03-23-2005, 05:28 AM
<span style='color:green'>அப்பளம் பொரிப்பதற்கு முன் எப்படி அப்பளம் செய்வது என்று பார்ப்போம் :evil: :evil:
<b>அரிசி அப்பளம் </b>
பச்சை அரிசி 1 கிலோ
எலுமிச்சம்பழம் 1
பெருங்காயம் சிறிதளவு
எள்ளு சிறிதளவு
தேங்காய் எண்ணெய் மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
அரிசியை நீர்விட்டு ஊறவிட வேண்டும், அரைமணி நேரம் கழித்து நீரை வடிய வைத்து அரிசியை எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அரிசியை வறுத்து எடுக்கவும்.
தேவையான நீரில் உப்பையும் பெருங்காயத்தையும் கரைத்துக் கொள்ளவும்.
இந்த நீரையும் தேய்த்த எள்ளையும் வறுத்து வைத்திருக்கும் அரிசியுடன் சேர்த்துப் பிசைந்து பெரிய உருண்டைகளாக உருட்டி, கல்லுரலில் போட்டு புரட்டிக் கொடுத்து இடித்துக் கொள்ளவேண்டும்.
இடிக்கும்போது எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் அம்மியில் வைத்து தேங்காய் எண்ணெய்த் தொட்டுக் கொண்டு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
இடித்து வைத்துள்ள மாவினை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி அரிசிமாவில் தோய்த்து அப்பளக் கட்டையினால் உருட்டி வட்ட வடிவமான அப்பளமாகச் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் சுத்தமான துணியை நிழலில் பரப்பி அதன் மீது அப்பளங்களைக் காயவிட வேண்டும்.
<b>உளுந்து அப்பளம்</b>
உளுத்தம் பருப்பு 2 கிலோ
சீரகம் 2 தேக்கரண்டி
பெருங்காயம் சிறிதளவு
அரிசி மாவு 250 கிராம்
வெண்டைக்காய் 2
பிரண்டை 6 அடி நீளம்
விளக்கெண்ணெய் 125 கிராம்
உப்பு தேவையான அளவு
உளுத்தம் பருப்பை நீர் விட்டு ஊற வைக்கவேண்டும். இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு நீரை வடிகட்டி உளுத்தம் பருப்பை வெயிலில் காய விடவேண்டும்.
உளுத்தம் பருப்பு நன்கு உலர்ந்ததும் மாவாக அரைத்துக் கொள்ளவும்.
பிரண்டையைச் சிறுசிறுத் துண்டுகளாக்கி அத்துடன் ஒரு வெண்டைக்காயையும், உப்பையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு சட்டியில் 1 லிட்டர் தண்ணீர் விட்டு, பிரண்டை விழுதைப் போட்டு கலக்கி அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.
கொதி வந்ததும் இறக்கி ஆறவிட்டு வடிகட்டிக் கொள்ளவும்.
உளுத்தம்பருப்பு மாவில் பெருங்காயத்தைச் சிறிது நீரில் கரைத்து ஊற்றி சீரகத்தை கலந்து பிரண்டை, உப்பு சேர்ந்த நீரைத் தெளித்து நான்கு அல்லது ஐந்து பெரும் உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
மாவு உருண்டைமீது லேசாக எண்ணெய் தடவி மாவை அம்மியில் வைத்து நன்றாக இடித்து எடுத்துக் கொள்ளவும்.
இடிக்கப்பட்ட மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி அரிசிமாவில் தோய்த்து, அப்பளக் கட்டையினால் உருட்டி வட்ட வடிவமான அப்பளமாகச் செய்து கொள்ளவும்.
பின்னர் சுத்தமான துணியை நிழலில் பரப்பி அதன்மீது அப்பளங்களைக் காயவிடவும்.
</span>