03-06-2005, 10:39 AM
சந்திரமுகி பாடல்கள்
சமீப காலங்களில் தப்பட்டைராயனாக அவதாரம் எடுத்திருக்கும் வித்யாசாகர் இசை என்பதால் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமலேதான் கேட்கத் தொடங்கினேன். வித்யாசாகர் மிகத்திறமையான இசையமைப்பாளர்தான். வித்தியாசமாகவும் சிறப்பாகவும் பல படங்களில் பாடல்களும் பின்னணி இசையும் தந்திருந்தாலும் (உதாரணம் அன்பே சிவம்) இப்போதெல்லாம் வித்யாசாகர் பெயரைக் கேட்டாலே பயமாக இருக்கிறது. 'டண்டணக்கர டண்டணக்கர' என்று சராகமாகத் தொடங்கி காதுகளைப் பிளந்துபோடாமல் விடமாட்டேன் என்று படுத்துகிறார். சில காலத்துக்கு அவர் விஜய் படங்களுக்கு இசையமைக்காமல் இருந்தால் தேவலை. உருப்பட வழியுண்டு.
சந்திரமுகி அந்த வரிசையில் முழுமையாகச் சேரவில்லை என்பது நல்ல சேதி. 'டண்டணக்கர' component இருக்கிறது. ஆனால் ஒரு பாடல்தான் ('அண்ணனோட பாட்டு'). மற்றபடி மெலடி என்று கணக்கு சொல்லத்தக்க வகையில் நான்கு பாடல்கள்! இன்றைய தமிழ் சினிமா நிலைமையில் இதுவே ஒரு ஆச்சரியமான விஷயம்.
தேவுடா தேவுடா என்று தலைவரின் ஒப்பனிங் சாங். கற்பூரம், ஆரத்தி சாமான்களுக்கு வேலைவைக்கும் நேரம். எனவே, அதற்கேற்ப தலையின் சூப்பர் சல்யூட், ட்ரேட்மார்க் சிரிப்பு, சமுதாய சிந்தனை வரிகள், நல்ல பளிச்சென்ற வெயிலில் அவுட்டோரில் பெருங்கூட்டம் புடைசூழ தலைவர் வேகமாக நடந்து வருவது, தாவணி (அப்படி ஒரு ஆடை உண்டு, நினைவிருக்கிறதா?!) உடுத்தி ஆடும் பெண்கள், ஏழைத் தொழிலாளியைக் கட்டியணைக்கும் தலைவர் என்று அத்தனைக்கும் ஸ்கோப் உள்ள பாடல். அத்தனையும் எதிர்பார்க்கிறேன். இதுகூட இல்லையென்றால் என்ன தலைவர் படம்? பாபா போல் தப்புத்தப்பாக யோசிக்காமல் ஒழுங்காக மன்னன், அண்ணாமலை, பாட்ஷா, படையப்பா மாதிரி படமெடுத்தால் ஒரு வருடம் ஓடும். கியாரண்டி. இன்னொரு விஷயம். இந்தப் பாடலைப் பாடியிருப்பது எஸ்.பி.பி. தலைவரின் ஓப்பனிங் பாடலை இவர் பாடுவது ஒரு சென்டிமெண்ட். அதை உடைத்ததால்தான் (ஷங்கர் மகாதேவன் - பாபா) போன படம் ஊத்தியது என்று ஒரு எண்ணம் உண்டு. இந்த முறை எதிலும் கோட்டை விடுவதில்லை என்று முடிவோடு இருக்கிறார் வாசு. பாம்பு சீன், அம்மா ச்£ன் எல்லாம் எதிர்பார்க்கலாம்.
வரவர ஆஷா போஸ்லே, உதித் நாராயண், சாத்னா சர்கம் இவர்களெல்லாம் தமிழ் பாடக்கேட்டாலே அவர்கள் வாயில் சல்ப்யூரிக் அமிலம் ஊற்றவேண்டும் போல ஆசை வருகிறது. நம்மவர்களிடம் இல்லாமல் இவர்களிடம் என்ன இழவு இருக்கிறது என்று திரும்பத்திரும்ப இவர்கள் மேல் விழுகிறார்கள்? உதித், சாத்னா இருவரும் கிட்டத்தட்ட இப்போது வருகிற எல்லா தமிழ்ப்படங்களிலும் பாடுகின்றனர். ஆஷா எவ்வளவோ காலமாகத் தமிழில் பாடுகிறார். கொஞ்சம் சிரத்தை எடுத்து தமிழ் உச்சரிக்கக் கற்றுக்கொண்டால் குறைந்தா போய்விடுவார்கள்? அதுசரி. எ·ப். எம்மில் சுத்தத் தமிழச்சிகளே "நிகச்சியை இணாயிந்து வழங்குவவர்கள்" என்று தமிழ் பினாத்தும்போது இவர்களை எங்கே போய்ச் சொல்வது?
ஆஷா இந்தப்படத்தில் 'கொஞ்ச நேரம்' என்ற பாடல் பாடியிருக்கிறார். உடன் பாடுவது மது பாலகிருஷ்ணன் (பிதாமகன் 'பிறையே' புகழ்). அழகான மெலடி. இதமாக இருக்கிறது. தலைவர் படமாக இருந்தாலும் தம்மடிக்கப் போக வேண்டாமா? அதற்கேற்ற பாடல்.
"அத்திந்தோம்" என்று தொடங்கும் பாடல் எஸ்.பி.பி. குரலில் இனிமையாக இருக்கிறது. ரொம்ப நாள் கழித்து எஸ்.பி.பி இரண்டு பாடல்கள் பாடியிருக்கிறார். இவரிடம் தமிழ் இசையமைப்பாளர்களுக்கு என்ன பிரச்னை? இவர் பாட மறுக்கிறாரா, அல்லது போரடித்துவிட்டது என்று இவரை ஒதுக்கிவிட்டார்களா? போரடிக்கும் குரலா அது!
"கொக்கு பறபற கோழி பறபற" என்றபடி ஒரு ஜாலியான பாடல். 'ரா ரா' என்று ஒரு தெலுங்கு கர்நாடக சங்கீதம் இருக்கிறது. கேட்க நன்றாக இருக்கிறது.
பாடல்களை ஒரு முறை கேட்டிருக்கிறேன். சந்திரமுகி பரவாயில்லை. தலைவர் படத்துக்கென்று ஸ்பெஷலாக ஏதுமில்லை. ஆனால் குப்பையும் இல்லை. நான்கைந்து முறை கேட்டால் பிடித்துப்போய், நான்கைந்து மாதங்களுக்குப் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து, பிறகு காணாமற்போகும் வரிசையில் சேரப்போகும் பாடல்களைக் கேட்க ராகா இணையத்தளத்திற்குச் செல்லுங்கள் (இத்தளத்திலுள்ள பாடல்கள் அனுமதி பெற்று வெளியிடப்படுபவை என்று கேள்வி).
Shankar

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>