08-30-2003, 06:48 AM
ஆகஸ்டு 30, 2003
[size=18]மதுரை பாண்டி கோவிலில் தடையை மீறி 'ஜாம் ஜாமென' நடந்த கிடா வெட்டு
மதுரை:
கோவில்களில் ஆடு, கோழி பலியிடக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா தடை விதித்துள்ள போதிலும், மதுரையில் புகழ் பெற்ற பாண்டி கோவிலில் நேற்று ஏராளமான ஆடுகளும், கோழிகளும் பலி கொடுக்கப்பட்டன.
கோவில்களில் ஆடுகள், கோழிகள் மற்றும் மாடுகள் போன்றவற்றை பலியிடுதல் என்ற பெயரில் படுகொலை செய்யக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வரின் உத்தரவு எந்தளவுக்கு 'வரவேற்கப்படுகிறது' என்பதை மதுரை பாண்டி கோவிலில் பார்த்தபோது புரிந்து கொள்ள முடிந்தது. வெள்ளிக்கிழமை என்பதால் அங்கு வழக்கம் போலவே நேற்று ஏராளமான ஆடுகளும், கோழிகளும் பலி கொடுக்கப்பட்டன.
மதுரைசிவகங்கை சாலையில் உள்ள பாண்டி முனீஸ்வரர் கோவில். மதுரைப் பகுதி மக்களிடையே மிகவும் பிரபலமானது இந்தக் கோவில். வாரந்தோறும் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் இங்கு கிடா வெட்டுவதும், கோழி பலியிடுவதும் வழக்கமாக நடக்கும்.
மதுரை மக்களும், அதைச் சுற்றியுள்ள கிராம மக்களும் வண்டி கட்டிக் கொண்டு அங்கு போய் கிடா வெட்டி, பொங்கல் வைத்து முனீஸ்வரனை வருகின்றனர்.
பாணடி கோவில் பக்தர்கள் முதல்வரின் உத்தரவை கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை.
நேற்றும் ஆடுகளும், கோழிகளும் வரிசையாக வெட்டப்பட்டுக் கொண்டேயிருந்தன. கிட்டத்தட்ட 120 ஆடுகளுக்கும் மேலாக மாலை வரை வெட்டப்பட்டதாக ஒரு ஆடு வெட்டும் பெண்மணி நம்மிடம் தெரிவித்தார்.
ஆடுகள், கோழிகளை வெட்டுவதை போலீஸாரும் கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தடுத்தால் பெரும் கலவரம் வெடிக்கலாம் என்பதால் போலீசார் அந்தப் பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை.
இருப்பினும் கோவில் நிலத்தில் ஒரு ஆடு கூட வெட்டப்படவில்லை என்று கோவில் நிர்வாகிகள் கூறுகின்றனர்.
பாண்டி கோவில் போலவே மடப்புரம் காளியம்மன் கோவில், அழகர் கோவில் பதினெட்டாம்படி கருப்பு கோவில், தாயமங்கலம் மாரியம்மன் கோவில் ஆகியவற்றிலும் கிடா வெட்டும், கோழி வெட்டும் நேற்று வழக்கம் போலவே நடந்தன.
நன்றி தற்ஸ்தமிழ்