Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சைவ சூப்
#12
பீட்ரூட் சூப்
<img src='http://thatstamil.indiainfo.com/images26/beetroot_soup1-250.jpg' border='0' alt='user posted image'>

தேவையான பொருட்கள்:

பீட்ரூட் அரை கிலோ

வெங்காயம் 1

எண்ணெய் 3 மேஜைக் கரண்டி

உருளைக்கிழங்கு 1

துருவிய எலுமிச்சம் பழத் தோல் அரைக் கரண்டி

எலுமிச்சம் பழச் சாறு 1 தேக்கரண்டி

உப்பு, மிளகுத்தூள் தேவைக்கேற்ப

செய்முறை:

பீட்ரூட், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் தோலைச் சீவி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். எலுமிச்சம் பழத் தோலை துருவி எடுத்துக் கொள்ளவும்.

எண்ணெயை சுட வைத்து வெங்காயத்தை இரண்டு நிமிடம் வதக்கவும்.

பிறகு, நறுக்கிய பீட்ரூட், உருளைக்கிழங்கு துண்டுகள், துருவிய எலுமிச்சம் பழத் தோல், தண்ணீர் ஆகியவற்றைச் சேர்க்கவும். 15 நிமிடங்கள் வரை இவற்றை கொதிக்க விடவும்.

காய்கறிகள் வெந்தவுடன் அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். எலுமிச்சம் பழச் சாற்றையும் சேர்த்து சுமார் 10 நிமிடம் கொதிக்க விடவும். புதினா இலை, கிரீம் சேர்த்து சூடாகப் பறிமாறவும்.


தேங்காய் பால் சூப்
<img src='http://thatstamil.indiainfo.com/images26/coconut-soup3-250.jpg' border='0' alt='user posted image'>
தேவையான பொருட்கள்:

தேங்காய் பால் அரை முடியில் எடுக்கப்பட்டது

பாதாம் பருப்புத் தூள் ஒரு மேசைக் கரண்டி

சீரகம 1 தேக்கரண்டி

கடுகு 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி

கடலைப்பருப்பு 1 மேசைக் கரண்டி

பெய வெங்காயம் 1

செய்முறை:

தேங்காய்ப் பால், கடுகு, வெங்காயம் நீங்கலாக மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து மசாலா தயார் செய்து கொள்ள வேண்டும். காய்கறி வேக வைத்த சாறு மூன்று கப்புடன் மசாலாவைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கடுகு மற்றும் அந்த வெங்காயத்தை நெய்யில் வதக்கி சூப்புடன் சேர்த்துக் கொள்ளவும். இரண்டு கொதி வந்ததும் தேங்காய்ப் பாலை ஊற்றிக் கரண்டியால் கிளறிவிடவும். சில நிமிட கிளறலுக்குப் பின் சூடான தேங்காய்ப் பால் சூப் ரெடி!
Reply


Messages In This Thread
சைவ சூப் - by hari - 03-23-2005, 07:29 AM
[No subject] - by eelapirean - 03-23-2005, 07:34 AM
[No subject] - by hari - 03-23-2005, 07:35 AM
[No subject] - by shobana - 03-23-2005, 11:54 AM
[No subject] - by thamizh.nila - 03-23-2005, 01:09 PM
[No subject] - by tamilini - 03-23-2005, 02:18 PM
[No subject] - by THAVAM - 03-23-2005, 10:19 PM
[No subject] - by vasisutha - 03-23-2005, 11:31 PM
[No subject] - by kavithan - 03-24-2005, 12:37 AM
[No subject] - by Malalai - 03-24-2005, 01:09 AM
[No subject] - by Malalai - 03-24-2005, 01:12 AM
[No subject] - by hari - 03-25-2005, 06:24 AM
[No subject] - by kavithan - 03-26-2005, 03:20 AM
[No subject] - by Malalai - 03-26-2005, 04:07 AM
[No subject] - by hari - 03-26-2005, 05:28 AM
[No subject] - by தூயா - 03-26-2005, 05:32 AM
[No subject] - by hari - 03-26-2005, 05:43 AM
[No subject] - by தூயா - 03-26-2005, 05:54 AM
[No subject] - by thivakar - 03-26-2005, 07:55 AM
[No subject] - by hari - 03-26-2005, 08:01 AM
[No subject] - by tamilini - 03-26-2005, 02:03 PM
[No subject] - by தூயா - 03-26-2005, 03:54 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)