Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வில்லிசை - கலை
#37
நீண்ட இடைவெளிகளின் பின் மீண்டும் ஒருதரம் வில்லிசை ஒன்றைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. சின்ன வயதில் எங்கே சின்னமணி அவர்களின் வில்லிசை நடை பெற்றாலும் அங்கெல்லாம் எனது அப்பாவுடன் சென்று அவைகளைப் பார்த்து, கேட்டு ரசிப்பேன்.
புலம்பெயர்ந்த பின்னான பல இழப்புகளில் இப்படியான பாரம்பரிய கலை நிகழ்வுகளை கண்டு ரசிக்க முடியாத இழப்பும் பெரிய இழப்புத்தான்.

சில வருடங்களின் முன் (10, 12 வருடங்கள் இருக்கும்) யேர்மனியில் நடை பெற்ற ஒரு கலை நிகழ்வில் நாச்சிமார் கோயிலடி இராஜன் அவர்களின் வில்லிசையைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. அது மனதுக்குச் சந்தோசத்தைத் தந்திருந்தாலும், அதை முழுமையாக ரசிக்க முடியாத படி அன்றைய கலை நிகழ்ச்சி தொடங்கிய நேரத்திலிருந்து, மண்டபத்தின் உள்ளேயான ஒலிபெருக்கியின் அதிஉச்ச ஒலி, ரசனைக்கும் அப்பாலான தலையிடியைத்தான் தந்திருந்தது. இது இன்னும் எமது கலை நிகழ்வுகளில் சீர் செய்யப் படாத ஒரு பாரிய குறைபாடு.

இப்படியான எந்தத் தலையிடியும் இல்லாமல் பார்க்கக் கூடிய வகையில் கடந்தவாரம் TTN இல் ஒளிபரப்பான நாச்சிமார் கோவிலடி இராஜன் அவர்களின் வில்லிசையை ஒரு அன்பர் ஒளிப்பதிவு செய்து எனக்கு அனுப்பி வைத்தார். பார்க்கும் போது சந்தோசமாகத்தான் இருந்தது.

கதையின் மூலம் எனது என்பதால் கதை பற்றிய கருத்துக்கள் எதையும் என்னால் தர முடியவில்லை. ஆனால் அதை வில்லிசை ஆக்கித் தந்த நாச்சிமார் கோவிலடி இராஜன் அவர்களைப் பாராட்டாதிருக்க முடியவில்லை.
கதைக்குப் பொருத்தமாக பாடல்களை எழுதி அவற்றிற்குச் சரியான முறையில் மெட்டமைத்து, கதையில் எந்தவிதமான தொய்வும் ஏற்படாமல் மிகவும் அருமையாகச் செய்திருந்தார்.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது என்ன வென்றால் ஒரு மேடையில் நாம் பார்க்கும் வில்லிசையைப் போலவே அவரது முழு பாவமும் அமைந்திருந்தது. முக அசைவுகள், கை பாசைகள், குரல் வளம், எல்லாவற்றிற்கும் மேலாக அதனோடு மிக இயல்பாக ஒன்றி நின்று கதையைப் பாட்டுடன் நகர்த்திய விதம்.. எல்லாமே மிகவும் நன்றாக இருந்தன. நிறைந்த அனுபவமும், சீரான பயிற்சியும், இயல்பாக அவரோடு ஒன்றிய வில்லிசைக்கான திறனையும் அவரிடம் தாராளமாகக் காண முடிந்தது. [/color]

உண்மையைச் சொல்லப் போனால் அவரோடு மேடையில் பக்கப் பாட்டுப் பாடியவர்களுக்கும் அவருக்கும் இடையே இத்துறையில் பெரிய இடைவெளி இருந்தது போலவே எனக்குத் தோன்றியது.
[b]புலம்பெயர்மண்ணில் இத்துறையில் இவ்வளவு அனுபவம் உள்ள ஒருவர் இருப்பது பெரு மகிழ்ச்சியே.

நாச்சிமார் கோவிலடி இராஜன் அவர்களுக்கு மனதார்ந்த பாராட்டுக்கள்.

சந்திரவதனா
யேர்மனி
7.9.03
Nadpudan
Chandravathanaa
Reply


Messages In This Thread
[No subject] - by Paranee - 07-10-2003, 09:20 AM
[No subject] - by kuruvikal - 07-10-2003, 10:35 AM
[No subject] - by sOliyAn - 07-10-2003, 03:01 PM
[No subject] - by Mullai - 07-10-2003, 05:08 PM
[No subject] - by sOliyAn - 07-14-2003, 10:45 PM
[No subject] - by sOliyAn - 07-14-2003, 10:47 PM
[No subject] - by Paranee - 07-15-2003, 05:21 AM
[No subject] - by Alai - 07-15-2003, 06:14 AM
[No subject] - by Alai - 07-15-2003, 06:16 AM
[No subject] - by TMR - 07-15-2003, 07:27 AM
[No subject] - by Paranee - 07-15-2003, 07:27 AM
[No subject] - by sOliyAn - 07-15-2003, 04:08 PM
[No subject] - by TMR - 07-15-2003, 09:31 PM
[No subject] - by Guest - 07-16-2003, 10:50 AM
[No subject] - by sOliyAn - 07-16-2003, 07:54 PM
[No subject] - by Guest - 07-16-2003, 08:24 PM
[No subject] - by sethu - 08-12-2003, 06:52 AM
[No subject] - by nalayiny - 08-20-2003, 02:38 PM
[No subject] - by Chandravathanaa - 08-21-2003, 08:47 AM
[No subject] - by Guest - 08-21-2003, 09:38 AM
[No subject] - by Paranee - 08-21-2003, 09:48 AM
[No subject] - by Manithaasan - 08-22-2003, 01:12 AM
[No subject] - by sOliyAn - 08-22-2003, 02:23 AM
[No subject] - by Chandravathanaa - 08-22-2003, 05:23 AM
[No subject] - by kuruvikal - 08-22-2003, 04:53 PM
[No subject] - by sOliyAn - 08-23-2003, 12:39 AM
[No subject] - by Manithaasan - 08-23-2003, 11:25 PM
[No subject] - by Manithaasan - 08-31-2003, 01:45 AM
[No subject] - by Chandravathanaa - 08-31-2003, 07:10 PM
[No subject] - by Guest - 09-05-2003, 05:45 AM
[No subject] - by sOliyAn - 09-05-2003, 12:48 PM
[No subject] - by Guest - 09-05-2003, 02:43 PM
[No subject] - by Mullai - 09-05-2003, 08:33 PM
[No subject] - by Chandravathanaa - 09-07-2003, 01:36 PM
[No subject] - by kuruvikal - 09-08-2003, 06:28 AM
[No subject] - by Manithaasan - 09-08-2003, 08:26 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)