03-05-2005, 08:41 PM
மட்டக்களப்பில் மூன்று துப்பாக்கி சூட்டு சம்பவங்கள், இருவர் பலி
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட 3 வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின்போது இருவர்கொல்லப்பட்டுள்ளார்கள்;மேலும் இருவர் காயமடைந்துள்ளார்கள்.
கொல்லப்பட்டவர்களில் ஒருவர் விடுதலைப் புலிப் போராளி என்றும் அடுத்தவர் கருணா அணியுடன் தொடர்புடையவர் என்றும் தகவல்கள் மூலம் அறியப்பெறுகிறோம்.
இன்று முற்பகல் வாகரைப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுபாட்டிற்குட்பட்ட கிரிமிச்சையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவமொன்றிலேயே குறிப்பிட்ட விடுதலைப் புலிப் போராளி கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் மற்றுமொரு போராளி காயமடைந்துள்ளார் என்றும், இனந்தெரியாத நபர்கள் பதுங்கியிருந்து இவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
வந்தாறுமுலை, களுவன்கேனி வீதியில் இன்று நன்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது.இந்த சம்பவத்தில் வந்தாறுமுலையச் சேரந்த 32 வயதுடைய வேலுப்பிள்ளை புலேந்திரன் என்பவர் கொல்லப்பட்டுள்ளார்.
அநாமோதய தொலைபேசி தகவலொன்றின் பேரில், குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று, சடலத்தை தாம் கண்டெடுத்தாக இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஏறாவூர் பொலிசார் கூறுகின்றார்கள்.
இந் நபர் கருணா அணியுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தார் என்று தமது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாகக் கூறும் பொலிசார், கொலையாளி இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று கூறுகின்றனர்.
மட்டக்களப்பில் துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் போலீசார் விசாரணை
இன்று முற்பகல் மட்டக்களப்பு நகரில் இடம் பெற்ற 3 வது துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்தவர் புளொட் அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினரான 28 வயதுடைய கந்தையா கனேசலிங்கம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு நகருக்கு வந்து சைக்கிளில் அலுவலகத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த சமயம் வீதியோரம் பதுங்கியிருந்த நபரொருவர் இவரது தலையில் கைத்துப்பாக்கியினால் சுட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார்
மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், மேலதிக சிகிச்சைக்காக ஹெலிகொப்டர் மூலம் கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டு, தற்போது தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமது உறுப்பினர் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டு சமபவத்திற்கு விடுதலைப் புலிகள்தான் பொறுப்பு என புளொட் அமைப்பு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு நகர அரசியல் துறை பொறுப்பாளர் அன்புமாறன் இதனை நிராகரித்தார். அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதியில் இடம்பெற்று வரும் இப்படியான சம்பவங்களுக்கு அரசாங்கம்தான் பொறுப்பேற்கவேண்டும் என்று அவர் கூறினார்.
BBC Tamil News

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>