08-31-2003, 04:53 PM
<span style='font-size:25pt;line-height:100%'>முஸ்லிம்கள்: மூன்றாந்தரப்பா?, போராட்டத்தின் மீளிணைவா?சுதர்மா (கனடா)</span>
இலங்கைத் தீவின் இனப்பிரச்சினை மிகவும் முக்கியமானதொரு கட்டத்தை அடைந்துள்ளதாகக் கருதப்படும் இன்றைய பொழுதில், வட-கிழக்கு வாழ் முஸ்லிம் மக்கள் தொடர்பான கருத்துப்பதிவுகள் மூன்றாந்தரப்பொன்றின் தோற்றுவாய்க்கான திசையை நோக்கியதாகவே பயணித்துக் கொண்டிருக்கின்றன. எனவே இலங்கைத் தீவில் மொழிவழியே இணைவுபெற்ற ஈரினங்களின் இன்றைய நிலை பற்றிய ஒரு பார்வையாக இந்த வாரத்தை எடுத்துச் செல்வோம். குறிப்பாக, முஸ்லிம்கள் தமிழ்த் தேசியத்திலிருந்து எவ்வாறு பிரித்தாளப்பட்டார்கள் அல்லது வஞ்சககரமான சூட்சிக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்பதனையும் அவற்றின் இன்றைய விளைவுகளையும் மாத்திரம் கவனத்திலெடுப்போம்.
விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப வளர்ச்சிக்கான பங்களிப்பு இரு இனங்களினதாகவுமே இருந்தது. பல முஸ்லிம் இளைஞர்கள் விடுதலைக்காக தங்களை ஆகுதியாக்கினார்கள். ஆனால், 1984ம் ஆண்டளவில் இஸ்லாத்தின் எதிரியாகக் கருதப்பட்ட இஸ்ரேலிய மொசாட்டின் நேரடி உதவி பெறப்பட்டு, அவர்களை விடுதலைப்போருக்கெதிரான முதன்மைச் சக்தியாகப் பயன்படுத்திய சிங்களம், மறுபுறத்தே ஜிகாத் போன்ற தீவிர மதவாத அமைப்புக்களை ஆரம்பிப்பதற்கான வசதிகளையும், அவற்றிற்கான ஆயுதவிநியோகத்தையும் மேற்கொண்டு, அவர்களின் சன்மார்க்க ரீதியான உணர்வுகளை தமிழர்களிற்கு எதிராகத் திருப்பிவிடும் வேலைகளை முனைப்புடன் மேற்கொண்டது.
துரதிஷ்டவசமாக, சிறிலங்காவின் இந்தப் பிரித்தாளும் தந்திரம் தமிழ்ப்பகுதிகளில் வெற்றிபெற்றதே இன்றைய இந்த பிரிவு நிலைக்கான முழுக்காரணம். ஏனெனில், ஆயுதபாணிகளாகப்பட்ட மேற்படி அமைப்புக்கள் படையினருடான முழு ஐக்கியத்தைக் கொண்டவர்களாகவும், அரச உதவிகளைத் தாராளமாகப் பெறுபவர்களாகவும் மாற்றம் பெற்றதானது களநிலைமையில் சிக்கலை உருவாக்கியது. குறிப்பாக ஜிகாத் போன்ற அமைப்புக்களின் ஆயுதப்பரம்பல்; வேகமும் அதனூடான திட்டங்களும், தமிழரின் தற்காப்புத் தொடர்பான பயமும் நிலைமையை எதிர்பாராத திசைக்கு இட்டுச் சென்றது. அதுவே இருதரப்பும் விரும்பாத குடாநாட்டு நிகழ்வுகளிற்கும் வழிவகுத்தது.
இக்கால கட்டத்தில் இவ்வினங்களின் மீள் இணைவிற்கு ஏதுவாக ஏப்ரல் 1988ல் சென்னையில் வைத்து ஒரு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. தமிழர் தரப்பின் சார்பில் கேணல் கிட்டுவிற்கும் முஸ்லிம் தலைவர்களில் ஒருவரான பதியுதீனிற்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட இவ்வொப்பந்தம் மிகவும் ஆரோக்கியமான பல விடயங்களை உள்ளடக்கியிருந்தாலும், களத்தின் நிலைமை எதிர்பார்ப்பிற்கு மாறாக இருந்ததால் அதனை சாத்தியப்படுத்தும் சந்தர்ப்பம் அமைவுபெறவில்லை. குறிப்பாக முஸ்லிம் தீவிரவாத அமைப்புக்களின் செயற்பாடு போராட்டத்திற்கு மிகுந்த நெருக்கடியைக் கொடுப்பதாக அமைவு பெற்றதே இதற்கான காரணம்.
அதிலும் அவ் அமைப்புக்களோடு, ஊர்காவற்படை மற்றும் விசேட துணைப்படை ஆகியன உருவாக்கப்பட்டதோடு நேரடியாகப் படைகளிற்கும் முஸ்லிம் இளைஞர்கள் சிங்களத்தால் தாராளமாக உள்வாங்கப்பட்டனர். இந்நிலையில், 1990க்களின் ஆரம்பத்தில் கிழக்கில் விசேட அதிரடிப்படையால் நிகழ்த்தப்பட்ட வீரமுனை, புதுக்குடியிருப்புப் போன்ற பல படுகொலைச் சம்பவங்களில் முஸ்லிம் துணைப்படைகளின் பங்காற்றுகை நிறையவே சாட்சியப்படுத்தப்பட்டது. அதுவே முஸ்லிம்களை சிங்களத்திற்கு துணையாக போரிடும் ஒரு சக்தியாக அடையாளப்படுத்தியது. இதன் காரணமாக காத்தான்குடி மற்றும் அம்பாறைப் பிரதேசங்களில் அவர்கள் மீதான சில தாக்குதல்கள் இடம்பெற்றன.
அக் காலகட்டத்தில் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியிலிருந்து பிரிந்தவர்களால் உருவாக்கப்பட்ட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்தன்மை பேணலிற்கான முக்கிய காரணியாக விளங்கியது. 1988ல் ஒரு தேசியகட்சியாக அது அங்கீகரிக்கப்பட்டதும், அதன் செயற்பாடுகள் கிழக்கிலங்கை முஸ்லிம்களையே குறியாகக் கொண்டு நகர்த்தப்பட்டது. தென்னகத்தில் ஓரிரு இடங்களைத் தவிர மீதி இடங்களில் முஸ்லிம்கள் பரம்பலாக வாழ்வதால், முஸ்லிம்கள் மிகவும் செறிந்து வாழ்ந்த கிழக்கிலங்கையே முன்தளமாக்கப்பட்டது. அதுவே தமிழ்ப்பகுதி முஸ்லீம்களை மதவழியானதொரு இனமாகப் முன்நகர்த்திச் செல்வதற்கான ஊக்கத்தை வழங்கிநின்றது.
இவ்வாறாகத் தொடர்ந்த முஸ்லிம் தலைமையின் செயற்பாடுகளின் ஒரு அங்கமாக, இடைக்கால நிர்வாக சபை ஏற்படுத்தப்பட்டால், அதில் முஸ்லிம்களின் பங்காற்றுகை என்ன என்பது பற்றிய சிந்தனை அக்கறைக்குட்படுத்தப்பட்டது. அதன் பிரகாரம், சிங்களத்தின் இருபிரதான கட்சிகளிற்கும் 26.06.2000ம் அன்று முஸ்லிம் காங்கிரசின் அப்போதைய தலைவர் எம்.எச்.எம் அஸ்ரப் அவர்கள் தங்களது யோசனைகளைச் சமர்ப்பித்திருந்தார். வட-கிழக்கு இடைக்கால நிர்வாக அமைப்பிலே விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தைக் வலியுறுத்திய அவ்யோசனை சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில் ஆகியவற்றை உள்ளடக்கிய தனி நிர்வாக மாவட்டம் ஒன்றைக் கோரியிருந்தது.
அதன் பின் இது தொடர்பான யோசனைகள் கிடப்பில் போடப்பட்ட நிலையையடைந்தன. மறுபக்கமாக, போரின் மீதான தமிழர் தரப்பின் வெற்றியானது சமாதான முயற்சிக்கு இயைந்து செல்ல சிங்களத்தை நிர்ப்பந்தித்தது. இதனையடுத்து ஏற்பட்ட முன்னேற்றங்களில் ஒரு அங்கமாக, இரு சிறுபான்மை இனங்களினதும் மீள் இணைவிற்கான வரலாற்று ஒப்பந்தமொன்று கடந்த ஆண்டு ஏப்ரல் 13ம் திகதி தமிழீழத் தேசியத் தலைவராலும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவராலும் கைச்சாத்திடப்பட்டது. எனினும் இவ்வொப்பந்தமும் வெற்றி பெற முடியாதபடி கிழக்கிலங்கையில் இடம்பெற்றுவரும் நிகழ்வுகள் நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றன.
குறிப்பாக, முஸ்லிம் இளைஞர்கள் காணமல் போவது, கொலை செய்யப்படுவது என்பன இடம்பெறும் போது தமிழர் தரப்பினரின் செயற்பாடாகவே இவை சுட்டிக்காட்டப்பட்டாலும், அதை மறுதலிப்பனவாக அச் சம்பவச் சாட்சியங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக, கடந்த ஆண்டு யுூனில் இடம்பெற்ற மூதூர் கலவரங்கள், ஒக்டோபரில் இடம்பெற்ற அக்கறைப்பற்றுப் பதட்டம், அதேகாலத்தில் மன்னாரில் இடம்பெற்ற முஸ்லிம்களிற்கெதிரான துண்டுப்பிரசுரம், இந்த ஏப்ரலில் ஜமாலியாவில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதல், இந்த மாதம் மூதூர், சம்மாந்துறை மற்றும் சாய்ந்தமருதுவில் இடம்பெற்ற சம்பவங்கள் மாற்று சக்திகளையே சுட்டி நிற்கின்றன.
எனினும், இன அமைதியைக் குழப்புவதற்காகவும், சமாதானப் பேச்சுக்களில் தடங்கலை ஏற்படுத்துவதற்காகவும் மேற்கொள்ளப்படும் இம்முயற்சிகளிற்கான பலிக்கடாவாக முஸ்லிம்களின் தலைமைகள் மாறிவிடும் ஆபத்துக் காணப்பட்ட போதும், இவ் வன்முறைச் சம்பவங்களிற்கும் தமிழர் தரப்பிற்கும் தொடர்பில்லையென்பதை திரு. அலிசார் மௌலானா, திரு. எம்.எச். மொகமட் போன்ற முஸ்லிம் அரசியற்தலைவர்கள் சுட்டிக்காட்டத் தவறவில்லை. ஆனாலும் இச்சம்பவங்கள் முஸ்லீம்களிற்கான தனிப்பிரதிநிதித்துவத்தைக் கோரவும், பொலிஸ் ஆட்சேர்ப்பிற்கு உத்தரவு வழங்கவும் என மேற்படி வன்முறைச் சக்திகள் விரும்பும் திசையிலேயே சென்று கொண்டிருக்கிறது.
குறிப்பாக முஸ்லிம் தலைமை தமிழர் தரப்பென்று வரும்போது வேற்றுமுகம் காட்டுவதாகவே அதன் செயற்பாடுகள் அமைந்துள்ளன. ஏனெனில் 2001ம் ஆண்டு மே மாதம் மாவன்னல்லவில் முஸ்லிம்களிற்கெதிரான இனக்கலவரம் இடம்பெற்ற போது 'விடுதலைப்புலிகள் போன்ற வகுப்புவாத சக்திகள் தங்களிற்கு சாதகமாக இவற்றைப் பாவிக்கலாம், எனவே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் பார்க்;க வேண்டும்" என சனாதிபதிக்கு மனுச் செய்த முஸ்லிம் காங்கிரஸ், இன்றைய கிழக்கிலங்கைச் சம்பவங்கள் தொடர்பாக உண்மைகளை அறிவதை விடுத்து, பொலிஸ் ஆட்சேர்ப்பு, இதர நாடுகளிற்கான வேண்டுகோள் என இனவாதிகளின் விருப்பைப் புூர்த்தி செய்து வருகிறது.
ஆனால் முஸ்லிம் தலைமையானது தன்னை ஒரு சுய பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயத்தை காலம் அதற்கு இப்போது வழங்கி நிற்கிறது. அதாவது 'விடுதலைப்போராட்டத்தின் வெற்றியாக"| பேச்சுமேசைக்கு வந்துள்ள இடைக்கால நிர்வாகம் தொடர்பான விவகாரத்தில் அது ஒருதலைப்பட்ச நிலைப்பாட்டை மேற்கொள்ள விளைகிறது. அவ்வாறாயின், சிங்களத்தின் வெறுப்பிற்குள்ளாகி இடைக்கால நிர்வாகம் பேச்சுமேசையிலிருந்து தூக்கியெறியப்பட்டால் தமிழர் தரப்பு மீண்டும் போராட நிர்ப்பந்திக்கப்படும். அப்போது முஸ்லிம் தரப்பு என்ன செய்யப் போகிறது என்கிற கேள்விக்கான விடையைக் காண வேண்டியதே அதற்கான சுயபரிசோதனையாகும்.
ஏனெனில், வடக்குக் கிழக்கு இடைக்கால நிர்வாகத்தில் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் என்கிற நியாய நிலைப்பாட்டை அது மறுதலிக்கிறது. அத்தோடு, இலங்கையின் சனத்தொகையில் 7 வீதமாக இருந்தும் பொலிஸ் படையில் 15 வீதமாகவும், இதர துறைகளிலும் தமது விகிதாசாரத்திற்கு அதிகமான இடங்களைக் கொண்டுள்ள முஸ்லிம்கள் மீண்டும் போர் வெடித்தால் போராட்டத்தில் என்ன நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றனர் என்பதனை தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு அவர்களிற்;குண்டு. ஏனெனில் வட-கிழக்கை மரபுவழித் தாயகமாக கொண்ட முஸ்லிம் மக்கள் பகடைக்காயாக்கப்படுவதான நிலையை இன்றைய அவர்களது அரசியல் எடுத்தியம்புகிறது.