Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகளின் மட்டக்கிளப்பு அலுவலகம் மீது குண்டுவீச்சு
#4
விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அரசியல் அலுவலகத்தின்மீது குண்டுவீச்சு

இன்று திங்கட்கிழமை இரவு 7.25 மணியளவில் இனந்தெரியாதோரால் ஒரு கைக்குண்டு வீசப்பட்டுள்ளது.

கைக்குண்டு விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு அரசியல் அலுவலகத்தினுள் விழுந்து வெடித்துள்ள போதும்ää பெரிதாக சேதமெதுவும் ஏற்படவில்லை என அரசியற் பொறுப்பாளர் அன்புமாறன் தெரிவித்துள்ளார்.

குண்டுவெடித்த வேளையில் அலுவலகத்தில் குறைந்தது 15 பேராவது இருந்ததாகவும்ää இருப்பினும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் அவ் வீதி வழியாகச் சென்ற இரண்டு பேர் கைக்குண்டை வீசியுள்ளார்கள். அலுவலக முன் பக்க சுவரில் விழுந்து வெடித்துள்ளமையினால் குறிப்பிடத்தக்க சேதங்கள் எதுவும் நிகழவில்லை.

அரசடி சந்திக்கருகே அமைந்துள்ள இந்த அலுவலகத்திற்கு அண்மையில் சிறிலங்கா பொலிஸ் நிலையமொன்று உள்ளது.

இதுதவிரää தாமரைக்கேணி வீதியிலிருந்து மகாஜனா கல்லூரிக்கு வரும் பாதையின் ஆரம்பத்தில் பொலிஸ் சோதனைச் சாவடியும் உள்ளது. இவற்றைத் தாண்டி வந்து இந்த கைக்குண்டு வீச்சை நடாத்திவிட்டு மீண்டும் தப்பிச் செல்வதற்கு சிறீலங்கா பொலிசாரினதும்ää சிறீலங்கா இராணுவத்துடன் இணைந்து செயற்படும் இனவிரோதக் குழுக்களினதும் உதவியின்றி யாராலும் முடியாது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகத் தெரிகிறது.

கடந்த ஆறு மாதங்களுக்குள் இந்த அரசியல் அலுவலகத்தின்மீது நடாத்தப்பட்ட நான்காவது குண்டுத் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Puthinam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by Mathuran - 03-14-2005, 06:18 PM
[No subject] - by hari - 03-14-2005, 07:03 PM
[No subject] - by Mathan - 03-14-2005, 07:23 PM
[No subject] - by vasisutha - 03-15-2005, 01:08 AM
[No subject] - by Mathan - 03-15-2005, 01:55 AM
[No subject] - by yalie - 03-15-2005, 03:52 AM
[No subject] - by thivakar - 03-15-2005, 08:03 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)