03-10-2005, 03:16 PM
ஈழப்பிரச்சனையும் தமிழ் சினிமாவும்
அரை நூற்றாண்டாக நடந்து வரும் பிரச்சனை. ஐந்தாறு வருடங்களுக்கு முன்தான் நமக்கு உறைத்தது. 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'காற்றுக்கென்ன வேலி' படங்களில் ஈழப்பிரச்சனை அலசப்பட்டது. 'நந்தா'வின் பின்னணியும் இது சார்ந்ததே.
ஆனால் ஈழப்பிரச்சனையை பிரதிபலிக்கும் முழுமையான படம் வெளிவந்துள்ளதா? இல்லை. அதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார் நெறியாள்கை தங்கர்பச்சான். இவரது 'தாய்மண்' புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் பற்றியது. அகதிகளாக பிறநாடுகளில் கரை ஒதுங்கிய தமிழர்கள் ஏராளம். இவர்கள் வழியாக ஈழப் பிரச்சனையை முன்வைக்கிறார் தங்கர்.
இதற்கான பூர்வாங்க வேலைகள் முடிந்துவிட்டன. தேவை ஒரு தயாரிப்பாளர். தங்கர்பச்சான் மீது தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் உள்ளது. அதனால் 'தாய்மண்' ஈழப்பிரச்சனை போலவே நீண்டு செல்கிறது.
தங்கர்பச்சானைப் போல ஈழத்தின் மீது ஈர்ப்பு கொண்டவர் பாரதிராஜா. சில மாதங்களுக்கு முன் ஈழம் சென்றிருந்தார் இவர். பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். தமிழ் என்று சொன்னால் தூக்கத்திலும் உணர்ச்சி வசப்படும் குணம் பாரதிராஜாவுக்கு. இவர் சென்றதோ தமிழர்கள் வதைப்படும் இலங்கை. கேட்க வேண்டுமா?
ஈழப் பிரச்சனை குறித்து படம் எடுத்தே தீருவது என்ற வெறியில் இருக்கிறார் பாரதிராஜா. மண்ணை அதன் மணத்தோடும், ரணத்தோடும் தரும் வல்லமை தமிழில் பாரதிராஜாவுக்கு மட்டுமே சித்தித்திருக்கிறது. அவர் இயக்கத்தில் ஈழத்தமிழர்கள் பற்றிய படம்....
காண கண் கோடி வேண்டும்!
சினி சவுத்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>