03-24-2005, 03:50 AM
15 ஆண்டாக கோமாவில் இருக்கும் அமெரிக்க பெண்ணுக்கு உணவு அளிக்கும் கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு
அட்லாண்டா, மார்ச் 24: அமெரிக்காவில் கடந்த 15 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் டெர்ரி ஷியாவோ(41) என்ற பெண்ணுக்கு உணவு-நீர் வழங்கும் குழாயை மீண்டும் பொருத்துமாறு விடுத்த கோரிக்கையை அந்நாட்டு நீதிமன்றம் மீண்டும் நிராகரித்து விட்டது.
டெர்ரி ஷியாவோ சுயநினைவின்றி 15 ஆண்டுகளாக படுத்தப்படுக்கையாக இருப்பதால் அவருக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கும் குழாயை துண்டிக்குமாறு, அவரது கணவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் புளோரிடா நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியது.
அதன் பேரில் ஷியாவோவுக்கு உணவு, தண்ணீர் கொடுக்கும் குழாய் வெள்ளிக்கிழமை துண்டிக்கப்பட்டது. ஆனால், இந்நடவடிக்கைக்கு ஷியாவோவின் பெற்றோர் பாப் மற்றும் மேரி சின்டர் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அப்பெண்ணுக்கு மீண்டும் உணவு-தண்ணீர் குழாயை பொருத்த வகைசெய்யும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், ஷியாவோவின் பெற்றோர்கள் புளோரிடா நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மூன்று நீதிபதிகள் கொண்ட மத்திய நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அவர்கள் தங்கள் மனுவில், ஷியாவோவுக்கு மீண்டும் உணவுக்குழாய் இணைப்பு தர உத்தரவிடவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஷியாவோவின் பெற்றோர் கோரிக்கையை நிராகரித்தனர்.
இந்தத் தீர்ப்பையும் எதிர்த்து ஷியாவோவின் தாயார் மேரி சின்டர் மேல்முறையீடு செய்வார் என்று அவரது வழக்கறிஞர் கூறியிருக்கிறார். மேலும் தன்மகள் ஷியாவோ விரைவாக மெலிந்து வருகிறார், எந்த நேரத்திலும் அவர் இறக்கக்கூடும் என்று சின்டர் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், ஷியோவோவுக்கு உணவு, தண்ணீர் வழங்குவது நிறுத்தப்பட்டால் இரண்டு வாரம் தான் அவர் உயிர்வாழ முடியும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். கோமா பெண்ணின் சர்ச்சை அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>