03-11-2005, 12:47 AM
அனைத்து உறவுகளது வாழ்த்துகளுக்கும் கருத்துகளுக்கும் நன்றிகள்.
சுனாமி அர்த்தத்தை பார்த்ததும் எனக்குள் ஏற்பட்ட அதிர்வுகளோடு இலங்கையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் ஒரு வேலைக்கு இலங்கை சென்றேன்.
<img src='http://www.yarl.com/forum/files/julia.1.jpg' border='0' alt='user posted image'>
அத்தோடு ஒரு விவரணப்படத்தை தயாரிக்கும் பொறுப்பு நான் வாழும் நாட்டினாரால் எனக்குத் தரப்பட்டது.
நான் சில வாரங்கள் இலங்கையின் பல பகுதிகளுக்குச் சென்றேன்.
அங்குள்ள நிலைகள் என்னை வருத்தியது.
என் இதயத்தில் தைத்தவற்றை படமாக்க நினைத்து இப்படத்தை உருவாக்கினேன்.
எனக்கு அரசு சார்பற்ற நிறுவனங்களில் வேலை செய்யும் அனைவரும் உதவினார்கள்.
சில நாட்கள் கொசுக்கடியோடு கூடாரங்களில் கூட தங்கினேன்.
குழந்தைகளோடு நானும் குழந்தையாய் வாழ்ந்த அனுபவங்கள் வார்த்தைகளால் சொல்ல முடியாதவை.
பெற்றோரை இழந்த குழந்தைகள் தன்னை கட்டியணைத்து கொஞ்சுமாறு கேட்கும் போது இதயமே நின்று விடும்.
அவர்கள் பணத்தையோ பொருளையோ நம்பி இல்லை.
அன்பை மட்டுமே வேண்டி நிற்கிறார்கள்.
என்னைக் கட்டியணைத்துக் கொஞ்சேன் என்று குழந்தைகள் கேட்டால் யாரால் மறுக்க முடியும்...................................
நம்மால் அவர்களது வினாக்களுக்கு விடை கொடுக்க முடியாது.
உண்மையை அவர்களுக்கு சொல்வது நமது கடமை............................
<img src='http://www.yarl.com/forum/files/julia.2.jpg' border='0' alt='user posted image'>
நம்பிக்கையை வளர்ப்பது மட்டுமல்ல
நாம் அவர்களுக்காக எதையாவது செய்வதும் நமது கடமை......................