03-10-2005, 04:10 AM
நண்பர்களே! படைப்புகள் பற்றிய எனது கருத்து
மேலே தமிழினி தந்துள்ள கவிதை அவருடைய படைப்பு. அதில் அவர் எதை சொல்லியிருக்கலாம் எதை சொல்லியிருக்க கூடாது என தீர்மானிப்பது நாங்களல்ல. அவர் தான். அப்படி நாங்கள் தீர்மானித்தால் அப்படைப்பு எங்களுடையது. ஆக அவர் தந்த கவிதை அழகியல் தன்மையில் எம்மை ஈர்த்ததா? அது எந்த வகையில் அமைந்தது தொடர்பாகவே கருத்து சொல்லும் உரிமை விமர்சகனுக்கு உண்டு- மாறாக நீங்கள் ஒரு பக்க சார்பாக எழுதுகின்றீர்கள் நீங்கள் அப்படி எழுதுகிறீர்கள் இப்படி எழுதுகிறீர்கள் என்பதாகவே பெரும்பாலான விமர்சனங்கள் அமைகின்றன- அப்படியெனில் இந்த விமர்சனங்கள் தங்கள் எண்ணங்களை ஊதுகுழலாக படைப்பாளி இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றதா? ஒருவன் இந்த சமூகத்தை பார்க்கின்ற பார்வையும் ஒரு படைப்பாளி பார்க்கின்ற பார்வையும் வேறுபாடானவை. அவ்வாறு பார்க்கின்ற பார்வை தான் படைப்பாளியை சமூகத்திடம். இனம் காட்டுகின்றது. சமூகம் ஏற்றுக்கொள்ளும். இல்லை நிராகரிக்கும். உடனடியாக நிராகரித்து பின்னர் தலையில் தூக்கி வைக்கும். (பாரதியை போல) உடனடியாக இவனல்லோ படைப்பாளி என்று குதூகலித்து எதிர்காலத்தில் தூற்றும். அதெல்லாம் படைப்பாளியின் படைப்பு ஏற்படுத்தும் தாக்கத்தை பொறுத்தது. படைப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் என வழிநடத்த எந்த எpமர்சக கொம்பனுக்கும் உரிமை கிடையாது. நண்பர்கள் சிந்திக்கலாம். மாற்று கருத்து இருந்தால் முன் வைக்கலாம்.

.
.!!
.!!