08-29-2003, 12:57 PM
வீரா அவர்களே உங்கள் ஆதங்கம் புரிகின்றது
கோவில்கள் எதற்கு?
கோவில்களின் முக்கிய நோக்கமே ஊரிலுள்ளோரைக் கூட்டி அவர்களுக்கு நற்கருத்துக்களைப் போதித்து பாமரனை பண்பட்டவனாகவும் பண்பட்டவனை தெய்வமாகவும் உயர்த்துவதாகும். இதற்காக எந்தவித சுயநலம், பணம், புகழ் போன்றவற்றில் கவனம் செலுத்தாமல் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என செயற்படவே மதகுருமார்களை எமது சமுக அமைப்பில் உருவாக்கினோம்.
கடவுளை மனமொருமித்து வழிபட புனிதமான சூழலும், மனத்தை ஒருமுகப்படுத்த அமைதியான சூழலும் தேவை. இதற்காகவே கோவில்களை புனிதமாகவும் அமைதியாகவுமுள்ள ஒரு கட்டடமாக அமைக்கிறார்கள். மக்கள் விக்கிரகங்களை கண்ணால் பார்த்து பூசையில் சொல்லப்படும் மந்திரங்களை செவியால் கேட்டு, ஐம்புலன்களையும் அடக்கி, இறைவழிபாட்டில் ஒன்றறக்கலப்பதே பூசையின் நோக்கம்.
வீட்டிலேயே இவ்வாறான சூழலை அமைக்க முடியுமானால் வீட்டிலேயே நீங்கள் இறைவனை வழிபடலாம்.
இப்படியான கேவிலில் மக்களுக்கு விளங்காப்பாசையில் பூசை செய்தால் மக்கள் எப்படி மனமொருமித்து கடவுளை வழிபடுவார்?. பூசை நடக்கும்போது கதைக்கக்கூடாது சத்தம்போடக் கூடாது என எம்மவரைப் பயமுறுத்தி வைத்திருத்தல் எதற்காக? உண்மையில் பூசை நடக்கும்போது குருமார் உச்சரிக்கும் மந்திரங்களின் அர்த்தம் விளங்கிக்கொள்பவர்கள் அதிலே லயித்து பூசையில் ஒன்றிப் போவர்....இதுதான் தேவாலயத்தில் தமிழில் எங்கள் பிதா பூசை செய்யும்போது எல்லாரும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறோம்..கோவிலில் அது விளங்காத நிலையில் எவ்வாறு அதில் லயித்து மனத்தை ஒருமுகப்படுத்தி வழிபடமுடியும்? மாறாக வேறு சிந்தனைகளும் கதைக்க முற்படுவதும் மக்கள் இயல்பு...அதை பூசை நடக்கும்போது கதைக்கக்கூடாது என பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள்...
சுயநலமின்றி அனைவருக்கும் விளங்கும் தமிழில் பூசை செய்யுங்கள்