03-13-2005, 01:06 PM
<b> இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கையை உடன் கைச்சாத்திடுமாறு வலியுறுத்தல் </b>
ஜனாதிபதியிடம் ஹெல உறுமய கோரிக்கை
இலங்கை - இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கையை உடனடியாக கைச்சாத்திடுவதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டுமென்றும் அதன் மூலம் இந்திய விமானப் படையினருடன் பயிற்சிகளை மேற்கொண்டு புலிகளின் விமானப் படைப்பிரிவை அழித்தொழிக்க வேண்டுமென்றும் ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நுகேகொடையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவெல மேதானந்த தேரர் தலைமையில் கூடிய மத்திய குழுக் கூட்டத்திலேயே இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மாலை 4 மணிக்கு கூடிய மத்திய குழுக் கூட்டம் இரவு 8 மணி வரை இடம்பெற்றுள்ளது. இதில் அத்துருலியே ரத்ன தேரர், கொட்டபொல அமரகித்தி தேரர் மற்றும் மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக ஹெல உறுமயவின் பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிறி தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,
யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட்ட 3 வருட காலத்திற்குள் விடுதலைப் புலிகள் விமானப் படைப் பிரிவையும் அமைத்து இரணைமடுவில் ஓடு பாதையையும் அமைத்துள்ளதை எமது இராணுவத்தினதும் வெளிநாட்டு இராணுவத்தினதும் உளவுப் பிரிவுகள் கண்டுபிடித்து உறுதிப்படுத்தியுள்ளன.
இது எமது நாட்டுக்கு மட்டுமல்ல தென்கிழக்காசியாவிற்கே பெரும் ஆபத்தாகும். யுத்த நிறுத்தம் முறிவடைந்தால் புலிகள் தமது விமானப்படை பிரிவை பயன்படுத்தி நாட்டில் பாரிய அழிவை ஏற்படுத்தும் அச்சுறுத்தலும் இருக்கின்றது.
இதுபோன்ற ஆபத்து நிலையை ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவோ, அரசாங்கமோ அல்லது வேறு அரசியல் கட்சிகளோ கண்டும் காணாது அலட்சியப் போக்கை கடைப்பிடிக்கின்றன.
எனவே, ஜனாதிபதி உடனடியாக இது தொடர்பில் கூடிய கவனத்தை செலுத்துவதோடு மட்டுமல்லாமல் இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டு இந்திய விமானப் படையுடன் பயிற்சிகளை மேற்கொண்டு புலிகளின் விமானப் படைப் பிரிவை அழித்தொழிக்க வேண்டுமென்றும் மத்திய குழு முடிவெடுத்து அதனை ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் அறிவிக்கவும் தீர்மானிக்கப்பட்டதாக நிஷாந்த ஸ்ரீ வர்ண சிறி தெரிவித்தார்.
தினக்குரல்

...............