03-24-2005, 04:20 PM
இலங்கை தேசிய சமாதான பேரவை தனது ஏ-9 புகைப்படக் கண்காட்சியை அடுத்த மாதம் 4 ஆம் திகதி தொடக்கம் 6 ஆம் திகதிவரை யாழ்ப்பாண நூலகத்தில் நடாத்த ஏற்பாடு செய்துள்ளது.
இப்புகைப்படக் கண்காட்சியின் அனைத்துப் புகைப்படங்களும் இலங்கையில் 20 வருடங்களுக்கு மேலாக வசிக்கும் யேர்மனி புகைப்படப்பிடிப்பாளரான வோல்டர் கெலர் என்பவருடையதாகும்இப்புகைப்படங்கள் யுத்த நிறுத்ததுக்கு பின்னர் ஏ-9 வீதியில் மக்கள் வாழ்க்கை மாறுதல் அடைந்த விதம் தொடர்பானவையாகும். இப்புகைப்பட கண்காட்சியில் 120 புகைப்படங்கள் உள்ளடங்கப்பட்டுள்ளது.
இப்புகைப்பட கண்கண்காட்சி ஏ-9 வீதியினுடாக தங்களை அழைத்துச் செல்லும் முதலாவது புகைப்படகண்காட்சியானது கண்டி குயின்ஸ் ஹோட்டலில் நடத்தப்பட்டது. அங்கு சிங்கள பேரினவாதிகளின் எதிர்ப்புக்கள் பல மேற்கொள்ளப்பட்டன. ஏ-9 பாதையின் முதலாவது மைல்கல் கண்டி குயின்ஸ் ஹோட்டலருகில் என்ற காரணத்தினால் முதலாவது கண்காட்சி கண்டியில் நடத்தப்பட்டது.
யாழ்பாண நூலகத்தின் அருகே ஏ-9 வீதி நிறைவடைகின்றது. ஆதலால் இரண்டாவது கண்காட்சியை யாழ்ப்பாண நூலகத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டதன் பின் இப்புகைப்படக் கண்காட்சி ஏ-9 வீதியினூடாக கிளிநொச்சி வவுனியா போன்ற பிரதேசங்களிலும் மிகிந்தலை தம்புள்ள மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களிலும் இக்கண்காட்சி நடத்தப்படவுள்ளதாக தேசிய சமாதான பேரவையின் சிரேஷ்ட ஊடக அலுவலர் சுதேஷ் த சில்வா அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பிரதேசத்தின் இக்கண்காட்சிக்கான இணைப்பாளராக அருட்தந்தை சிஜி.ஜெயக்குமார் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதினத்தில்