03-20-2005, 09:35 PM
Thusi Wrote:ரோகண விஜேவீரா இருந்த காலத்தில JVP இனவாதப் போக்கில் நடந்துகொள்ளவில்லை என்றுதான் நினைக்கிறேன். அவர் ஓரளவிற்கு புரடச்சிகர முற்போக்கான சிந்தனையாளராய் இருந்திருக்கவேணும். ஆனால் இப்ப இருந்திருந்தால் என்ன மாதிரி மாறியிருப்பாரோ தெரியேல்லை?
நான் கேள்விப்பட்டதிலிருந்து:
JVPயில் அங்கத்தினராக சேர்வதற்கு முன்னர் அவர்களுக்கு ஆறு வகுப்புக்கள் நடாத்தப்பட்டது. அதில் ஆறாவது வகுப்பு இந்திய எதிர்ப்பினை அடிப்படையாக கொண்டது. இந்திய எதிர்ப்பில் தமிழின எதிர்ப்பு ஒரு முக்கிய அம்சம் என்பதை குறிப்பிடத்தேவையில்லை.
எனது கருத்தின்படி ரோகணவின் காலத்தில் அவர்களால் தமிழின எதிர்ப்பை முற்றுமுழுதாக நடாத்தமுடியாததன் பிரதான காரணம் அவர்கள் அந்தக் காலத்தில் சிறிலங்கா அரசுடன் யுத்தத்தில் ஈடுபட்டிருந்தமையால் அவர்களால் தமிழின எதிர்ப்பை பெரிய உத்வேகத்துடன் கொண்டுநடாத்த முடியாதிருந்திருக்கலாம்.

