03-14-2005, 12:02 PM
நோர்வேயை வெளியேற்ற கதிர்காமர் ஊடாக ஜே.வி.பியினர் முயற்சி!
சிறீலங்கா அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தை முயற்சிகளில் இருந்து நோர்வே தரப்பை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜே.வி.பியுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் இந்த நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது.
அண்மையில் ஜே.வி.பி. கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவை சந்தித்த கதிர்காமார் மிக விரைவில் நோர்வே அரசாங்கத்தை சமாதான முயற்சிகளில் இருந்து விலக்கி வைப்பதாக உறுதியளித்துள்ளார்.
இதனை அடுத்தே இந்தியா சமாதான முயற்சிகளில் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும் என கதிர்காமர் இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நோர்வே ஏற்பாட்டாளர்கள் விடுதலைப்புலிகளுக்கு சார்பாக செயற்பட்டு வருவதாகவும் தனிநாடு ஒன்றை தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் ஜே.வி.பி தரப்பு அச்சமடைந்துள்ளது.
எனவே நோர்வேத் தரப்பை சமாதான முயற்சிகளில் இருந்து விலக்கிவிட்டு விடுதலைப்புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள இந்தியாவை மத்தியஸ்தராக்குவதற்கு ஜே.வி.பி. விருப்பம் கொண்டுள்ளது.
இந்தியா மத்தியஸ்த முயற்சிகளை மேற்கொண்டால் தனிநாட்டு கோரிக்கை அல்லது அதற்கு ஈடான தீர்வை பெற்றுக் கொடுக்காது என்று ஜே.வி.பி திடமான நம்பிக்கையினை கொண்டிருக்கிறது.
இலங்கையில் தனிநாடு அல்லது அதற்கு ஈடான கட்டமைப்பு உருவாக்கப்படுவது இந்திய தேசிய ஒருமைப்பாட்டடை பாதிக்கும் என்பதோடு இந்தியாவில் உள்ள பிரிவினைவாத அமைப்புகளுக்கு சார்பாக அமைந்துவிடும் என்பதால் இந்தியா இலங்கையில் தனிநாடு உருவாகுவதை விரும்பாது என்று ஜே.வி.பியினர் கருதுகின்றனர்.
எனவே இந்தியா சமாதான முயற்சிகளில் ஈடுபடுவதை அவர்கள் வரவேற்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமருக்கு ஊடாக அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: புதினம்