![]() |
|
முஸ்லீம் சகோதர்களே.. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: முஸ்லீம் சகோதர்களே.. (/showthread.php?tid=8178) |
முஸ்லீம் சகோதர்களே.. - kuruvikal - 09-01-2003 <span style='font-size:25pt;line-height:100%'>முஸ்லீம் சகோதர்களே....</span> நீங்கள் தமிழ்மக்களுக்கு எதிராக இன்று ஆயுதம் ஏந்தப் போவதாக செய்திகள் வருகின்றன...ஆனால் நீங்கள் (முஸ்லீம் ஊர்காவல்படை..ஜீகாத் இயக்கம்...முஸ்லீம் குண்டர் படை) கிழக்கில் மற்றும் வடக்கில் குறிப்பாக மன்னார் பகுதிகளில் தமிழ்மக்கள் எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு அவர்கள் மீது துனபங்களை கடந்த காலங்களில் விளைவித்துள்ளீர்கள்....அதுவும் சிறு சிறு காரணங்களுக்காக தமிழ்மக்களை வருத்தி கொன்றொழித்து காட்டிக்கொடுத்து சிங்கள பேரினவாத ஏகாதபத்தியத்திடம் நற்சான்றிதழ் வாங்க விளைந்தீர்கள்....ஆனால் சிங்களம் அதற்கான நல்ல பரிசில்களை மருதானையில் மாவனல்லையில் புத்தளத்தில் இரத்தினபுரியில் காலியில் கண்டியில் என்று 1990க்குப் பின்னர் மீது எவ்வித காரணங்களும் இன்றி வன்முறையாகக் கொடுத்தபோது உங்கள் சந்தர்ப்பவாத குழப்பகார அரசியல் கூச்சல்கள் குழப்பங்கள் எங்கே போனது...ஏன் நீங்கள் அங்கெல்லாம் இன்னும் தனியலகு கேட்கவில்லை.....?! நீங்கள் (அப்பாவி முஸ்லீம் சகோதரர்கள் அல்ல சந்தர்பவாத அரசியல் சிறுமைகள்) இன்று தனியலகு தமிழர்களிடம் கேட்பதற்கான காரணம் தமிழ் மக்கள் நாடாத்திய விடுதலைப் போரினால் உங்களிடம் வந்து சேர்ந்த பாராளுமன்றக் கதிரைகளே...தமிழ் மக்கள் தேர்தல்களைப் புறக்கணித்த போது உங்கள் சந்தர்ப்பவாத வன்முறைவாத தலைமைகள் உங்களை தமிழ் மக்களுக்கு எதிராகத் துண்டிவிட்டு தமிழ் மக்களின் போராட்டதுடன் அதன் தார்மீகம் நியாயம் அறிந்து ஐக்கியமாகியிருந்த உங்களை அந்நியப்பட வைத்து தேர்தல்களில் உங்கள் ஏகபோக வாக்குப்பலத்தை பிரயோகித்து தமிழ் மக்களின் பிரதிநிதித்துவங்களால் வரவேண்டிய கதிரைகளை குறைந்த வாக்குப்பலத்துடன் கைப்பற்றி, கிழக்கை முஸ்லீங்களின் மாகாணம் எனக்காட்டி......பலவீன சிங்கள அரசியல் சந்தையில் தங்களை பலமான வியாபாரிகள் ஆக்கி மந்திரிப்பதவிகளை ஆக்கிரமித்து.... சுகபோகம் கண்டதை உங்கள் சந்தர்ப்பவாத தலைமைகள் இழக்க விரும்பாமையே ஆகும்...அதைத் தொடரவிளைவதே மீண்டும் வடக்குக்கிழக்கில் இயல்புநிலை, நீடித்த சமாதானம் வர விரும்பாமைக்கான முக்கிய காரணம் ஆகும்......! ஆனால் இன்று அவர்கள் அதற்காக தமிழ்மக்கள் மீதும் அவர்களின் பிள்ளைகள் மீதும் தவறான கருத்துக்களைப் பரப்பி மேலும் பகைமையை மூட்டி ஆயுதங்கள் மூலம் பிரிவினை கோரும் அளவிற்கு தமது அரசியல் சிறுமையை, தமது மூலத்தைக் காட்ட விளைந்துள்ளனர்....! இது அப்பாவி முஸ்லீம் சகோதரர்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என்பதையே காட்டி நிற்கிறது....காரணம்..அவர்கள் மந்திரிகளாகி அப்பாவி மக்களின் கஷ்டங்களுக்கு என்ன பரிகாரம் கண்டனர்...எத்தனை முஸ்லீம் இளைஞர்களிடம் இதோ வேலை வாங்கித்தருகிறோம் என்று பணம் பெற்றிருப்பர்....ஆனால் செய்தனரா????...தங்களின் உறவுகளுக்கு மட்டும் துறைமுகங்களில் குறைந்த கல்வித்தகமைகளைக் காட்டியே வேலை பெற்றுக் கொடுத்துள்ளனர்...பட்டம் பெற்ற எத்தனை முஸ்லீம் சகோதர சகோதரிகள் வேலை இன்றித் திண்டாடுகின்றனர்.....எத்தனை பேர் அகதிமுகாம்களில் வாடுகின்றனர்...ஏன் அவர்கள் மூட்டிய பகைமைத்தீ கொழுந்து விட்டதன் விளைவே...இன்று தமிழ் மக்களும் சரி போராளிகளும் சரி கடந்த காலத்தவறுகளை மன்னிக்க தயாராக உள்ளனர்...சகோதரர்களிடையே வந்த சச்சரவு போன்று கடந்தவற்றை இருதரப்பும் மறந்து மீண்டும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாய் வாழ்வதே எமது விருப்பம்....தமிழ்மக்கள் சிங்களவர்கள் போன்று உங்களை அடக்கவேண்டிய தேவையில்லை காரணம் அவர்கள் அடக்குமுறையின் வேதனையை அறிந்தவர்கள்...அதனால்தான் முஸ்லீம் மக்களும் வடக்குக்கிழக்கில் சுயநிர்ணயத்துடன் வாழலாம் என அழைத்தனர்...சிங்களம் அப்படி ஒருபோதும் தமிழ் மக்களை அழைக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்....! எனவே அப்பாவி முஸ்லீம் சகோதரர்களே உங்கள் சகோதரனாக உங்கள் நண்பனாக உங்களுக்கு அடைக்கலம் தந்த உறவினனாக உங்கள் பிள்ளைகள் படித்துப் பட்டம் பெற உதவிய கரங்களாக உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோளை சமர்ப்பிக்க விரும்புகின்றோம்....உங்களின் மத்தியில் வளர்ந்துவரும் சந்தர்ப்பவாத வன்முறைவாத அரசியல் சக்திகளுக்கும் அவர்களின் பொய்க்கருத்துக்களுக்கும் பொய்ப்பரப்புரைகளுக்கும் இடம் கொடாமல் உங்களை என்றும் அரவணைத்துச் செல்லத் தயாராக இருக்கும் உங்கள் சகோதரர்களான தமிழ் மக்களுடன் என்றும் சகோதரத்துவம் காக்க விளையுமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்....! நன்றி...! உங்கள் சகோதரன்,நண்பர்கள் குருவிகள்..! பொங்கு தமிழ் - AJeevan - 09-01-2003 [b]பொங்கு தமிழ் நிகழ்ச்சிகளில் அரச பகுதியினர் கலந்து கொள்ள வேண்டும். தமிழீழ பகுதியில் நடைபெறும் பொங்கு தமிழ் நிகழ்சிகளில் அரச தரப்பினர் மற்றும் சிங்கள அமைச்சர்களும் கலந்து கொள்ள வேண்டும். 20 வருடங்களுக்கு அதிகமான காலம் யுத்த களமாக இருந்த பகுதிகளில் ஜனநாயக வழிக்கு திரும்பிக் கொண்டிருக்கும் விடுதலைப் புலிகள் நடத்தும் இப்படியான நிகழ்சிகளினால் ஓர் சுதந்திர உணர்வு ஏற்பட்டடிருப்பதைக் காண முடிகிறது. வடக்கு கிழக்கு பகுதிகளில் நடை பெறும் இப்படியான நிகழ்ச்சிகளுக்கு எமது தார்மீக ஆதரவை வழங்குதல் எமது கடைமையாகும். நீண்ட கால அமைதியொன்றை விரும்பும் ஒரு சமூகம் மனித படு கொலைகள் யுத்தம் ஆகியவற்றிலிருந்து விலகி தமது கலை - கலாச்சார விழுமியங்களை முன் வைக்க முன் வந்திருப்பது ஒரு முக்கிய நிகழ்வு என்றுதான் குறிப்பிட வேண்டும். (தகவல்:சந்தேசய BBC சிங்கள சேவை பேட்டியிலிருந்து ) - Mathivathanan - 09-01-2003 தேவைகருதிய அரவணைப்பு என கட்டுரை சுட்டுகிறதே.. நன்றி குருவிகாள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Re: பொங்கு தமிழ் - Mathivathanan - 09-01-2003 [quote=AJeevan][b]பொங்கு தமிழ் நிகழ்ச்சிகளில் அரச பகுதியினர் கலந்து கொள்ள வேண்டும். தமிழீழ பகுதியில் நடைபெறும் பொங்கு தமிழ் நிகழ்சிகளில் அரச தரப்பினர் மற்றும் சிங்கள அமைச்சர்களும் கலந்து கொள்ள வேண்டும். [size=14] 20 வருடங்களுக்கு அதிகமான காலம் யுத்த களமாக இருந்த பகுதிகளில் ஜனநாயக வழிக்கு திரும்பிக் கொண்டிருக்கும் விடுதலைப் புலிகள் நடத்தும் இப்படியான நிகழ்சிகளினால் ஓர் சுதந்திர உணர்வு ஏற்பட்டடிருப்பதைக் காண முடிகிறது. வடக்கு கிழக்கு பகுதிகளில் நடை பெறும் இப்படியான நிகழ்ச்சிகளுக்கு எமது தார்மீக ஆதரவை வழங்குதல் எமது கடைமையாகும். நீண்ட கால அமைதியொன்றை விரும்பும் ஒரு சமூகம் மனித படு கொலைகள் யுத்தம் ஆகியவற்றிலிருந்து விலகி தமது கலை - கலாச்சார விழுமியங்களை முன் வைக்க முன் வந்திருப்பது ஒரு முக்கிய நிகழ்வு என்றுதான் குறிப்பிட வேண்டும். (தகவல்:சந்தேசய BBC சிங்கள சேவை பேட்டியிலிருந்து - sethu - 09-03-2003 தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்டு-அம்பாறை மாவட்ட அரசியல்துறையினர் தமிழ் இளைஞர்களை விழிப்புடன் இருக்குமாறு வேண்டி துண்டுப்பிரசுரம். தற்போது கிழக்கு மாகாணத்தில் பொலிஸ் படைக்கு தமிழ் பேசும் இளைஞாகள் சேர்க்கப்படுவது குறித்து இளைஞர்களை விழிப்புடன் இருக்குமாறு வேண்டி மட்டு-அம்பாறை மாவட்ட அரசியல்துறையினர் துண்டுப்பிரசுரம் இரண்டினை வெளியிட்டுள்ளனர். அத்துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- 01. தமிழ் பேசும் இளைஞர்கள் பொலிஸ் படையில்சேர்வது தொடர்பாக விழிப்படையுங்கள். முஸ்லிம் பிரச்சினை தீர்ப்பதற்கென பொலிஸ் சேமப் படையில் சேர்க்கப்படும் தமிழ பேசும் இளைஞர்கள் தொடர்பாக முஸ்லிம் புத்திஜீவிகளும், கல்விமான்களும், முதலீட்டாளர்களும் தெளிவாகவும், து}ரநோக்கோடு சிந்திக்க வேண்டிய காலம் இது. எமது தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசத்திலும் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்த இடங்களில் எல்லாம் காட்டு மிரண்டித் தனமாக நடத்தப்பட்ட படுகொலைகள் எமது தாயகம் முழுவதும் விடுதலைப் போராட்ட தீச்சுவாலை வேகமாகப் பரவ காரணமாக இருந்தது. ஒரு நாட்டில் சமாந்தரமான இரண்டு படையினர் என்ற நிலைக்கு வந்திருக்கின்றது. எம்மினங்களை பேரினவாத அரசு நன்கு திட்டமிட்டு முரண்பாடுகளை உருவாக்கியது இதனை விளங்கிக் கொள்ளாத நாம் பல துன்பியல் சம்பவங்களுக்கு ஆளாகிப் போனோம் அவர்கள் வேடிக்கை பார்த்தார்கள். இன்று எமது தாயகப் பிரதேசத்தில் யுத்தமற்ற சூழல் உருவாகி ஒவ்வொருத்தரும் தமது வாழ்வியலை வழப்படுத்துவதற்காக முயல்வதுடன் இதனை வலுப்படுத்துவதற்காக எமது தரப்பு பிரதிநிதிகளும், முஸ்லிம் தரப்பு பிரதிநிதிகளும் பல கலந்துரையாடலை நடாத்தி அதிகமான பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு கொண்டு வருகின்ற இந்த காலத்தை அவர்களால் சகித்துக் கொள்ள முடியாது உள்ளது. இதனை என்றுமே அவர்கள் விரும்பவில்லை அவர்களின் மூல உபாயத்தில் அன்றும், இன்றும், என்றும் இது இருந்தே வருகின்றது. இன்று சர்வதேச மத்தியஸ்தத்துடன் இன்றைய உலக ஒழுங்குக்கு அமைய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதனை நன்கு உணராத முஸ்லிம் அரசியல் வாதிகளும் அவர்களுடன் துணை போகின்ற தீய சக்திகள் தொடர்பாக நீங்கள் அனைவரும் விழிப்பாக இருங்கள் நாம் என்றும் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பிற்கு பொறுப்;பாக இருப்போம் என்பதனை நீங்கள் உறுதியாக நம்புங்கள். எனவே பொலிஸ் சேமப்படையில் இணைகின்ற தமிழ் பேசும் இளைஞர்களே! சிந்தியுங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுடைய இராணுவத்தை எந்த இராணுவ சக்தியாலும் வென்று விட முடியாது. நீங்கள் அதில் தான் இணைகிக்றீர்கள் உடன் நிறுத்துங்கள் அல்லது யுத்தம் மீண்டும் வந்தால் நீங்கள் விடுதலைப்போராட்டத்திற்கு எதிரானவர்கள் உங்கள் நிலை அன்று பரிதாபகரமானது என வேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். 'நின்று நிதானித்து சிந்தித்து செயற்படுங்கள்" 02. தமிழ் இளைஞர்களே...! எமது இனத்தின் விடுதலைப் போராட்டம் பலம் அடைந்து உலகமே வியக்கும் இராணுவ சக்தியாக சர்வதேச அரங்கில் தமிழர் தம் உரிமைதனை தமிழீழ விடுதலைப்புலிகள் பிரதி நிதித்துவப்படுத்தும் இவ்வேளை தமிழ் இளைஞர்களில் ஒரு சிலர் சிங்களப் பொலிஸ் படையில் இணைவது வேதனைக்;குரிய விடயமாகும். தமிழ் இளைஞர்கள் சிங்களப் படையில் இணைய வேண்டாம் என நாம் முன்னர் அறிவித்திருந்தோம். அதனையும் மீறி இணைவதென்பது எமது விடுதலைப் போராட்டத்தை புரிந்து கொள்ளாத தன்மையைப்புலப்படுத்தும் என்பதால் சிங்களப் பொலிஸ் படையில் இணைவதனை உடன் நிறுத்தி எம் தலைவனின் காலத்தில் ஓர் அணியாக திரள்வோம் சுதந்திரம் மீட்க. தமிழீழ விடுதலைப்புலிகள், அரசியல்துறை, மட்டு-அம்பாறை மாவட்டம் தமிழீழம் - Mathivathanan - 09-03-2003 sethu Wrote:தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்டு-அம்பாறை மாவட்ட அரசியல்துறையினர் தமிழ் இளைஞர்களை விழிப்புடன் இருக்குமாறு வேண்டி துண்டுப்பிரசுரம். நன்றி.. http://www.uthayan.com/news/newsmain.htm - sethu - 09-04-2003 மேலுள்ள இருசெய்திகளும் ஒன்றே. மதியையா பிரதி செய்து எங்கிருந்து பெறப்பட்டதென்பதை தெரிவித்துள்ளார். சேது.......தயவுசெய்து கள.......களவிதிகளுக்கு அமைவாக நடந்துகொள்ளுங்கள்..............கபிலன் |