03-09-2005, 05:45 PM
<img src='http://p.webshots.com/ProThumbs/33/15133_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
[b]மகளீர்க்கு ஒரு தினம்
மகளீர் தினம்
குட்டுப்பட்டு குட்டுப்பட்டு
குனிந்து விட்ட
தலைகள் யாவும்
இன்னும் நிமிர்ந்திடவில்லை
எங்கோ நிமிர்ந்து விட்ட
தலைகள் ஒன்றிரண்டின்
கொக்கரிப்பா இது
பஞ்சாயத்தின் தீர்ப்பிற்காய்
பாஞ்சாலியாய் ஆக்கப்பட்ட
பாகீஸ்தானிய மங்கைக்கு
நீதியில்லை..
கொண்டையில் பிடித்து
கொண்டவன் கொடுமை
செய்வதற்காய்
கோட்டேறி தவணை
கேட்ட பெண்
இன்னும் இவ்வுலகில்
ஆண்குழந்தைக்காய் ஆசை கொண்டு
ஐயா சாமி என்று
சாமியாரின் இச்சைக்கு
இரையான சிந்தனை திறனற்ற
பெண்களும் இவ்வுலகில் தான்.
காதலென கைபிடித்து
சீதனத்தை உதறிவிட்டு
வேண்டா மருமகளாய்
காஸ் வெடித்து
கதைமுடிந்து போவதும்
இங்கே தான்
கணவனிற்காய் காத்திருக்க
கணவனோ கண்ட வீடு மேய
காத்திருந்து அவனை ஏற்பவளும்
இன்னும் இங்கே தான்..
பிறபெண்ணை ஆய்ந்தவனை
வேண்டவென விலக்கி விட்டு
வீரமாய் வாழாது.
விதியென்றெண்ணி..
காலடியில் வீழ்ந்து கிடப்பவளும்
இன்னும் இங்கு
இச்சைக்கு அழைத்தவனை
செல்வாக்கான இடம் என்று
செருப்பால் அடிக்காமல்
மானம் என்றும் மிரட்டல்
என்றும் பயந்து..
எழுத்தால் அடிக்காது
வெளியே சொல்லாத
பெண்ணியம் பேசும்
எழுத்தாள பெண்மணியும்..
இன்னும் இங்கே தான்.
எங்கே அடக்கப்படுகிறதோ..
எங்கே ஒடுக்கப்படுகிறதோ
அங்கே விடியல் இல்லை.
அவர்களிற்கு விழிப்புணர்வு
கொடுக்க பெண்ணியவாதிகள் இல்லை.
எங்கோ ஒருமூலையில்
எதுவுமே அறியாது.
அடுப்பிற்குள் விறகாய்
இரையாகிப் போகும்
அப்பாவி பெண்களிற்கு
மகளீர் தினம்..
என்னவென்று தான் புரியுமா..??
ஆணும் பெண்ணும் சமன் என
அறைகூவல் விட்டுக்கொண்டு
பெண்ணிற்கு மட்டும் விழா எதற்கு
கிடைக்கும் என்று
காத்திருப்பில் பலன் ஏது
பெண்கள் நிலை உயர
வேண்டும் எனின்
ஒரு மகளீர் தினம் தேவையில்லை
தினம் தினம் சாதிக்க வேண்டும்
வருடம் முழுதும் கூப்பாடு..
வருடத்தில் ஒருநாள் பெண் புகழ்பாடா..??
எத்தனை தினங்கள் பெண்ணிற்கு
வயதிற்கு வந்துவிட்டால் தினம்
வளைகாப்பு தினம்
தாலி அறுப்பு தினம்
பெண்ணை பொம்மையாய் இருத்தி
பூசைசெய்யும் தினங்கள்
இன்னும் அழியவில்லை
இதற்குள் ஒரு மகளீர் தினம்
செயல்வடிவு பெறாத காரியங்கள்
மூலைக்குள் முடங்கிக்கிடக்க
அர்த்தமே இல்லாத
ஒரு மகளீர் தினமா..??
களையப்பட வேண்டிய
எத்தனையோ களைகள்
களையப்படாமல் இருக்க..
மகளீர் தினம் என்று..
மன்றங்களில் பேசியும்.
மலர்ச்செண்டு பரிசளித்தும்..
பயன் என்ன..??
தொடரும்...!
[b]மகளீர்க்கு ஒரு தினம்
மகளீர் தினம்
குட்டுப்பட்டு குட்டுப்பட்டு
குனிந்து விட்ட
தலைகள் யாவும்
இன்னும் நிமிர்ந்திடவில்லை
எங்கோ நிமிர்ந்து விட்ட
தலைகள் ஒன்றிரண்டின்
கொக்கரிப்பா இது
பஞ்சாயத்தின் தீர்ப்பிற்காய்
பாஞ்சாலியாய் ஆக்கப்பட்ட
பாகீஸ்தானிய மங்கைக்கு
நீதியில்லை..
கொண்டையில் பிடித்து
கொண்டவன் கொடுமை
செய்வதற்காய்
கோட்டேறி தவணை
கேட்ட பெண்
இன்னும் இவ்வுலகில்
ஆண்குழந்தைக்காய் ஆசை கொண்டு
ஐயா சாமி என்று
சாமியாரின் இச்சைக்கு
இரையான சிந்தனை திறனற்ற
பெண்களும் இவ்வுலகில் தான்.
காதலென கைபிடித்து
சீதனத்தை உதறிவிட்டு
வேண்டா மருமகளாய்
காஸ் வெடித்து
கதைமுடிந்து போவதும்
இங்கே தான்
கணவனிற்காய் காத்திருக்க
கணவனோ கண்ட வீடு மேய
காத்திருந்து அவனை ஏற்பவளும்
இன்னும் இங்கே தான்..
பிறபெண்ணை ஆய்ந்தவனை
வேண்டவென விலக்கி விட்டு
வீரமாய் வாழாது.
விதியென்றெண்ணி..
காலடியில் வீழ்ந்து கிடப்பவளும்
இன்னும் இங்கு
இச்சைக்கு அழைத்தவனை
செல்வாக்கான இடம் என்று
செருப்பால் அடிக்காமல்
மானம் என்றும் மிரட்டல்
என்றும் பயந்து..
எழுத்தால் அடிக்காது
வெளியே சொல்லாத
பெண்ணியம் பேசும்
எழுத்தாள பெண்மணியும்..
இன்னும் இங்கே தான்.
எங்கே அடக்கப்படுகிறதோ..
எங்கே ஒடுக்கப்படுகிறதோ
அங்கே விடியல் இல்லை.
அவர்களிற்கு விழிப்புணர்வு
கொடுக்க பெண்ணியவாதிகள் இல்லை.
எங்கோ ஒருமூலையில்
எதுவுமே அறியாது.
அடுப்பிற்குள் விறகாய்
இரையாகிப் போகும்
அப்பாவி பெண்களிற்கு
மகளீர் தினம்..
என்னவென்று தான் புரியுமா..??
ஆணும் பெண்ணும் சமன் என
அறைகூவல் விட்டுக்கொண்டு
பெண்ணிற்கு மட்டும் விழா எதற்கு
கிடைக்கும் என்று
காத்திருப்பில் பலன் ஏது
பெண்கள் நிலை உயர
வேண்டும் எனின்
ஒரு மகளீர் தினம் தேவையில்லை
தினம் தினம் சாதிக்க வேண்டும்
வருடம் முழுதும் கூப்பாடு..
வருடத்தில் ஒருநாள் பெண் புகழ்பாடா..??
எத்தனை தினங்கள் பெண்ணிற்கு
வயதிற்கு வந்துவிட்டால் தினம்
வளைகாப்பு தினம்
தாலி அறுப்பு தினம்
பெண்ணை பொம்மையாய் இருத்தி
பூசைசெய்யும் தினங்கள்
இன்னும் அழியவில்லை
இதற்குள் ஒரு மகளீர் தினம்
செயல்வடிவு பெறாத காரியங்கள்
மூலைக்குள் முடங்கிக்கிடக்க
அர்த்தமே இல்லாத
ஒரு மகளீர் தினமா..??
களையப்பட வேண்டிய
எத்தனையோ களைகள்
களையப்படாமல் இருக்க..
மகளீர் தினம் என்று..
மன்றங்களில் பேசியும்.
மலர்ச்செண்டு பரிசளித்தும்..
பயன் என்ன..??
தொடரும்...!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

