03-04-2005, 04:32 AM
Quote:ஒரு பாடலை ஏன் பிடிக்கின்றதுஇப்பிடிக்கின்றது தான் கவனத்தை ஈர்ப்பது.
அந்த பாடகரின் குரல் வளம்
அந்த பாடலின் வரிகள்
அந்த பாடலின் இசை
இந்த மூன்றும் ஒருமித்து நன்றாக இருந்தால் தான் பாடல் என் கவனத்தை ஈர்க்கும். அதை விடுத்து பாடகர் யாரென்று தெரிந்தோ, நடிகை நடிகர் யாரென்று தெரிந்தோ, இசையமைப்பாளர் யார் என்று தெரிந்தோ, எனக்கு பாடல்கள் கவனத்தை ஈர்ப்பதில்லை. ஒரு பாடலை அந்த பாடல் பற்றி தெரியாமல் முதல் முதல் எங்கோ கேட்கிறீர்கள் என்று வைத்தால் .. அங்கு அந்த பாடலின் இசை பாடகர் குரல், பாடல் வரிகள் மாத்திரம் தான் உங்களுக்கு தெரியும். அந்த நேரத்தில் அந்த இசையுடன் அந்த பாடகரின் குரலில் அந்த வரிகள் ஒலிக்கும் போது தான் எமக்கு அட இப்படி ஒரு பாட்டு இருக்கா நல்லா இருக்கே ... எந்த படமுங்கோ? யார் பாடினது? யார் இசை? யார் பாடலாசிரியர்? ஓ..ஓ அப்படியா.. நல்லா இருக்கு இது வரை நான் கேட்கவில்லை. இப்படி தான் கூடுதலானவர்கள் விழிப்பதை நான் கண்டிருக்கிறேன் .. ஏன் நான் இப்படி தான் கேட்பேன். இதில் மேற் கூறிய மூன்றும் இருந்தால் தான் அப்பாடல் என் கவனத்தை ஈர்க்கும் [ உங்களின் சொல்லில் ] என் சொல்லில் எனக்கு பிடிக்கும்]
[b][size=18]

