03-23-2005, 02:06 PM
இந்தியப் பிரதமரின் வாசஸ் தலத்தில் லால் ஜயவர்தனவின் நினைவு தின நிகழ்வு
இலங்கையின் தலைசிறந்த பொருளியல் நிபுணர்களிலொருவரான லால் ஜயவர்தனவின் நினைவு தின வைபவத்தில் கலந்துகொள்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதம் 6 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளார்.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகக் கல்விகற்ற லால் ஜயவர்தனவின் நினைவு தின வைபவம் இந்தியப் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தத்தில் நடைபெறவுள்ளது.
இந்நினைவு தின வைபவங்களில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும் இவ்வைபவத்தில் ஜனாதிபதி சந்திரிகா தன் சார்பில் நிதியமைச்சர் கலாநிதி சரத் அமுனுகமவை அனுப்பிவைக்க தீர்மானித்துள்ளார்.
இதேவேளை இந்த நினைவு தின வைபவத்திற்கு கலந்துகொள்ளச் செல்லும் ரணில் விக்கிரமசிங்க தனிப்பட்ட முறையில் இந்தியப் பிரதமரை எதிர்வரும் 8 ஆம் திகதி சந்திப்பார்.........
தினக்குரலில்