Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சமஷ்டித்தீர்வு அவசியம்... ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்
#1
சமஷ்டித்தீர்வு ஏற்படுத்துவதன் அவசியம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

ஒஸ்லோ பிரகடன வரைவிற்கு அமைய ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டித்தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதன் அவசியம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக்கொள்கைகளுக்கான ஆணையாளர் பெனிற்றா பெரேரோ வோல்ட்னர் கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டபோது இதனை தெரிவித்துள்ளார்.

இந்த தீர்வுமூலம் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

சிறீலங்கா அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் கைச்சாத்திட்ட யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் மூலமாக பல்வேறு நண்மைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதனை கௌரவிக்கும் முகமாக வன்முறைச்சம்பவங்களையும் சிறுவர்களை யுத்த நடவடிக்கைகளுக்காக சேர்ப்பதையும் இடைநிறுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக்கொள்கைகளுக்கான ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் சமாதான நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்களிப்பு குறித்தும் அவர் விளக்கியுள்ளார்.

மேலும் ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புனர்நிர்மாணப்பணிகள் குறித்து அவர் விரிவாக தெரிவித்துள்ளார்.

இவ் ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வழங்கக்கூடிய உதவிகள் குறித்து தங்களது பிரதிநிதிகள் இவ் விஜயத்தின்போது ஆராய்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புனர்நிர்மாணப்பணிகளுக்கு அவசியமான பொதுக்கட்டமைப்புக்குறித்தும் அவர் தெளிவுபடுத்தினார்.

இவ்வாறான பொதுக்கட்டமைப்பு ஒன்று உருவாகுவது அவசியமானது என்றும் இதனை உருவாக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று சகல தரப்பினரையும் அவர் கேட்டுள்ளார்.

குறிப்பாக அரசாங்கம்ää விடுதலைப்புலிகள் எதிர்க்கட்சிகள் ஆகியவற்றின் ஆதரவு இதற்கு மிகவும் அவசியம் என்று தெரிவிக்கும் அவர்ää

தற்போது இது குறித்து நடைபெறும் பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறும் என்றும் தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.





சுட்டபழம்
நன்றி புதினம்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply


Messages In This Thread
சமஷ்டித்தீர்வு அவசியம்... ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல் - by வியாசன் - 03-09-2005, 10:34 AM
[No subject] - by வியாசன் - 03-09-2005, 10:35 AM
[No subject] - by Nilavan - 03-09-2005, 06:07 PM
[No subject] - by kuruvikal - 03-09-2005, 07:31 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)