Yarl Forum
புலிகளின் மட்டக்கிளப்பு அலுவலகம் மீது குண்டுவீச்சு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: புலிகளின் மட்டக்கிளப்பு அலுவலகம் மீது குண்டுவீச்சு (/showthread.php?tid=4766)



புலிகளின் மட்டக்கிளப்பு அலுவலகம் மீது குண்டுவீச்சு - eelapirean - 03-14-2005

LTTE political office in Batticaloa bombed

[TamilNet, March 14, 2005 14:28 GMT]
Political office of the Liberation Tigers in Batticaloa town was bombed by unidentified persons around 7.25 Monday night Police said.The office was not damaged. A Sri Lanka Police camp is at the Arasady Junction.
The assailants lobbed a grenade into the LTTE office near Arasady Junction in the eastern town, Police said.

There is a Police sentry at the entrance to Mahajana College in front of the LTTE political office on Thamaraikerni Road in Batticaloa town.

Mr. Anpumaran, head of the LTTE political division for Batticaloa town, said there were fifteen persons in the office at the time of the attack but that no one was injured.

Truce monitors rushed to the scene to investigate
Tamil net


- Mathuran - 03-14-2005

:evil: :evil: :evil:


- hari - 03-14-2005

:evil: :evil:


- Mathan - 03-14-2005

விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அரசியல் அலுவலகத்தின்மீது குண்டுவீச்சு

இன்று திங்கட்கிழமை இரவு 7.25 மணியளவில் இனந்தெரியாதோரால் ஒரு கைக்குண்டு வீசப்பட்டுள்ளது.

கைக்குண்டு விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு அரசியல் அலுவலகத்தினுள் விழுந்து வெடித்துள்ள போதும்ää பெரிதாக சேதமெதுவும் ஏற்படவில்லை என அரசியற் பொறுப்பாளர் அன்புமாறன் தெரிவித்துள்ளார்.

குண்டுவெடித்த வேளையில் அலுவலகத்தில் குறைந்தது 15 பேராவது இருந்ததாகவும்ää இருப்பினும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் அவ் வீதி வழியாகச் சென்ற இரண்டு பேர் கைக்குண்டை வீசியுள்ளார்கள். அலுவலக முன் பக்க சுவரில் விழுந்து வெடித்துள்ளமையினால் குறிப்பிடத்தக்க சேதங்கள் எதுவும் நிகழவில்லை.

அரசடி சந்திக்கருகே அமைந்துள்ள இந்த அலுவலகத்திற்கு அண்மையில் சிறிலங்கா பொலிஸ் நிலையமொன்று உள்ளது.

இதுதவிரää தாமரைக்கேணி வீதியிலிருந்து மகாஜனா கல்லூரிக்கு வரும் பாதையின் ஆரம்பத்தில் பொலிஸ் சோதனைச் சாவடியும் உள்ளது. இவற்றைத் தாண்டி வந்து இந்த கைக்குண்டு வீச்சை நடாத்திவிட்டு மீண்டும் தப்பிச் செல்வதற்கு சிறீலங்கா பொலிசாரினதும்ää சிறீலங்கா இராணுவத்துடன் இணைந்து செயற்படும் இனவிரோதக் குழுக்களினதும் உதவியின்றி யாராலும் முடியாது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகத் தெரிகிறது.

கடந்த ஆறு மாதங்களுக்குள் இந்த அரசியல் அலுவலகத்தின்மீது நடாத்தப்பட்ட நான்காவது குண்டுத் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Puthinam


- vasisutha - 03-15-2005

நிழல் யுத்தம் :evil:


- Mathan - 03-15-2005

ம் அதுதான் மிகவும் அபாயமானது, :|


- yalie - 03-15-2005

வசிசுதா சொன்னது-நிழல் யுத்தம் : மதன் அண்ணா சொன்னது --ம் அதுதான் மிகவும் அபாயமானது-------உண்மை உண்மை! ஆனாலும் நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்!!!


- thivakar - 03-15-2005

இராணுவம் நல்லாத்தான் பிலிம் காட்டுறாங்கள்