03-23-2005, 02:02 PM
முரளிக்கு வாழ்த்துக் கூற வீரவன்சவுக்கு சபாநாயகர் அனுமதி வழங்க மறுப்பு
இல்லற வாழ்வில் இணைந்து கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியின் உலக சாதனை வீரர் முத்தையா முரளிதரனுக்கு ஜே.வி.பி.யின் பிரசார செயலரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ஸ சபையில்திருமண வாழ்த்துக் கூற முற்பட்ட போது அதற்கு சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம்.லொக்கு பண்டார அனுமதி வழங்க மறுத்துவிட்டார்.
நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சபை கூடியதையடுத்து இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்களைத் தொடர்ந்து விஷேட கூற்றொன்றை வெளியிட விமல் வீரவன்ஸ சபாநாயகரிடம் அனுமதி கோரி விட்டு முரளிதரனுக்கு தனது திருமண வாழ்த்தைக் கூற முற்பட்டார்.
விமல் வீரவன்ஸவின் இந்நடவடிக்கையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக ஆட்சேபித்ததுடன் விசேட கூற்றின் மூலம் இவ்வாறானதொரு வாழ்த்தை வெளியிட முடியாதென சபாநாயகருக்கு சுட்டிக் காட்டினார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர்பொது நபர் குறித்த இவ்வாறான வாழ்த்துக்கள் பிரேரணைகளை முன்வைக்கும் போது அதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் முன் அனுமதி பெறப்பட வேண்டும். அதன் பின்னரே இவ்வாறான வாழ்த்துக்களை தெரிவிக்க முடியும். எனவே விமல் வீரவன்ஸவுக்கு இக் கூற்றை வெளியிட அனுமதிக்க முடியாது.
ஏற்கனவே நாம் அனைவரும் முரளிதரனுக்கு நேரடியாக வாழ்த்துக் கூறியுள்ளோம். பல அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் முரளிதரனின் திருமண வீட்டுக்கும் இந்தியாவுக்குச் சென்று முரளிதரனைப் போலவே சிறந்த வீரர்களான பிள்ளைகள் அவருக்கு கிடைக்க வேண்டுமென வாழ்த்திவிட்டு வந்துள்ளனர். எனவே சபையில் அவருக்கு வாழ்த்துக் கூற வீரவன்ஸ ஆசைப்பட வேண்டாம் என நகைச்சுவையாகக் கூறினார்........
தினக்குரலில்