03-19-2005, 03:10 PM
துசி குறிப்பிட்டது போல் ரோகண விஜயவீர காலத்தில் ஜேவிபி இனவாத போக்கை வெளிக்காட்டவில்லை. அப்போது அவர்களுடைய கொள்கை முதலாளித்துவத்திற்கும் அரசிற்கும் எதிராக இருந்தது. வேலை கிடைக்காத மற்றும் வறுமையில் வாடும் இளைஞர்கள் அவர்களுக்கு ஆதரவளித்தார்கள். பெரும்பாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் விரக்தியுற்று ஆள்பவர்களுக்கு எதிரான மனப்போக்குடன் ஜேவிபியில் சேர்ந்த இளைஞர்களிடையே மன உறுதி குறைவாக இருந்தது. இந்நிலையில் இலங்கை அரச படைகள் ஓரிரு ஜேவிபி உறுப்பினர்களை கைது செய்தால் அதன் தொடர்ச்சியாக பலரை கைது செய்ய கூடியதாக இருந்தது. உறுப்பினர்களிடையே மன உறுதியின்மை, பலமான தகவல் தொடர்பு கட்டமைப்பும் இல்லை. இவற்றை சாதகமாக வைத்து அரச படைகள் ஜேவிபியின் ஆயுத கட்டமைப்பை முறியடித்தன. அந்த நேரத்தில் இந்திய படைகள் தமிழர் பகுதிகளின் நிலைகொண்டிருந்ததால் இலங்கை அரச படைக்களுக்கு தெற்கில் மட்டும் கவனத்தை செலுத்த கூடியதாக இருந்தது. ஜேவிபியின் ஆயுத கட்டமைப்பு முறியடிக்கப்பட்ட பின்பு அது மெல்ல அரசியலில் இறங்கியது. அவர்கள் தாங்கள் ஊழல் அற்ற நாட்டை பற்றி சிந்திக்கும் அரசியல்வாதிகள் என்று மக்களுக்கு ஒரு தோற்றத்தை உருவாக்கினார்கள். ஐதேக மற்றும் சுதந்திர கட்சி மேல் அதிருப்தியுடன் இருப்பவர்கள் இவர்களுக்கு ஆதரவு வழங்குகின்றார்கள்.
ஜேவிபியின் ஒரே நோக்கம் ஆட்சியை கைப்பற்றுவது. அதற்கு அவர்கள் கையில் எடுத்திருக்கும் ஆயுதமே தமிழர்களுக்கு எதிரான போக்கு. மக்கள் மனதில் இனவாதத்தை விதைத்து பகைமையுணர்சியை தூண்டி அதில் தங்கள் ஆதரவை வளர்த்து ஆட்சியை பிடிக்க எத்தனிக்கின்றார்கள். நாளை சமாதானம் பேசி தமிழர்க்கு சுயாட்சி கொடுத்தால்தான் மக்கள் ஆதரவு கிடைக்கும் ஆட்சியை பிடிக்கலாம் என்றால் அதனையும் செய்வார்கள். அவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் புலிகளை எதிர்க்கவேண்டும் என்றோ அல்லது ஆதரிக்க வேண்டும் என்றோ கொள்கை ஏதும் இல்லை. எதை செய்தால் ஆட்சியை பிடிக்கலாமோ அதை செய்கின்றார்கள் செய்வார்கள். இதைதான் ஐதேக, சுதந்திரகட்சி முன்னர் செய்தார்கள்.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>