03-04-2005, 04:54 AM
stalin Wrote:கமல் திரைப்படத்தின் தலைப்பினை மாற்றட்டும். பின்னர் தமிழ் மக்கள் எல்லோரும் அவரிம் திரைப்படம் விரும்பினால் பார்ப்பார்கள். அதனைவிடுத்து ஜெயலலிதாவின் முதுகுக்கு பின்னால் நின்று தமிழர்களுக்கு பூச்சாண்டி காட்ட வேண்டாம்.
_________________
நான் என்னை இன்றும் திருத்திக்கொள்கின்றேன், நேற்றய தவறிற்காக,
நாளய நேர்மைக்காக.
அன்புடன் மதுரன்
இப்ப திருமாவளவன் ஜெயலிலாதா பின்னாலாயாம் அரசியல்வாதி சந்தர்ப்பவாதி கலைஞன் கலைஞன்தான்-ஸ்டாலின்
அன்பான ச்டலின் அவர்களுக்கு. தாங்கள் திருமாவளவன் ஜெயலலிதாவின் முதுகிற்கு பின்னால் என எங்கு படித்தீர்கள். நீங்கள் சொல்லும் விடயம் சில வேளை அது தமிழ் (தற்ஸ் தமிழ்) என்னும் இணய ஊடகத்தில் படித்தேன். அத் தகவலினை ஆதாரம் காட்டி, நான் சொல்ல வருவதை முடிந்தால் புரிந்துகொள்ளுங்கள். அதாவது திருமாவளவன் என்னும் விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தமிழ்நாட்டின் முதல்வரிடம் சுனாமிநிதிக்கென நன்கொடை வளங்கினார் என்பதுவே செய்தி. இந்த செய்தியினை நீங்கள் எவ்வாறு புரிந்து என்ன கற்பனை பண்ணுகின்றீர்களோ எனக்கு தெரியாது. விடுதலைச்சிறுத்தைகள் என்பது தனி அமைப்பு. தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் என்பது தனி அமைப்பு. திருமாவளவன் தமிழ்நாட்டு மக்களின் துன்பத்தை துடைப்பதற்கு தமிழ்நாட்டின் முதல்வரை சந்திப்பதற்கும். தமிழினையே எதிற்கின்ற கமலகாசன் போன்றவர்கள் ஜெயலலிதாவின் தமிழ்மறுப்பினை புகழ்ந்துபாடும் செயலுக்கும் வேறுபாடு காணாத உங்களிடம், எந்தவகையிலான புரிதலினை எதிர்பார்க்கமுடியும்?
மொத்தத்தில் கமலுக்காக நீங்களும் வரிந்துகட்டுவதை என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது. கமல் என்னும் சாமானியனுக்காக தமிழ்த்தாயினை பளித்து இளிக்குன்ற மூடர்கள் காலில் நீங்கள் விளலாமோ?

