03-15-2005, 03:52 AM
Mathuran Wrote:[quote=kuruvikal]உங்கள் கருத்துக்கு நன்றிகள் பல மதுரன்...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
மதுரன்...எந்த சாதாரண மனிதனுக்கும் சரி...இலட்சிய மனிதனுக்கும் சரி அன்பு வாழ்வின் ஆதாரம்...அன்பில்லாத சூழலில் உணவு கூடக் கசக்கும்...புசிக்கப் பசி கூட வராது...மனம் வேகும்...வெறுப்புப் பெருகும்...இனம் புரியாது நோய் தொற்றும்...பெற்றோரைப் பிரிந்து தனிமையில் இருக்கும் இளைய உறவுகளுக்குத்தான் அன்பின் கனதி அதிகம் புரியும்...சில வேளைகளில் நோய் தீண்ட அன்புக்காக ஏங்கும் நிலையில் இலட்சியம் கூட மறந்து போகும்...வாழ்வின் அர்த்தமே கேள்விக் குறியாகும்...இதையும் தாங்கி இலட்சியத்துக்காய் வாழும் இளையவர்கள் பலர்...இருப்பினும் அவர்களுக்குள் அன்புக்கான ஏக்கங்கள் இல்லை என்று முடிவெடுத்து விடாதீர்கள்...இருக்கு...அது அழிக்கப்பட்டால்...அடையப்படும் இலக்கும் இலட்சியமும் விரைந்ததாகவும் வலிமையானதாகவும் இருக்கலாம்...! அப்படியான ஒரு இளைய பறவையின் குரல் தான் அது....என்று வைத்துக்கொள்ளுங்களேன்...!
அன்பைத் தருவது அம்மாவாக அப்பாவாக சகோதரங்களாக உறவினர்களாக நண்பர்களாக மனைவியாக/கணவனாக காதலியாக/காதலனாக பிள்ளைகளாக எவராகியும் இருக்கலாம்...ஆனால் பெறப்படுவது உண்மை அன்பாக இருக்க வேண்டும்...அதைத் தரவல்லதைத் தேடிப் பெறுவது இலட்சியப் பாதையில் அடையப்படும் பல இலக்குகளில் ஒன்றாக இருக்கட்டுமேன்...! தவறில்லை...அன்பில்லாது நோய் கண்டு உடல் வீழ்ந்த பின்... வாழ்வு ஒடிந்த பின்... இலட்சியம் மட்டும் எப்படி வாழும்...இலட்சியம் எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு அடையப்பட வேண்டுமே தவிர வரியப்பட்டதாக மட்டும் இருக்கக் கூடாது...!
உங்கள் பார்வை அது அதனை மறுதலிக்கவோ கொச்சைப்படுத்திடவோ நான் முனையவில்லை. ஆனல் பிறந்த நாள் முதல் அன்பு அவனையோ இல்லை அவளையோ ஏதோ ஒரு வடிவத்தில் தளுவும். ஆனால் இலட்சியம் அப்படி அல்ல. உங்கள் இலட்சியத்தின் உறுதியே வாழ்க்கையின் வெற்றி. அன்பை எல்லா நேரமும் மனம் எதிர் பார்க்கும். ஆனால் இலட்சியம் என்பது எல்லா நேரமும் உங்களை எதிர்ப்பார்க்கும். அன்பு உங்களை கட்டிப்போடும், இலட்சியம் உங்களைக் காத்து நிற்கும். அன்பு வீட்டுக்குள் பஞ்சணையில் படுப்பதைப் போன்றது. கடும் குளிரானாலும் செல்லவேண்டிய இடத்திற்கு சென்று வெற்றி பெறுவதனைப் போன்றது இலட்சியம். எல்லா நேரங்களிலும் எல்லோருக்கும் அன்பு கிடைப்பதில்லை அதற்காக, நாம் வாழ்வையே வெறுக்கலாம? அன்பு பருவகாலங்கள் போன்றது. இலட்சியம் ஒரு ஆண்டினை போன்றது. அன்பு வரவேண்டிய காலத்தில் வரும், அதற்காக இலட்சியத்தை கைவிடலாமா?
இலட்சியம் என்பது ஒரு மனிதனின் குறிப்பிட்ட வயதில் அவனுக்குள் உதயமாகி அடையப்பட வேண்டியது...ஆனால் அன்பு அப்படியல்ல...பிறந்தது முதல்...இலட்சியத்தை உருவாக்கிக் கொண்டு மரணம் வரை வாழும் வரை அவசியமானது...! சரியான அன்பு இல்லாததால் வளமான இலட்சியத்தை வகுக்க முடியாது பலர் சீரழிந்துள்ளனர்.... எங்கள் பார்வையில் கொச்சப்படுத்த எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை... எங்களைப் பொறுத்தவரை எமக்கு என்று சுய அறிவு வந்து ஒரு வாழ்வியல் இலட்சித்தை வகுக்க முதலே பிறந்த மறுகணமே அன்புக்கு ஏங்கி அழுததை இறுதிவரை அது தொடர்வதைப் புறக்கணிக்க முடியாதிருக்கிறது...அன்புக்கான தேடல் இலட்சியத்தை அடைவதற்கான பாதையில் இருந்து வேறுபட்டிருந்தாலும் (அன்புக்காக இலட்சியத்தை கைவிட்டதாகக் கவிதை சொல்லவில்லை...எதிர்பார்க்கப்படும் அன்பு கிடைக்காது உடல் வீழ்ந்தால் இலட்சியம் கனவாகிச் சிதைந்திடலாம் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது...!) அன்பைத் தொலைத்த இலட்சியம் பெரிதாக மனிதனுக்கு மனிதன் உதவியதாக வரலாறில்லை அப்படியான இலட்சியங்கள் மனிதனுக்கு அவசியம் தானா என்பதே இப்போ கேள்வி....! உதாரணத்துக்கு ஒரு அரசியல் தலைவனாக வர விரும்பமுள்ள இலட்சியம் படைத்தவன்...தன் மக்கள் மீது மண்ணின் மீது அன்பு செலுத்த...செலுத்தப்படும் அன்பை உள்வாங்கிப் பிரதிபலித்து இலட்சியப்பாதையை இறுதி இலக்கு நோக்கி தகுந்த முறையில் நகர்த்துவதே தேவை....அதைத்தான் மனிதம் எதிர்பார்க்கிறது...! இறை தூதர்கள் எனப்படுபவர்கள் கூட இலட்சியத்தைப் போதிக்கவில்லை...அன்பை அதனை பெருக்கும் வழங்கும் அடையும் வழிமுறைக்களைத்தான் மனிதனுக்கு உரைத்துச் சென்றுள்ளனர்...காரணம்...அதுதான் வாழ்வின் அடிப்படை...அதில் இருந்து வருவனதான் மீதமுள்ளவை...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

