03-23-2005, 04:11 PM
ஆர்த்தி அகர்வால் தற்கொலை முயற்சி - காதல் கைகூடாததால் விபரீத முடிவு
<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/aarthi-tarun-400.jpg' border='0' alt='user posted image'>
தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்பவர் ஆர்த்தி அகர்வால். தருணுடன் முதல் படத்தில் ஜோடி சேர்ந்த ஆர்த்தி அதனைத்தொடர்ந்து சில படங்களிலும் தருணுடனேயே இணைந்து நடிக்க நாளடைவில் இருவருக்குள்ளும் காதல் மலந்தது. இவர்களின் காதல் பற்றி பல பத்திரிகைகளும் போட்டிப்போட்டுக்கொண்டு கிசுகிசு எழுதி வந்தன.
ஆரம்பத்தில் கிசுகிசுக்களை மறுத்து வந்த தருணும் ஆர்த்தி அகர்வாலும் ஒரு கட்டத்தில் அதுபற்றி மௌனம் சாதித்தது இவர்களின் காதல் உண்மை என்பதை பறைசாற்றுவதாக இருந்தது. இது ஒரு பக்கம் இருக்க தருணின் வீட்டில் உள்ளவர்கள் இவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டவில்லை என்று மீண்டும் பத்திரிகைகளில் செய்தி கசிந்தது.
இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன் பத்திரிகையாளர்களை சந்தித்த தருண் எனக்கும் ஆர்த்திக்கும் காதல் இல்லை கல்யாணம் செய்யும் ஐடியாவும் இல்லை என்று திட்டவட்டமாக தனது எண்ணத்தை அறிவித்தார். தருணின் இந்த அறிவிப்பை பத்திரிகை வாயிலாக தெரிந்துகொண்டதிலிருந்து ஆர்த்தி அகர்வால் மனம் ஒடிந்து போனாராம். ஆர்த்தியின் பெற்றோர்கள் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் யாரையும் சந்திக்காமல் தனது அறையிலேயே கதவை பூட்டிக்கொண்டு உள்ளேயே இருந்த ஆர்த்தி ஒரு கட்டத்தில் மனம் வெறுத்துப்போய் கழிவறையை சுத்தம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த ஆசிட்டை எடுத்து குடித்து மயக்கம்போட்டு விழுந்துள்ளார்.
இதனை அறிந்த அவரது வீட்டார் ஆர்த்தியை உடனடியாக ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த செய்தி காட்டு தீ போல் பரவ ஐதராபாத்திலுள்ள ரசிகர்கள் பலர் மருத்துவமனையின் முன் திரண்டுள்ளனராம். அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் ஆர்த்திக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தருண்-ஆர்த்தி அகர்வால் நடித்த 'சொகடு' படம் ஆந்திராவில் வெளியாகவுள்ள நிலையில், அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் பிரசாந்த் கதாநாயகனாக நடித்த 'வின்னர்' படத்தில் முதன்முதலாக கதநாயகியாக நடிக்க ஆர்த்தி அகர்வாலே தெர்வுசெய்யப்பட்டார். ஆனால் சில பிரச்சனை காரணமாக பின்னர் கிரண் கதாநாயகியாக நடிக்க ஆர்த்தி ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியது குறிப்பிடத்தக்கது.
சினிசவுத்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>