![]() |
|
வேள்வி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: வேள்வி (/showthread.php?tid=8187) |
வேள்வி - Mathivathanan - 08-29-2003 கோவில்களில் ஆடு, மாடு, கோழிகளை பலியிட தடை தமிழகத்தில் உள்ள கோவில்களிலும், கோவில்களுக்கு அருகாமையிலும் தெய்வத்திற்குப் பலியிடுதல் என்ற பெயரில் ஆடுகள், மாடுகள், கோழிகளை கொல்லக் கூடாது என்றும், மீறி செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறைக் கண்காணிப்பாளர்கள், டிஐஜிக்கள் ஆகியோருக்கு முதல்வர் ஜெயலலிதா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், கோவில்கள் மற்றும் கோவில்களைச் சுற்றிலும் ஆடுகள், மாடுகள், கோழிகள் ஆகியவற்றை பலியிடக் கூடாது என்று தமிழ்நாடு விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டம் 1950 மற்றும் திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த செயல்கள் தொடர்ந்து கொண்டுள்ளன. இனிமேல் கோவில்களில் தெய்வத்திற்கு பலியிடுதல் என்ற பெயரில் ஆடுகள் மற்றும் பறவைகளை படுகொலை செய்யக் கூடாது. அதுபோன்ற செயல்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இதனை செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா. சமீபத்தில் பசுவதைத் தடுப்புச் சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இதை திமுக எதிர்த்தது. அதே போல பசுவதைத் தடுப்புச் சட்டத்தை ஆதரிக்க மாட்டோம் என மதிமுகவும் இன்று அறிவித்துவிட்டது. எந்த விலங்கையும் கொல்லக் கூடாது என்ற சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே ஆதரிப்போம், பசுவை மட்டும் வதை செய்வதைத் தடுக்கும் சட்டத்தை ஆதரிக்க மாட்டோம் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அப்படிப்பட்ட சட்டம் கொண்டு வந்தால், உண்மையிலேயே திமுக ஆதரிக்குமா என்று பா.ஜ.கவும் கேள்வி எழுப்பியுள்ளது. ஒரு பக்கம் இந்த மோதல் நடந்து கொண்டுள்ள நிலையில் தான் கோவில்களில் பலியிடும் செயல்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தடை விதித்துள்ளார். வழக்கமாக பெரிய கோவில்கள் தவிர்த்துஇதற்கு இப்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. http://www.thatstamil.com/news/2003/08/28/temple.html - veera - 08-29-2003 அபாரமான முயற்சி. ஆனால் எப்போது மனித வதையை நிறுத்துவார்களோ தெரியாது. உயிரோடு இருக்கும் வரை மழைதரும் ஆகாயம் முதல் அப்பாவி ஜீவன்களைக் காப்பாற்றுவது வரை தனது பெயரை முத்திரை குத்த நினைக்கிறார்கள்.ஆனால் பாவம் இடையிலே மனிதன் என்ற ஒரு இனத்தை மறந்தே போகிறார்கள.. - Kanani - 08-29-2003 அம்மா இடைக்கிடை நல்ல வேலைகளும் செய்யிறா. - kuruvikal - 08-29-2003 வி ஜே பி யோட கூட்டணி வைக்க மதப்பற்றைக் காட்டா வேணாமோ....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 08-29-2003 வி ஜே பி யோட கூட்டணி வைக்க மதப்பற்றைக் காட்டா வேணாமோ....! திருத்தம்... காட்டா..காட்ட - Mathivathanan - 08-29-2003 kuruvikal Wrote:வி ஜே பி யோட கூட்டணி வைக்க மதப்பற்றைக்கூட்டணிப் பட்டியல் பலதும் வச்சிருக்கிறியள்போலை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Kanani - 08-29-2003 அம்மா எப்பவும் கூட்டாத்தானே நிற்கிறா - Mullai - 08-30-2003 ஆகஸ்டு 30, 2003 [size=18]மதுரை பாண்டி கோவிலில் தடையை மீறி 'ஜாம் ஜாமென' நடந்த கிடா வெட்டு மதுரை: கோவில்களில் ஆடு, கோழி பலியிடக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா தடை விதித்துள்ள போதிலும், மதுரையில் புகழ் பெற்ற பாண்டி கோவிலில் நேற்று ஏராளமான ஆடுகளும், கோழிகளும் பலி கொடுக்கப்பட்டன. கோவில்களில் ஆடுகள், கோழிகள் மற்றும் மாடுகள் போன்றவற்றை பலியிடுதல் என்ற பெயரில் படுகொலை செய்யக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரின் உத்தரவு எந்தளவுக்கு 'வரவேற்கப்படுகிறது' என்பதை மதுரை பாண்டி கோவிலில் பார்த்தபோது புரிந்து கொள்ள முடிந்தது. வெள்ளிக்கிழமை என்பதால் அங்கு வழக்கம் போலவே நேற்று ஏராளமான ஆடுகளும், கோழிகளும் பலி கொடுக்கப்பட்டன. மதுரைசிவகங்கை சாலையில் உள்ள பாண்டி முனீஸ்வரர் கோவில். மதுரைப் பகுதி மக்களிடையே மிகவும் பிரபலமானது இந்தக் கோவில். வாரந்தோறும் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் இங்கு கிடா வெட்டுவதும், கோழி பலியிடுவதும் வழக்கமாக நடக்கும். மதுரை மக்களும், அதைச் சுற்றியுள்ள கிராம மக்களும் வண்டி கட்டிக் கொண்டு அங்கு போய் கிடா வெட்டி, பொங்கல் வைத்து முனீஸ்வரனை வருகின்றனர். பாணடி கோவில் பக்தர்கள் முதல்வரின் உத்தரவை கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை. நேற்றும் ஆடுகளும், கோழிகளும் வரிசையாக வெட்டப்பட்டுக் கொண்டேயிருந்தன. கிட்டத்தட்ட 120 ஆடுகளுக்கும் மேலாக மாலை வரை வெட்டப்பட்டதாக ஒரு ஆடு வெட்டும் பெண்மணி நம்மிடம் தெரிவித்தார். ஆடுகள், கோழிகளை வெட்டுவதை போலீஸாரும் கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தடுத்தால் பெரும் கலவரம் வெடிக்கலாம் என்பதால் போலீசார் அந்தப் பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை. இருப்பினும் கோவில் நிலத்தில் ஒரு ஆடு கூட வெட்டப்படவில்லை என்று கோவில் நிர்வாகிகள் கூறுகின்றனர். பாண்டி கோவில் போலவே மடப்புரம் காளியம்மன் கோவில், அழகர் கோவில் பதினெட்டாம்படி கருப்பு கோவில், தாயமங்கலம் மாரியம்மன் கோவில் ஆகியவற்றிலும் கிடா வெட்டும், கோழி வெட்டும் நேற்று வழக்கம் போலவே நடந்தன. நன்றி தற்ஸ்தமிழ் - kuruvikal - 08-30-2003 பாட்டி தற்ஸ் தமிழில ஒரு மேச்சல் போட்டியள் போல...எங்க கன நாளாய்க் காணேல்ல...எங்க போனனியள்...?! - Mathivathanan - 08-30-2003 அரசியல் சூடுபிடிக்கிறதுபோலும்.. பாவம் பலிக்கடாக்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Kanani - 08-30-2003 100 வருடம் போனாலும் தமிழ்நாடு தமிழ்நாடுதான் சந்தேகமில்லை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathivathanan - 08-30-2003 Kanani Wrote:100 வருடம் போனாலும் தமிழ்நாடு தமிழ்நாடுதான் சந்தேகமில்லைஏன்ராப்பா.. தமிழ்.. நாடு ஆயிருக்கிறது நல்லதுதானே.. உங்களுக்கு அது விருப்பமில்லையோ.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|