேன்.......எனது சிறுவயது முதலான பட்டறிவையும் அப்பப்ப படித்து வாசித்து அறிந்தவற்றையும்.கொண்டு.......
உடனடியாக எழுத நேரப்பற்றாக்குறை......

இன்னுமொரு முக்கியவிடயம் ஈழத்தில் ஆராய்ச்சிகள் எதுவுமே நடைபெறவில்ல என்றோ.....அல்லது யாரும் கவனிக்கவில்ல என்ற எண்ணத்துடனனோ நான் இவ்வாக்கங்களை முன்வைக்கவில்லை.........இங்கிருப்பவர்களும் அங்கிருப்பவர்களுக்கு உறுதுணையாக........தாம் கற்றவற்றை கொண்டு அங்குள்ள பிரச்சனைகளுக்கு தீர்வுகாண உதவவேண்டும்.......
களத்திற்கு பல்துறை சார்ந்தவர்களும் வருவதால்........ஒரு கவன ஈர்ப்புக்காகவே எழுதினேன்.........
யாரும் தப்பர்த்தம் கொள்ள வேண்டாம்.................


- anpagam - 03-26-2005

Quote:....ஈழத்தில் ஒரு அன்பர் கீழ் காட்டிய ஒரு மாதிரி கட்டமைப்பின் முலம் நன்னீர் உற்பத்தி பற்றி ஆராய்சியில் ஈடுபட முயன்றுகொண்டிருந்தார்.....
23 அல்லது 24 வருடங்களுக்குமுன் இவ் ஆராச்சி நடைபெற்றது... அதுபற்றி பெரியதாக வெற்றி அல்லது பாரியஅளவு பயன்பெறமுடியாமல் நாளடைவில் கைவிட்டிருக்கலாம் என நம்புகிறேன்....
செய்முறை:-
கடல்நீரில்மேல் அல்லது கைப்புநீரின்மேல் நீங்கள் காட்டியபடத்தில் உள்ளதுபோல் கண்ணாடியில் சூரியஒளியை பாச்சி உள்ளேநீராவிஆகும் தண்ணியை நன்னீர் ஆக்கும் முறை அது.


- KULAKADDAN - 03-26-2005

anpagam Wrote:
Quote:....ஈழத்தில் ஒரு அன்பர் கீழ் காட்டிய ஒரு மாதிரி கட்டமைப்பின் முலம் நன்னீர் உற்பத்தி பற்றி ஆராய்சியில் ஈடுபட முயன்றுகொண்டிருந்தார்.....
23 அல்லது 24 வருடங்களுக்குமுன் இவ் ஆராச்சி நடைபெற்றது... அதுபற்றி பெரியதாக வெற்றி அல்லது பாரியஅளவு பயன்பெறமுடியாமல் நாளடைவில் கைவிட்டிருக்கலாம் என நம்புகிறேன்....
செய்முறை:-
கடல்நீரில்மேல் அல்லது கைப்புநீரின்மேல் நீங்கள் காட்டியபடத்தில் உள்ளதுபோல் கண்ணாடியில் சூரியஒளியை பாச்சி உள்ளேநீராவிஆகும் தண்ணியை நன்னீர் ஆக்கும் முறை அது.
அப்ப நடந்தத பற்றி தெரியல அன்பகம்.................
ஆனா..........கடந்தவருடம் வட்டக்கச்சியில் நடந்த கண்காட்சியில் வைத்திருந்தார்கள்........அங்கு தான் இவ்வடிப்படை அமைப்பில் சிறிய மாற்றங்களை......செய்து.........அவ்வாறு செய்யமுயற்சிப்பதாக அறிய முடிந்தது.........


- kuruvikal - 03-26-2005

இதே அடிப்படையில் இஸ்ரேல் மற்றும் சில மத்திய கிழக்கு நாடுகள் கடல் நீரை நன்னீராக்குகின்றன.... அவர்கள் கடல் நீரைச் அறைகளுக்குள் காற்றாலைகள் மூலம் சிவிறியடித்து ஒளித் தெறிப்பின் அளவைக் கூட்டி ஆவியாகும் அளவைக் அதிகரித்து மீண்டும் சேகரிப்பான் பகுதியில் குளிர்நீரைப் பாய்ச்சி ஒடுக்கிகள் மூலம் நீரை ஒடுங்க வைத்து நன்னீராகச் சேகரிக்கின்றனர்...! இதைப் பாரிய அளவில் செய்யும் போது அங்கிருந்து பெறப்படும் குறித்த அளவு நன்னீரைக் கொண்டு வளர்ப்பூடகங்கள் தயாரித்துப் பயிர் செய்கைகளையும் அதே இடத்தில் செய்கின்றனர்... சில உற்பத்தி நிலையங்கள் பாரிய அளவில் கடலில் அமைக்கப்பட்டுள்ளமையை ஒரு சஞ்சிகையில் கண்டு வாசித்தோம்..! Idea

தகவலுக்கு நன்றி குளக்காட்டான்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->