03-23-2005, 11:49 PM
தமிழினி குருவிகள் உங்கள் இருவருக்கும் நடந்த சம்பவம் பற்றி முழுமையான தகவல்கள் தெரியாது. பிறகெதற்கு வீண் வாதம். நடிகர்கள் நடிகைகள்வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் அச்சொட்டாக பத்திரிகையில் வருவதில்லை. எவரின் கை ஓங்கி உள்ளதோ அவர் சார்ந்த செய்திகளுக்கே முக்கியத்துவம் கிடைக்கும். அத்துடன் அவர்களின் வாழ்க்கை சம்பவத்தை வைத்து மொத்த ஆண்கள் மீதோ அல்லது பெண்கள் மீதோ பழி போடும் முடிவை நாம் எடுக்க முடியாது. இவையெல்லாம் தனிநபர்களின் பலவீனம். எல்லா மனிதர்களுமே பலவீனங்கள் உடையவர்கள் தான். இதை ஏற்றுக்கொள்ளாத எந்த கொள்கைகளும் கோட்பாடுகளும் வெறும் கோசங்கள் தான். எந்த அறிஞர்கள் சிந்தாந்திகள் புரட்சிவாதிகளின் தனி வாழ்வை எடுத்துப் பார்த்தாலும் அங்கே தனி மனித பலவீனங்களை காணலாம். ஆக------- வீணே வாதம் செய்ய முதல் அந்த சம்பவங்களில் நம்மை இருத்தி அதன் சரி பிழைகளை ஆராயும் மனப்பக்குவம் நமக்கு தேவை. இதுவே சமூகத்திற்கான ஆரோக்கியமான கருத்துக்களாய் அமையும்.
.
.!!
.!!

