03-24-2005, 03:53 AM
அமெரிக்காவில் மிக மோசமாக மூளை பாதிக்கப்பட்ட நோயாளிக்கான சட்டப்போராட்டத்தில் மீண்டும் ஒரு தோல்வி
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39484000/jpg/_39484139_203b_terri_ap.jpg' border='0' alt='user posted image'>
அமெரிக்காவில், மிக மோசமாக மூளை பாதிப்படைந்த , டெர்ரி ஷியாவோ என்ற பெண்ணின் பெற்றோர்கள், அவளை, உயிருடன் வைத்திருக்க தாங்கள் நடத்தி வரும் நீண்ட சட்டப்போராட்டத்தில் தற்போது மேலும் ஒரு தோல்வி கண்டுள்ளனர்.
நள்ளிரவில் விசாரணை நடத்திய ஒரு மேல்முறையீட்டு நீதிமன்றம், அவருக்கு மீண்டும் செயற்கை குழாய் வழியாக உணவு அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது.
அவரது கணவர், அவர் கண்ணியத்துடன் இறக்க அனுமதிக்கப்படவேண்டும் என்று புளோரிடா மாநில நீதிமன்றத்தில் வாதாடியதை அடுத்து , இவ்வாறு செயற்கைக்குழாய் மூலம் அவருக்கு உணவளிப்பது , வெள்ளியன்றிலிருந்து நிறுத்தப்பட்டது.
இந்த மிகச்சமீபத்திய தீர்ப்புக்குப் பின்னர்,ஷியாவோவின் பெற்றோர், தாங்கள் இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக அறிவித்தனர்.
ஆனால் இது அமெரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு செல்லுமா என்பது தற்போது நிச்சயமாகவில்லை என்று வாஷிங்டனில் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.
ஷியாவோவின் கணவர், அவர் , 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மாரடைப்பு ஏற்பட்டதிலிருந்து ஒரு நிரந்தரமான, முற்றிலும் உணர்வுகளும் உடலும் செயலற்ற நிலையில் இருப்பதாக கூறுகிறார்.
ஆனால் அவரது பெற்றோர்களோ அவர் மீண்டும் குணமடையக்கூடும் என்கிறார்கள்.
BBC Tamil

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>