Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சமஷ்டித்தீர்வு அவசியம்... ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்
#2
சமஷ்டி முறைத்தீர்வு குறித்த மக்கள் கருத்தறிய விரைவில் தேர்தல் என்கிறார் ஜனாதிபதி

நாட்டில் அறுபது சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வு காணப்படுவதையே விரும்புகின்றனர் என்று சிறீலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் மகளிர் அமைப்பு நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில் -

இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வை ஏற்படுத்த எனது ஜனாதிபதி பதவியை அர்ப்பணிக்கவே தயாரகவுள்ளேன். இந்த தீர்வுமுறை தொடர்பான சர்வஜன வாக்கெகெடுப்பையோ அல்லது தேர்தலையோ விரைவில் நடத்த திட்டமிட்டுள்ளேன்.

கடந்த காலத்தில் எனது அரசு முன்வைத்தது போன்ற தீர்வுப்பொதியை எந்த அரசும் முன்வைக்கவில்லை.

அரசாங்கமோ புலிகளோ போரில் வெல்லமுடியாது. யுத்தம்தான் இனப்பிரச்சினைக்கு தீர்வு என்று கூறுபவர்கள் நாட்டின் துரோகிகளாகவே கருதப்படுவர்.எனது கட்சிக்குள்ளேயே இருந்து என்னை எதிர்ப்பவர்கள் உள்ளார்கள். எனது ஆளும் கூட்டணிக்குள் உள்ள கட்சியினர் என்னை வெளிப்படையாக வசைபாடுகின்றனர். இவர்கள் என்னை கொலை செய்யக்கூட முயற்சிக்கலாம். ஆனால் இவற்றுக்கொல்லாம் பயந்து சரியான முடிவெடுப்பதிலிருந்து நான் பின்வாங்கி விடமாட்டேன்.

நாட்டுக்கு வெளிநாட்டு உதவிகள் வரத்தொடங்கிவிட்டன. பொருளாதாரம் மீண்டும் ஆரோக்கிய நிலைக்கு வந்துவிட்டது. ஆனால் வெளிநாட்டு உதவிகளை எதிர்த்துக்கொண்டு குரங்குகள் போல குளறும் சில ஆளும்கட்சி வகுப்பினர் வெளிநாட்டு உதவியின்றி நாட்டை முன்னேற்ற முடியும் என்று கனவு காண்கின்றனர் என்று தனதுரையில் குறிப்பிட்டார்.


சுட்டபழம்

நன்றி புதினம்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply


Messages In This Thread
[No subject] - by வியாசன் - 03-09-2005, 10:35 AM
[No subject] - by Nilavan - 03-09-2005, 06:07 PM
[No subject] - by kuruvikal - 03-09-2005, 07:31 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)