03-24-2005, 02:44 PM
ஜனாதிபதியாகும் சகல தகுதியும் தமக்கிருப்பதாக சபையில் மார்தட்டினார் மகேஸ்வரன்
......இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயுள்ளது. ஒருவருக்கு அநீதி நடந்தால் நீதிமன்றுக்குப் போக வேண்டும். ஆனால் இங்கு நீதிமன்றிலேயே அநீதி நடக்கின்றது. நீதிபதிகள் பக்கச் சார்பாக நடந்து கொள்கிறார்கள். நீதிமன்றங்கள் மூலம் அரசியல் பழிவாங்கல்கள் நடக்கின்றன.
ஜனாதிபதி நிதியத்தில் 24 மில்லியன் ரூபா மோசடி இடம்பெற்றுள்ளது. இதை நாம் எந்த நீதிமன்றுக்குச் சென்று முறையிடுவது?
ஜனாதிபதி முறையை ஒழிப்பது குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும். இந்த நாட்டிலுள்ள 1 கோடி 80 இலட்சம் மக்களின் நலனா? தனிப்பட்ட ஒருவரின் நலனா? என்பதை அனைவரும் யோசியுங்கள். இந்த நாட்டுக்கு நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையே தேவை.
கூட்டரசாங்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக யாரை நியமிப்பது என்பதில் இழுபறிப்படுகின்றார்கள். எமது கட்சியில் இவ்வாறான பிரச்சினைகள் இல்லை. ஜனாதிபதியாகக் கூடிய அனைத்துத் தகுதிகளும் என்னிடம் உண்டு. யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். கொழும்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். என்னை எங்கு நிறுத்தினாலும் நான் வெற்றி பெறுவேன். என்னைச் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்..........
தினக்குரலில்