09-03-2003, 10:34 PM
sethu Wrote:தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்டு-அம்பாறை மாவட்ட அரசியல்துறையினர் தமிழ் இளைஞர்களை விழிப்புடன் இருக்குமாறு வேண்டி துண்டுப்பிரசுரம்.
தற்போது கிழக்கு மாகாணத்தில் பொலிஸ் படைக்கு தமிழ் பேசும் இளைஞாகள் சேர்க்கப்படுவது குறித்து இளைஞர்களை விழிப்புடன் இருக்குமாறு வேண்டி மட்டு-அம்பாறை மாவட்ட அரசியல்துறையினர் துண்டுப்பிரசுரம் இரண்டினை வெளியிட்டுள்ளனர்.
அத்துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
01. தமிழ் பேசும் இளைஞர்கள் பொலிஸ் படையில்சேர்வது தொடர்பாக விழிப்படையுங்கள்.
முஸ்லிம் பிரச்சினை தீர்ப்பதற்கென பொலிஸ் சேமப் படையில் சேர்க்கப்படும் தமிழ பேசும் இளைஞர்கள் தொடர்பாக முஸ்லிம் புத்திஜீவிகளும், கல்விமான்களும், முதலீட்டாளர்களும் தெளிவாகவும், து}ரநோக்கோடு சிந்திக்க வேண்டிய காலம் இது. எமது தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசத்திலும் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்த இடங்களில் எல்லாம் காட்டு மிரண்டித் தனமாக நடத்தப்பட்ட படுகொலைகள் எமது தாயகம் முழுவதும் விடுதலைப் போராட்ட தீச்சுவாலை வேகமாகப் பரவ காரணமாக இருந்தது. ஒரு நாட்டில் சமாந்தரமான இரண்டு படையினர் என்ற நிலைக்கு வந்திருக்கின்றது.
எம்மினங்களை பேரினவாத அரசு நன்கு திட்டமிட்டு முரண்பாடுகளை உருவாக்கியது இதனை விளங்கிக் கொள்ளாத நாம் பல துன்பியல் சம்பவங்களுக்கு ஆளாகிப் போனோம் அவர்கள் வேடிக்கை பார்த்தார்கள்.
இன்று எமது தாயகப் பிரதேசத்தில் யுத்தமற்ற சூழல் உருவாகி ஒவ்வொருத்தரும் தமது வாழ்வியலை வழப்படுத்துவதற்காக முயல்வதுடன் இதனை வலுப்படுத்துவதற்காக எமது தரப்பு பிரதிநிதிகளும், முஸ்லிம் தரப்பு பிரதிநிதிகளும் பல கலந்துரையாடலை நடாத்தி அதிகமான பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு கொண்டு வருகின்ற இந்த காலத்தை அவர்களால் சகித்துக் கொள்ள முடியாது உள்ளது. இதனை என்றுமே அவர்கள் விரும்பவில்லை அவர்களின் மூல உபாயத்தில் அன்றும், இன்றும், என்றும் இது இருந்தே வருகின்றது.
இன்று சர்வதேச மத்தியஸ்தத்துடன் இன்றைய உலக ஒழுங்குக்கு அமைய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதனை நன்கு உணராத முஸ்லிம் அரசியல் வாதிகளும் அவர்களுடன் துணை போகின்ற தீய சக்திகள் தொடர்பாக நீங்கள் அனைவரும் விழிப்பாக இருங்கள் நாம் என்றும் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பிற்கு பொறுப்;பாக இருப்போம் என்பதனை நீங்கள் உறுதியாக நம்புங்கள்.
எனவே பொலிஸ் சேமப்படையில் இணைகின்ற தமிழ் பேசும் இளைஞர்களே! சிந்தியுங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுடைய இராணுவத்தை எந்த இராணுவ சக்தியாலும் வென்று விட முடியாது. நீங்கள் அதில் தான் இணைகிக்றீர்கள் உடன் நிறுத்துங்கள் அல்லது யுத்தம் மீண்டும் வந்தால் நீங்கள் விடுதலைப்போராட்டத்திற்கு எதிரானவர்கள் உங்கள் நிலை அன்று பரிதாபகரமானது என வேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். 'நின்று நிதானித்து சிந்தித்து செயற்படுங்கள்"
02. தமிழ் இளைஞர்களே...!
எமது இனத்தின் விடுதலைப் போராட்டம் பலம் அடைந்து உலகமே வியக்கும் இராணுவ சக்தியாக சர்வதேச அரங்கில் தமிழர் தம் உரிமைதனை தமிழீழ விடுதலைப்புலிகள் பிரதி நிதித்துவப்படுத்தும் இவ்வேளை தமிழ் இளைஞர்களில் ஒரு சிலர் சிங்களப் பொலிஸ் படையில் இணைவது வேதனைக்;குரிய விடயமாகும்.
தமிழ் இளைஞர்கள் சிங்களப் படையில் இணைய வேண்டாம் என நாம் முன்னர் அறிவித்திருந்தோம். அதனையும் மீறி இணைவதென்பது எமது விடுதலைப் போராட்டத்தை புரிந்து கொள்ளாத தன்மையைப்புலப்படுத்தும் என்பதால் சிங்களப் பொலிஸ் படையில் இணைவதனை உடன் நிறுத்தி எம் தலைவனின் காலத்தில் ஓர் அணியாக திரள்வோம் சுதந்திரம் மீட்க.
தமிழீழ விடுதலைப்புலிகள்,
அரசியல்துறை,
மட்டு-அம்பாறை மாவட்டம்
தமிழீழம்
நன்றி..
http://www.uthayan.com/news/newsmain.htm
Truth 'll prevail

