03-24-2005, 02:29 PM
தென்னிந்திய முஸ்லிம் மார்க்க அறிஞர் நேற்று அதிகாலை நாடு கடத்தப்பட்டார்
இலங்கைக்கு வருகை தந்து இங்கு இஸ்லாமிய மதப் போதனையில் ஈடுபட்டிருந்த தென்னிந்திய மார்க்க அறிஞர் மௌலவி பி.ஜெயினுலாப்தீன் நேற்று புதன்கிழமை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நாடு கடத்தப்பட்டுள்ளார்.....
......கடந்த இரண்டு வார காலமாக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மதபோதனையில் ஈடுபட்டு வந்த இவர் இறைவனை அடைவதற்கு இறை தூதர்களின் உதவி தேவையில்லை எனப் பிரசாரம் செய்து வருகிறார். ஆனால் இந்தக் கருத்தை இஸ்லாமியர்களில் ஒரு பகுதியினர் ஏற்க மறுத்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் மாலை மருதானை எல்பின்ஸ்டன் மண்டபத்தில் இவரது போதனை நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்த போது அங்கு பிரவேசித்த மற்றுமொரு இஸ்லாமியக் குழுவினர் வன்முறையில் ஈடுபட்டதன் காரணமாக இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் இருவர் காயமடைந்திருந்தனர்.
இதையடுத்து அங்கு வந்த பொலிஸார் இந்நிகழ்ச்சியைத் தடைசெய்திருந்தனர். அத்துடன் இவரைக் கைது செய்த பொலிஸார் நேற்று அதிகாலை இவரை நாடு கடத்தியுள்ளனர்......
........காத்தான்குடி மெத்தைப் பள்ளிவாசல் முன்றிலிலிருந்து புறப்பட்ட நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் பிரதான வீதிகள் ஊடாக பிரதேச செயலகத்தைச் சென்றடைந்தனர். இவ்வார்ப்பாட்டத்தில் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா கொழும்பைச் சேர்ந்த மௌலவி நியாப் காத்தான்குடியைச் சேர்ந்த மௌலவி ஏ.எல். ஜஹியா ஆகியோரின் கொடும்பாவிகளும் எடுத்துச் செல்லப்பட்டன......
தினக்குரலில்