03-18-2005, 07:18 AM
இன்று நான்காவது பாடத்தில் எழுத்துருக்களில் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் பற்றி பார்ப்போம். தமிழ்இணையதளங்கள் இன்று யுனிக்கோட் எழுத்துருக்களை பயன்படுத்துகின்றன. அண்மைய விண்டோஸ் அனைத்தும் இவ் எழுத்துருக்களை காண்பிக்ககூடிய ஆற்றலை கொண்டவை. விண்டோஸ் பதிப்புகளில் இற்றைவரைக்கும் லதா எனப்படும் ஒரு தமிழ் எழுத்துரு பயன்படுத்தப்படுகின்றது. ஆங்கில எழுத்துக்களில் பல்வேறு அலங்கார எழுத்துருக்கள் உள்ளன. ஆனால் தமிழில் ஏனைய எழுத்துருக்களை இணையத்தளத்தில் பயன்படுத்துவது பற்றி பிறிதோர் பகுதியில் பார்ப்போம்.
தற்போது எழுத்துருக்களை மாற்ற அதனது அளவை மாற்ற அதனது நிறங்களை மாற்றுவதை பற்றிபார்ப்போம்.
<html>
<head>
<title>தமிழ்வாணனின் பக்கம்</title>
</head>
<body>
வணக்கம் இது HTML தொடர் - 04.
<font face="latha" size="1" color="red"> எழுத்துருபெயர் லதா - சிவப்பு - அளவு - 1</font>
<font face="latha" size="2" color="blue"> எழுத்துருபெயர் லதா - நீலம் - அளவு - 2</font>
<font face="latha" size="3" color="green"> எழுத்துருபெயர் லதா - பச்சை - அளவு - 3</font>
<font face="latha" size="4" color="red"> எழுத்துருபெயர் லதா - சிவப்பு - அளவு - 4</font>
<font face="arial" size="5" color="blue"> Font Name Arial - blue - size-5</font>
<font face="Monotype Corsiva" size="5" color="green"> Font Name Monotype Corsiva - green - size-6</font>
</body>
</html>
இவ் மீயுரைக்கான வெளியீடு (output) படத்தில் காட்டியது போல் இருக்கும்.
<img src='http://www.geocities.com/thamilsangamam/webpotoes/fourthpage.JPG' border='0' alt='user posted image'>
இங்கு எழுத்துருக்களின் பெயரை மாற்றி பாருங்கள். அதன் அளவை கூட்டி குறைத்து பாருங்கள். அதன் நிறத்தை மாற்றி பாருங்கள்.
இப்போது நாம் விரும்பிய எழுத்துருவை இணையப்பக்கத்தில் இடும்போது அவ் எழுத்துரு எமது கணனியில் இருக்கவேண்டும் என்பது எமக்கு தெரியும். ஆனால் இணையப்பக்கத்தில் எமது பக்;கத்தை இடும்போது அவ் எழுத்துரு எல்லோரிடமும் இருக்கிறதா? என்பது முக்கியமானது. எனவே நாம் வரிசையாக எழுத்துருக்களின் பெயர்களை இடும்போது அவ் ஒழுங்கில் எந்த எழுத்துரு கணனியில இருக்கிறது என பரிசோதித்து இணையப்பக்கத்தை காண்பிக்கும்.
<font face="TheneeUniTx, TSCu_InaiMathi, Arial Unicode Ms, Latha"> வணக்கம் </font>
இவ்வாறு குறித்தால் முதலில் தேனீ எழுத்துரு இருக்கிறதா என கணனி பரிசோதிக்கும். இருந்தால் அவ் எழுத்துருவில் எழுத்துரு தோன்றும். அவ் எழுத்துரு கணனியில் இல்லையென்றால் இணைமதி எழுத்துரு இருக்கிறதா என கணனி பரிசோதிக்கும். இவ்வாறு இருந்தால் அவ் எழுத்துருவில் எழுத்துரு தெரியும்.
இங்கு குறிப்பிட்டவற்றை சில சில மாற்றங்களுடன் செய்துபாருங்கள். மீண்டும் சந்திப்போம்.