03-06-2005, 02:26 PM
Quote:கடந்த 03ம்திகதி லஞ்ச ஆணைக்குழுவின் பிரதிநிதியாக ஏனையோரால் பிரேரிக்கப்பட்டு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் ரி. ஆனந்தராஜா.
இது தவிர பொலிஸ் மா அதிபர் பதிவி உட்பட சில பதவிகளும் வந்து விட்டு போனது அப்போது கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. வேறு ஏதாவது கிடைகாதா என்று காத்திருந்தார். தற்போது ஒரு பதவியும் கிடைக்காத நிலையில் தான் தமிழன் என்பதனால் புறக்கணிக்கணிக்கப்பட்டேன் என்று சொல்லி அனுதாபம் தேடுவதை தவிர வேறு வழியில்லை.
Quote:சிறிலங்கா விமானப்படையை கட்டியெழுப்புவதற்காக அப்போதைய ஜனாதிபதியான ஜேஆர் அவர்களால் சிங்கப்பூரிலிருந்து தமிழ் விமான கப்டன் ஒருவர்வரவழைக்கப்பட்டிருந்தார். இவரைப்பற்றியாவது யாராவது அறிந்திருக்கிறீர்களா?
சிங்கப்பூர் எயார்லைன்ஸ் முன்ணணி விமான சேவையாக நிறுவனமாக இருந்த போது அதிலிருந்த இலங்கை தமிழ் விமானியை சிங்கப்பூர் அரசிடமிருந்து வேண்டி பெற்றுக் கொண்டது இலங்கை, அது போன்ற ஒரு முன்னோடி விமான நிறுவனத்தை இலங்கையில் நிறுவுவதே அதன் நோக்கம். சிங்கப்பூர் அரசு ஆலோசனைகளும் ஆதரவும் தருவதாக சொன்னபோது தனி ஒரு விமான கப்டனை வைத்து விமான நிறுவனத்தையே கட்டி எழுப்பலாம் என்று கனவு கண்டார் இலங்கை தலைவர். இப்படி தனது சுயசரிதையில் எழுதியிருக்கின்றார் முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ. இது குறித்து இலங்கை தரப்பில் ஒரு குறிப்புகளும் இல்லை.
இது தவிர சிவா பசுபதி என்பவர் சட்டமா அதிபராக இருந்திருக்கின்றார்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

