03-17-2005, 09:14 PM
விடுதலைப்புலிகளிடம் விமானம் குறித்து பிரிட்டன் அக்கறை?
தமிழீழ விடுதலைப்புலிகளிடம் உள்ள வானூர்திகள் குறித்து பிரிட்டன் அதிக அக்கறை கொண்டுள்ளதாக வெளிநாட்டமைச்சு சார்ந்தவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறீலங்காவின் வெளிநாட்டமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் ராஜாங்க செயலாளர் ஜக் ஸ்ரோவைச் சந்தித்தபோது இந்த விடயம் ஆராயப்பட்டுள்ளதாக வெளிநாட்டமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆழிப்பேரலை அனர்த்த நிவாரண உதவி குறித்த நன்றியறிதலை வழங்கச் பிரித்தானியா சென்றுள்ள லக்ஸ்மன் கதிர்காமர் அங்கு நடத்திய பேச்சுக்களில் 80 மில்லியன் அமரிக்க டொலர் கடன் நிவாரணத்தை வழங்க பிரித்தானியா இணக்கம் தெரிவித்துள்ளது. இருந்தும் புலிகளின் வான்படை தொடர்பான அக்கறை பற்றிய செய்தி தொடர்பாக பிரித்தானியத் தரப்பு எதுவித செய்திகளையுமே வெளியிடவில்லை
சிறீலங்கா ஏற்கனவே பெற்றுக்கொண்ட கடன்களுக்கு 10 வீத கழிவை பிரித்தானியா வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
புதினம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>