Yarl Forum
நடிகை ஆர்த்தி தற்கொலை முயற்சி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: நடிகை ஆர்த்தி தற்கொலை முயற்சி (/showthread.php?tid=4690)

Pages: 1 2 3


நடிகை ஆர்த்தி தற்கொலை முயற்சி - Mathan - 03-23-2005

ஆர்த்தி அகர்வால் தற்கொலை முயற்சி - காதல் கைகூடாததால் விபரீத முடிவு

<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/aarthi-tarun-400.jpg' border='0' alt='user posted image'>

தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்பவர் ஆர்த்தி அகர்வால். தருணுடன் முதல் படத்தில் ஜோடி சேர்ந்த ஆர்த்தி அதனைத்தொடர்ந்து சில படங்களிலும் தருணுடனேயே இணைந்து நடிக்க நாளடைவில் இருவருக்குள்ளும் காதல் மலந்தது. இவர்களின் காதல் பற்றி பல பத்திரிகைகளும் போட்டிப்போட்டுக்கொண்டு கிசுகிசு எழுதி வந்தன.

ஆரம்பத்தில் கிசுகிசுக்களை மறுத்து வந்த தருணும் ஆர்த்தி அகர்வாலும் ஒரு கட்டத்தில் அதுபற்றி மௌனம் சாதித்தது இவர்களின் காதல் உண்மை என்பதை பறைசாற்றுவதாக இருந்தது. இது ஒரு பக்கம் இருக்க தருணின் வீட்டில் உள்ளவர்கள் இவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டவில்லை என்று மீண்டும் பத்திரிகைகளில் செய்தி கசிந்தது.

இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன் பத்திரிகையாளர்களை சந்தித்த தருண் எனக்கும் ஆர்த்திக்கும் காதல் இல்லை கல்யாணம் செய்யும் ஐடியாவும் இல்லை என்று திட்டவட்டமாக தனது எண்ணத்தை அறிவித்தார். தருணின் இந்த அறிவிப்பை பத்திரிகை வாயிலாக தெரிந்துகொண்டதிலிருந்து ஆர்த்தி அகர்வால் மனம் ஒடிந்து போனாராம். ஆர்த்தியின் பெற்றோர்கள் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் யாரையும் சந்திக்காமல் தனது அறையிலேயே கதவை பூட்டிக்கொண்டு உள்ளேயே இருந்த ஆர்த்தி ஒரு கட்டத்தில் மனம் வெறுத்துப்போய் கழிவறையை சுத்தம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த ஆசிட்டை எடுத்து குடித்து மயக்கம்போட்டு விழுந்துள்ளார்.

இதனை அறிந்த அவரது வீட்டார் ஆர்த்தியை உடனடியாக ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த செய்தி காட்டு தீ போல் பரவ ஐதராபாத்திலுள்ள ரசிகர்கள் பலர் மருத்துவமனையின் முன் திரண்டுள்ளனராம். அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் ஆர்த்திக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தருண்-ஆர்த்தி அகர்வால் நடித்த 'சொகடு' படம் ஆந்திராவில் வெளியாகவுள்ள நிலையில், அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் பிரசாந்த் கதாநாயகனாக நடித்த 'வின்னர்' படத்தில் முதன்முதலாக கதநாயகியாக நடிக்க ஆர்த்தி அகர்வாலே தெர்வுசெய்யப்பட்டார். ஆனால் சில பிரச்சனை காரணமாக பின்னர் கிரண் கதாநாயகியாக நடிக்க ஆர்த்தி ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியது குறிப்பிடத்தக்கது.

சினிசவுத்


- tamilini - 03-23-2005

:? என்ன இதுகளிற்கு இந்த லூசு எப்ப தான் மாறப்போகுதோ.. காதல் இல்லாவிட்டால் சாதல் என்பது இது தானோ..?? :twisted: :evil: :evil:


- kuruvikal - 03-23-2005

இதை குருவிகளும் பார்த்தன...இப்படியான செய்திகளை சுய தணிக்கை செய்வது நல்லம் போலத்தான் தெரியுது...ரோமியோ யூலியட் முதல் பல உதாரணங்களைக் காட்டியே இளையவர்களின் மனதில் காதலை வெறியாக்கி...அவர்களை அதற்கு அடிமையாக்கி...அவர்களின் வாழ்வை குறுகிய வட்டத்துக்குள் நிலைப்படுத்தி...காதல் தோல்வி என்பதை வாழ்வியல் முடிவாகக் காட்டிச் சீரழிக்கும் இப்படியான சமூக விரோதச் செய்திகள் அவசியம் தானா...???!

இவர்கள் மீது கோபத்தைத் தவிர அனுதாபம் வரவேயில்லை...! :evil: Idea


- sinnappu - 03-23-2005

என்ன ஆள் முடியேல்லையேயயயய??????
:wink: :wink: :wink: :wink: :wink: :wink:
பிள்ளை வெளிநாட்டுக்கு வா பிள்ளை வாழ்க்கை தர ஆள் ரெடி
:wink: :wink: :wink: :wink: :wink:


- tamilini - 03-23-2005

ம் என்ன செய்கிறது பெண்களே ஆண்களை நம்பாதேங்க என்றால் கேக்குதுகளோ.. :evil:


- kuruvikal - 03-23-2005

அப்படி என்ன சொல்லிப்போட்டான் பொடியன்.. திருமணம் செய்ய ஏலாது என்றுதானே தவிர உன் காதல் வேணாம் என்றா சொன்னான்.. இல்லாத காதலை அவனென்ன வரவலைக்கவா முடியும்.... அது வரேக்க அவனாவே சொல்லியிருப்பான் தானே....அதுபோக காதலிக்க வெளிக்கிடுறவைக்குப் பொறுமை அவசியம்...அது ஆணா இருக்கட்டும் பெண்ணா இருக்கட்டும்..! பொறுமையும் சகிப்புத்தன்மையும் புரிந்துணர்வும் இல்லாதவைக்கு காதல் என்ன வாழ்க்கை என்ன வேண்டிக் கிடக்கு...! Idea


- kuruvikal - 03-23-2005

sinnappu Wrote:என்ன ஆள் முடியேல்லையேயயயய??????
:wink: :wink: :wink: :wink: :wink: :wink:
பிள்ளை வெளிநாட்டுக்கு வா பிள்ளை வாழ்க்கை தர ஆள் ரெடி
:wink: :wink: :wink: :wink: :wink:


உங்க சீரழிக்கிறது காணாதென்று அங்க இருந்துமோ...வேண்டிக் கிடக்கு...! உங்க சந்திக்கு சந்தி நின்று அண்டர் ஏஜ் பெட்டையளோடும் சேட்டை விடினம்...உங்கட பொடியள்...கொஞ்சம் காதில போட்டு வையுங்கோ..தூக்கி உள்ள போடப் போறாங்கள்...! :wink: Idea :roll:


- tamilini - 03-23-2005

Quote:அப்படி என்ன சொல்லிப்போட்டான் பொடியன்.. திருமணம் செய்ய ஏலாது என்றுதானே தவிர உன் காதல் வேணாம் என்றா சொன்னான்.. இல்லாத காதலை அவனென்ன வரவலைக்கவா முடியும்.... அது வரேக்க அவனாவே சொல்லியிருப்பான் தானே....அதுபோக காதலிக்க வெளிக்கிடுறவைக்குப் பொறுமை அவசியம்...அது ஆணா இருக்கட்டும் பெண்ணா இருக்கட்டும்..! பொறுமையும் சகிப்புத்தன்மையும் புரிந்துணர்வும் இல்லாதவைக்கு காதல் என்ன வாழ்க்கை என்ன வேண்டிக் கிடக்கு...!

ஓம் ஓம் காதலிக்கும் மட்டும் காதலிப்பியள் நல்லாய் திரிவியள் பிறகு. காதலிக்கேல்ல கலியாணம் பண்ணிக்கிற ஐடியாவும் இல்லை. என்டுவியள் இதில நியாயம் வேறை வேண்டிக்கிடக்கு. இப்படி இவை செய்யிற கூத்துகள் வெளியில வாறதில்லை. அதால பெண்ணுகள் தான் ஏமாத்திறாளவை என்று கதை வேறை. :twisted: :twisted:


- eelapirean - 03-23-2005

:evil: :evil: :evil:


- kuruvikal - 03-23-2005

tamilini Wrote:
Quote:அப்படி என்ன சொல்லிப்போட்டான் பொடியன்.. திருமணம் செய்ய ஏலாது என்றுதானே தவிர உன் காதல் வேணாம் என்றா சொன்னான்.. இல்லாத காதலை அவனென்ன வரவலைக்கவா முடியும்.... அது வரேக்க அவனாவே சொல்லியிருப்பான் தானே....அதுபோக காதலிக்க வெளிக்கிடுறவைக்குப் பொறுமை அவசியம்...அது ஆணா இருக்கட்டும் பெண்ணா இருக்கட்டும்..! பொறுமையும் சகிப்புத்தன்மையும் புரிந்துணர்வும் இல்லாதவைக்கு காதல் என்ன வாழ்க்கை என்ன வேண்டிக் கிடக்கு...!

ஓம் ஓம் காதலிக்கும் மட்டும் காதலிப்பியள் நல்லாய் திரிவியள் பிறகு. காதலிக்கேல்ல கலியாணம் பண்ணிக்கிற ஐடியாவும் இல்லை. என்டுவியள் இதில நியாயம் வேறை வேண்டிக்கிடக்கு. இப்படி இவை செய்யிற கூத்துகள் வெளியில வாறதில்லை. அதால பெண்ணுகள் தான் ஏமாத்திறாளவை என்று கதை வேறை. :twisted: :twisted:

சரி உங்க வழியில் வந்து கதைச்சாக் கூட...அவன் அந்த நடிகையைக் காதலிச்சதுக்கு என்ன ஆதாரம் இருக்கு...பெண்கள் சும்மாவும் சொல்லுவினம் தானே...அவன் நடிகன் வசதியானவன் என்பதற்காக...என்னைக் காதலிச்சான் இப்ப கைவிட்டுட்டான் அந்தக் கவலையில தற்கொலை செய்யப் போனன் என்று...ஆனா அதற்குக் காரணம் வேறேதாவதாக இருக்கும்...பெண்களின் வாய்மூலக் கூற்றுக்களை நம்ப ஏலாது ஆதாரம் வேணும்..அவன் காதலிச்சான் சுத்தித் திருந்தான்..இப்ப ஏலாது என்று சொல்லுறான் என்பதை நிரூபிக்க....!

பெண்கள் நல்லாவே கதையாலும் கண்ணீராலும் சமூகத்தைச் சுத்தி பிழைச்சிட்டினம்...எனியும் பெண்களின் கண்ணீருக்கும் பசப்பு வார்த்தைகளுக்கும் தற்கொலை போன்ற கோழைத்தனமான செய்கைகளுக்கும் சமூகம் இரங்க வேணும் என்று எதிர்பார்க்கக் கூடாது... எந்த ஆதாரமும் இல்லாத... அவனிடம் கூட இல்லாத காதலை... அவனிடம் உள்ளதாகக் காட்டி...அவனை இப்படி சந்திக்கிழுக்கிறது ஒட்டுமொத்த பெண்களையுமே கேவலமாக் காட்டுறதாத்தான் தெரிகிறது...அதுபோக ஆண்கள் இப்படியான பெண்கள் தொடர்பில் விழிப்பா இருக்க வேணும் எண்டதையும் தான் சொல்லுது...எதுக்கும்..பொறுத்திருந்து பார்ப்பமே..ஆதாரம் கிடைக்குதோ என்று...! எங்க கிடைக்கப் போகுது...பொய்களுக்கு ஆதாரம்...! :twisted: Idea


- tamilini - 03-23-2005

அந்த நடிகன் காதலிச்சிருக்க மாட்டான் என்றதிற்கு என்ன ஆதாரம் சும்மா வாயால நான் காதலிக்கவில்லை என்றால் சரியா.. நீங்கள் சொன்ன அத்தனையையும் நாங்களும் திருப்பிச்சொல்லுறம். ஆண்கள் பெண்கள் ஏமாற்றிப்போட்டார்கள் என்று தண்ணியடிக்கிவைக்கும் தாடி வைக்கிறவைக்கும். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 03-23-2005

[quote=tamilini]அந்த நடிகன் காதலிச்சிருக்க மாட்டான் என்றதிற்கு என்ன ஆதாரம் சும்மா வாயால நான் காதலிக்கவில்லை என்றால் சரியா..

செய்யாத ஒன்றுக்கு ஆதாரம் கேக்குறீங்களே... செய்த ஒன்றுக்குத்தான் ஆதாரம் காட்ட முடியும்...! உங்க கருத்தை அந்த நடிகை சார்ப்பில வைத்த போது நீங்க அந்த நடிகன் காதலிச்சு ஏமாத்திட்டான் என்பதைச் சொல்ல முற்பட்ட போது ஆதாரத்தைத் தூக்கிப் போட்டிருக்க வேண்டும்...முடியல்ல இல்ல...இதில இருந்து தெரிகிறது அந்த நடிகையின் குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் இல்லை என்று...அந்த வகையில் அவன் ஒரு அப்பாவி ஆண் மகன்...! பெண்களால் வஞ்சனை வலை வீசப்பட்டு வஞ்சிக்கப்பட இருந்த ஆண் மகன் என்றே தெரிகிறது...! அவள் செய்ய நினைத்த வஞ்சம் அந்தப் பெண்ணையே காவு கொண்டது போலும்....! :twisted: Idea


- tamilini - 03-23-2005

அதென்னங்க அது.. அது தான் செய்தியிலையே சொல்லியிருக்காங்க எல்லோ.. கொஞ்சக்காலம் மறுப்பு தெரிவிக்காமல் இருந்தார் என்று. ஆ ஆஆஆஆஆஅ அப்படி ஒன்றும் இல்லை என்றால்.. ஏன் மெளனமாய் இருந்தாரு.. அது போதாதா..??? :twisted: :evil:


- kuruvikal - 03-23-2005

tamilini Wrote:அதென்னங்க அது.. அது தான் செய்தியிலையே சொல்லியிருக்காங்க எல்லோ.. கொஞ்சக்காலம் மறுப்பு தெரிவிக்காமல் இருந்தார் என்று. ஆ ஆஆஆஆஆஅ அப்படி ஒன்றும் இல்லை என்றால்.. ஏன் மெளனமாய் இருந்தாரு.. அது போதாதா..??? :twisted: :evil:


மறுப்புத் தெரிவிக்காததை வைத்து காதல் வந்திவிட்டது என்று ஊகிக்க முடியாது...பல காரணங்களுக்காக அவர் அதைச் செய்யாதிருந்திருக்கலாம்...மறுப்புத் தெரிவித்தும் பலன் இல்லை என்று கண்டதால்...கிசுகிசுக்களுக்கு அவர் பின்னர் மறுப்புத் தெரிவிக்கவில்லைப் போலும்...! அதையே அந்த நடிகை காதலாகப் பார்த்தது அந்த நடிகனின் தவறல்ல...! காதலிச்சான் என்பதற்கு தகுந்த ஆதாரம் வேண்டும்...இது சாக்குப் போக்கு அம்சங்கள்...இதையெல்லாம் காட்டி இல்லாத காதலை இருக்கென்று சொல்லும் பெண்களுக்கு வக்காளத்து வேறு...! இப்படிப்பட்ட பெண்களை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்...! தகுந்த தண்டனைகளைப் பெற்றுக் கொடுத்து இப்படியான ஏமாற்றுப் பேர்வழிகள் சமூகத்தில் தலையெடுத்துப் பெருகாமல் இருக்க வசதி செய்ய வேண்டும்...! :twisted: Idea


- tamilini - 03-23-2005

என்னங்க நெருப்பில்லாமல் புகையாது.. ஏதோ நடந்தவடியாய் தானே வந்திருக்கு.. பொறுத்திருந்து பாப்பமே அந்த நடிகர் காதலிச்சாரோ இல்லையோ என்று... :evil:


- kuruvikal - 03-23-2005

நெருப்பில்லாமல் புகைக்காது என்பதிலும் பார்க்க பெண் அனுதாபம் பற்ற வைக்கப் புகைக்கிறது என்று சொல்லுங்க... சரி நாங்க ஏன் இதில தர்க்கிச்சு கோவிப்பான்...ஆதாரம் வரட்டும் என்ன நடக்குதென்று பார்ப்போம்..! எது எப்படியோ அந்த நடிகை விரைந்து குணம் பெற கடவுளை மனிதாபிமான ரீதியில் பிரார்த்திப்பம்...! Idea


- tamilini - 03-23-2005

ம் அதென்டா சரிதான். உண்மை எதுவென்று யாருக்கு தெரியும். அவங்க 2 பேருக்கும் தான். :mrgreen: :mrgreen:


- THAVAM - 03-23-2005

விடுங்கோ போசாமல் விடுஙங்கோ என்று எல்லோ சொல்லுகிறேன் ஒரு கூப்பன் குறையட்டும் ஏதோ அன்னை பூபதி இல்லாவிட்டால் அன்னை திரேசா போன்றவர்களைப் போல் ஒரு தியாகியைப்பற்றி போசுகிறதுபோல் எல்லோரும் பெரிசாக தூக்கிபிடிக்கிறீர்கள் அதுதான் சொல்லிப்போட்டன் விடுங்கோ என்று


- kuruvikal - 03-23-2005

தவத்தார் மனிதாபிமானத்தின் முன் எங்கள் அன்னையும் ஒன்றுதான் அன்னை பூபதியும் ஒன்றுதான் அன்னை திரேசாவும் ஒன்றுதான் அந்த நடிகையும் ஒன்றுதான் நீங்களும் ஒன்றுதான்... ஆனால் அவர் செய்த முட்டாள் தனமான வேலைதான்...அவரை மனிதன் என்ற நிலையில் கூட வைத்து நோக்க முடியாமல் செய்கிறது...! எனின் மனிதாபிமானத்தின் பெயரால் அவர் தானே தன்னை வருத்திக் கொண்டதைக் கூட மன்னித்து அவரைக் காப்பாற்ற வேண்டியது சக மனிதர்களின் கடமையே...! Idea


- kavithan - 03-23-2005

இப்ப என்னாச்சு.. ? :|