03-11-2005, 10:36 AM
நீர்வேலி சம்பவத்துடன் தொடர்புடைய படையினன் நீதிமன்றத்தில் ஆஜர்
யாழ். நீர்வேலிப்பகுதியில் வயோதிபப் பெண்மணி மீது பாலியல் வன்புணர்வு முயற்சியில் ஈடுபட்ட சிறீலங்காப் படையினனான ஆர்.எம்.விமலரட்ன இன்று யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
யாழ். நீர்வேலி வில்லுமடத்தடிப் பகுதியில் தனிமையில் இருந்த 63 அகவையுடைய வயோதிபப் பெண்மணி மீது பாலியல் வன்புணர்வுக்கு முயற்சித்த படையினன் ஒருவர் அப்பகுதி மக்கள் துரத்தியதை அடுத்து அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
அவர் அங்கிருந்து தப்பி தனியார் பேரூந்துகள்ää முச்சக்கர வண்டிகள் என்பன ஊடாக காங்கேசன்துறைப் படை முகாமுக்கு தப்பியோடி ஒளித்திருந்த வேளை சிறீலங்கா இராணுவ காவல்த்துறையினரால் நேற்று இரவு 7 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் கோப்பாய் சிறீலங்கா காவல்த்துறையினரிடம் கையளிக்ப்பட்டார்.
இன்று அவர் யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்ப்படுவார் என்று காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று அசம்பாவிதம் இடம்பெற்றதைத் தொடர்ந்து அப்பகுதியில் பெருமளவான மக்கள் திரண்டு படையினருக்கு எதிரான மறியல்ப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளை அங்கு சென்ற கோப்பாய் சிறீலங்கா காவல்த்துறை அத்தியட்சகர் செல்வம் குற்றவாளி உடனடியாகக் கைது செய்யப்படுவார் என்று வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து மக்கள் விலகிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
.
சுட்டபழம்
நன்றி புதினம்

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]